இனப் போராட்டத்தின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் மீண்டும் வந்து நிற்கின்றோம். 2009ம் ஆண்டு நாம் கடந்து வந்த பாதையை நினைத்து அனைவரும் மௌனித்தவர்களாக இருந்த நிலையையும், நம்மை நாம் எடை போட்டுப் பார்க்க வேண்டும் என்ற முக்கியமான கருத்தை விவாதப் பொருளாகக் கொண்டதே இக் கட்டுரையாகும்.
நம்மை நாம் எடை போட்டுப் பார்க்காமல் விடுவது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். 2009மே 18க்கு முன்னர் ஒன்றாகச் செயற்பட்ட நாம் யுத்தத்தில் ஏற்பட்ட பெரிய பின்னடைவின் கீழ் பல கூறுகளாகப் பிரிந்தோம்.
நம்பிக்கை மலையைக் கூட அசைக்கும் என்ற விவிலியத்தின் வாசகத்தை மறந்தோம்.
“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
வருந்தக் கூலி தரும்” என்ற குறளின் உட்கருத்தை அறியாமல் இருந்தோம்.
வருந்தக் கூலி தரும்” என்ற குறளின் உட்கருத்தை அறியாமல் இருந்தோம்.
முள்ளிவாய்க்கால் போர்
சுதந்திரப் போராட்டத்தில் விடுதலை பெற்ற மற்றைய இனங்களின் பெரு அழிவைப் போன்ற ஒரு அழிவைச் சந்தித்தோம்.. நம்மை எல்லாம் வழி நடத்திய மாபெரும் ஆற்றல் படைத்தவர்களை, மாவீரன் நெப்போலியன் போன்றவர்களையும், பல சிந்தனைவாதிகளை, தளபதிகளை இழந்து பாரிய பின்னடைவை சந்தித்தோம்.
தென்னாபிரிக்காவின் விடுதலையை வென்றெடுக்க நெல்சன் மண்டேலா எவ்வாறு துன்பமயத்தில் வாழ்ந்து ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொடுத்து சுதந்திரத்தை வென்றெடுத்தாரோ அதே போன்ற ஒரு துன்பியல் நிகழ்வாக எமது வரலாறு நடந்தது.
சுதந்திரத்திற்காக அதனை நேசித்த மக்களும். அந்த மக்களால் நேசிக்கப்பட்ட புலி இயக்க வீரர்களும் தம் உயிரையே அர்ப்பணித்தனர்.
வல்லரசுகளின் தன்நலம்
உலக வல்லரசுகளின் திட்டங்களில் ஏமாந்து விடாது தமிழினத்தைக் காப்பாற்றிய பெருமை அதனை வழி நடத்திய தலைமைக்கே உண்டு. நிலமும், நீரும் காற்றும் போற்றிய எம் தலைவனின் சிந்தனைகள் இன்று நடைமுறையில் வல்லரசுகளை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை அழிப்பதற்காக சீனாவுடன் ஐக்கியமாக வேண்டிய நிலை மகாவம்ச சிந்தனையாளர்களுக்கு வந்தது.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தினை நசுக்குவதற்காக சீனாவின் உண்மையான நண்பனுக்கு துணை போனார்கள். தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு தீர்க்க தரிசனமற்ற இந்திய வெளியுறவு கொள்ளை ஒரு காரணமாக இன்று பேசும் பொருளாக வியாபித்துள்ளது. இந்திய ரெனெலிகள் அனைத்தும் வெளியுறவுக் கொள்கையையும், ஊழலையும் பற்றி தினம் தினம் விவாதிக்கின்றனர்.
சீனா அகலமாக கால் பதித்து பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்த பின்னரும் இந்திய அரசு தமிழர்களின் பிரச்சினையில் மெத்தனம் காட்டியது.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி
தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை அழித்து இனப்படுகொலையில் பங்கு கொண்ட காங்கிரஸ்-திமுக ஆட்சிக்கு மக்கள் 2014 மே மாதம் சரியான பாடம் படிப்பித்து, இந்தியாவின் எதிர்காலத்தை வல்லலரசுக் கனவை நனவாக்க புதிய தலைமையை ஏற்படுத்திவிட்டனர்.
புதிய இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் பதவியேற்பில் நான்கு பெரிய மாநிலத் தலைவர்கள் ராசபக்சவின் வருகையையும் காரணம் காட்டி புறக்கணித்தனர். மோடி அவர்களின் ஆட்சித் திறமைமையை கணிக்கும பொருட்டு நூறு நாட்கள் அல்லது 6 மாதம் சந்தர்ப்பம் கொடுப்பது உலக நடை முறைகளில் ஒன்றாகும்.
பதவியேற்ற 10 நாட்களுக்குள் இந்திய மீனவர்கள் 90 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்வாதாரங்கள் அபகரிக்கப்பட்டது.
இந்திய உபகண்டத்திற்கு இலங்கை விட்ட சவால் எனவும் இதனை எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழக மீனவர்கள் 600 பேர் கொலை செய்யப்பட்டமையானது. புதிதாகப் பரதமர் பதவியேற்ற 10 நாட்களுக்குள் பாகிஸ்தான் செய்யாத ஒரு நெருக்கடியை சுண்டக்காய் நாடான இலங்கை செய்து முடித்து விட்டது என்றால் வெளிநாட்டுக் கொள்கையின் தோல்வியின் ஒரு சிறு அடையாளமாக நாம் இதைக் கருதவேண்டும்.
காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் விரும்பியவாறு ராசபக்சவைக் கொண்டு மோடிக்கு நெருக்கடியை கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இலங்கைக் எதிரான அமெரிக்கத் தீர்மானம்
இனப்படுகொலை நடந்து 5 வருடங்களின் பின்பு, ஐ.நா வின் மனித உரிமைகள் பேரவைிய் விசாரணைக் குழு முன்னாள் நியூசிலாந்து நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்கா அரசினால் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானத்தினை பிரிட்டனும் மற்றும் பல நாடுகளும் வரவேற்றுள்ளன. அமெரிக்காவில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், உலகத் தமிழர் பேரமைப்பினதும் அயராத முயற்சியால் ராசபக்ச மீது விசாரணை நிச்சயம் தொடங்கப் போகின்றது.
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் தொடங்கப்பட்டுள்ள விசாரணையானது வளைந்து, சுழிந்து நெழிந்து இனப்படுகொலையாளர்களை நிச்சயம் கூண்டிலேற்றும் நிகழ்ச்சியின் ஆரம்பமே இந்த விசாரணக் குழு என்பதை தமிழ் மக்கள் அரசியல் ஞானத்துடன் வரவேற்று, ஒன்று பட்டுப் போராட வேண்டும் தமிழர்களை பல கூறுகளாகப் பிரிக்க இந்தியாவும், சிறீலங்கா அரசும் முயலும் இந்நேரத்தில் தமிழர்கள் அனைவரும் விழிப்பாக இருந்து அமெரிக்கா அரசினால் எமது மக்களுக்கு கிடைக்கும் நீதிக்கு ஒருமித்த குரலில் ஆதரவளிப்போம்.
போர்க்குற்ற விசாரணையை இனப்படுகொலையாக மாற்ற வேண்டிய சக்தி யாரிடம் இருக்கின்றதென்றால் ஒன்றுபட்டுவிட்ட வெளிநாடு வாழ் தமிழர்களிடமேயே இருக்கின்றது.
இதனை நாம் புரிந்து கொண்டால் இதுவே வெற்றியின் முதற்படியாகும்.. ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸ்கட்சிக்கும்,தி.முக.வுக்கும் தமிழகத் தமிழர் ஒன்றுபட்டு நல்ல அடி கொடுத்ததை வரவேற்ற நாம் சிறு பேதங்களை மறந்து இலங்கை அரசிற்கெதிராக பொருளாதாரத் தடையை கொண்டு வருவதில் நிச்சயம் வெற்றி கொள்ள முடியும். அதற்காக ஒன்றுபட்டு இன்றே செயற்படுவோம்.
http://www.tamilwin.com/show-RUmsyGSVLamv2.html
Geen opmerkingen:
Een reactie posten