தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 juni 2014

ஐநா விசாரணைக்குழுவில் இருவர் நீக்கம்! - விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கையை நவநீதம்பிள்ளை கோரவுள்ளார்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 10 ஆம் திகதி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு காரணமாகவே இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரிகளான ஜெப்ரி ரொபர்ட்சன், டெனிஸ் ஹெலிடே ஆகியோரின் பெயர்களே நீக்கப்பட்டுள்ளன.
இவர்கள் புலம்பெயர் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்ததை அடுத்தே இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த புலிகளின் தலைவர் ஒருவருக்காக இரங்கல் செய்தியை வெளியிட்டவர் என தெரியவந்துள்ளது என்றும் திவயின கூறியுள்ளது.
கொபி அனான் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் மறைக்கு இரங்கல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 26 வது மனித உரிமை கூட்டத் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் இலங்கை சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்த பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே போர் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட உள்ள குழுவிற்கு சாட்சியங்களை வழங்க புலம்பெயர் புலிகள் 21 சாட்சியாளர்களை தயார்ப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது எனவும் திவயின மேலும் குறிப்பிட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணைக்காக இலங்கையின் ஒத்துழைப்பை நவநீதம்பிள்ளை கோரவுள்ளார்
இலங்கையின் போர் தொடர்பில் தமது அலுவலகத்தின் ஊடாக நடத்தப்படவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகளி;ன் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரிவுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் சபையின் 26வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது நவநீதம்பிள்ளை அந்த கோரிக்கையை விடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளன.
எனினும் போரினால் பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்தநிலையில் தமது அலுவலகம் இலங்கையின் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தவுள்ளது. இதற்கு திறமைவாய்ந்த நிபுணர்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
எனவே இந்தவேளையில் இலங்கை அரசாங்கம் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆற்றவுள்ள ஆரம்ப நிகழ்வுக்காக தயாரித்துள்ள உரையில்; நவநீதம்பிள்ளை சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் நவநீதம்பிள்ளையின் விசாரணைக்கு இணங்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTbLZew4.html

Geen opmerkingen:

Een reactie posten