தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 juni 2014

உத்திர பிரதேசத்தின் கோர முகம்

உத்திரபிரதேச மாநிலத்தின் கோர முகம் கடந்த வாரம் அம்பலமாகி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்திரபிரதேசம், லக்னோவை தலைநகரமாக கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலங்கள் அமைந்துள்ளன.
பழங்காலத்து கோயில்களால் உலகையே திரும்பி பார்க்க வைத்த இம்மாநிலத்தின் உண்மையான முகம் சிறுமிகள் பலாத்காரம், பெண் நீதிபதி கற்பழிப்பு, தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் என தொடர்ச்சியாக அரங்கேறிய கோர சம்பவங்களால் சமீபத்தில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சிறுமிகள்
உத்திரபிரதேச மாநிலத்தில் உஸ்காய்த் பகுதியில் உள்ள காத்ரா கிராமத்தில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் இருவர் காம கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.
இந்த சம்பவமானது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த சம்பவத்தை எதிர்த்து கிராம மக்கள் மற்றும் சிறுமிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதி வேண்டாம் நீதி தான் வேண்டும்
கதறி அழுத பெற்றோர்களின் கண்ணீரை துடைப்பதற்காக சிறுமிகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டது,
ஆனால் பெற்றோரோ நிதியால் எங்கள் கண்ணீரை துடைக்க முடியாது, அப்படி துடைத்தாலும் அந்தக் கண்ணீரானது எங்கள் கண்களின் ஓரங்களில் வடுவாக நின்று கொண்டுதான் இருக்கும்,
எனவே எங்களுக்கு நீதி தான் வேண்டும் என்று நிதியை வாங்க மறுத்துவிட்டனர்.
மேலும் எங்கள் குழந்தைகள் தூக்கில் தொங்குவது போன்று அக்கயவர்களும் தூக்கி தொங்கவிடப்பட வேண்டும் என்ற கதறினர்.

தலைவர்களின் கண்டனம்
இந்த சம்பவமானது ஐநாவின் தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த குற்றம் தொடர்பாக விவரித்து கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை, இது ஒரு பயங்கர குற்றம் என்று ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று தன்னுடைய ஆறுதலை கூறியுள்ளார்.

அள்ளிவிடப்படும் கருத்துக்கள்
சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மோசின்கான், உத்தரபிரதேசம் ஒரு பெரிய மாநிலம். எனவே, இங்கு கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது சாதாரணம் என்று கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் உள்துறை மந்திரி பாபுலால் கவுர் கலால், கற்பழிப்பு சமூக குற்றம், நானும் தான் என்ன செய்ய முடியும்.
கற்பழிப்பதற்கு முன்னதாக யாரும் சொல்லிவிட்டு குற்றம் செய்வது இல்லை. குற்றம் தொடர்பாக யாரும் உடனடியாக புகார் அளிப்பதும் இல்லை.
இவ்வாறு இருக்கையில் என்ன செய்ய முடியும். பெண்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

கழிவறைகள் இல்லாததே காரணம்
உத்திரபிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது.
குறிப்பாக தலித் மக்களின் வீடுகளில் அறவே கிடையாது. இதனால் காலைக்கடன்களை பல பெண்கள் இரவில் கழிக்கவேண்டி உள்ளது.
இதற்காக, அவர்கள் தேடிச் செல்லும் இருட்டு மற்றும் ஒதுக்குப்புறங்கள் அவர்களின் பலி களமாகிவிடுகிறது என்று அக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.

என்னதான் தீர்வு
இந்த பலாத்கார சம்பவம் உலக நாடுகளில் என்னதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த மாதிரியான கொடூர சம்பவங்கள் கடலின் கரையை தொடுவதற்காக வந்து செல்லும் ஓயாத அலைகள் போன்று இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தில் எங்காவது ஒரு மூலையில் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது.
எங்கு சென்றாலும் பெண்களை சுட்டெரிக்கும் கொடூரர்களின் காமப்பெருமூச்சுகள் நின்று போகாத வரை இதற்கு தீர்வு என்பது ஒன்று கிடையாது.
http://www.newindianews.com/page.php?uttarpradesh

Geen opmerkingen:

Een reactie posten