தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

அமைதியாக வழிபாடுகளில் ஈடுபடுமாறு முஸ்லிம்களிடம் அரசு வேண்டுகோள்! கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு!



ஐ.நாவின் வெளியே நடக்கும் விசாரணையில் யாருக்கு ஆபத்து? விளக்குகிறார் பிரி. தமிழர் பேரவை உறுப்பினர் ராஜ்குமார்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 05:13.35 PM GMT ]
வெளியே நடக்கும் விசாரணையில் குறுகிய காலத்தில் பாரியளவு பங்களிப்பினை நாம் செய்தால் வெற்றி நிச்சயம், எமது ஒத்துளைப்பு பிரதானமானது என பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினரான ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் செயற்பாடு இன்றைய நாட்களில் பிரதானமானது. அதனைத் தடுக்க யாராலும் முடியாது. ஆனாலும் மிக குறுகிய நாட்களில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால், தமிழர்களாகிய நாம் தயார் நிலையில் இருப்பது காலத்தின் கட்டாயம் என லங்காசிறி வானொலியின் ஜெனிவாவில் உள்ள செய்தியாளரிடம், பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ராஜ்குமார் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahty.html
அமைதியாக வழிபாடுகளில் ஈடுபடுமாறு முஸ்லிம்களிடம் அரசு வேண்டுகோள்! கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு!
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 11:56.40 PM GMT ]
கொழும்பு நகர் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
அந்தந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இன, மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.  இவ்வாறான வதந்திகளைக் கேட்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.
எந்தவொரு முரண்பாட்டு நிலைமையும் ஏற்படாத வகையில் முஸ்லிம் பௌத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மத பிரார்த்தனைகள் இடம்பெறுவது வழக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சமாதானத்தை நிலைநாட்ட பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
அமைதியாக மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள்!-  முஸ்லிம் மக்களிடம் அரசு வேண்டுகோள்

நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க சில அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென முஸ்லிம் மக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அமைதியின்மையை தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட சில அமைப்புகள் தயாராகிக் கொண்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி சில அடிப்படைவாத குழுக்கள் மீண்டும் ஒரு மோதலை உருவாக்க முயன்று வருவதாக தெரியவருகிறது.
இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடப் போவதாக தகவல்களும் கிடைத்துள்ளன.
எனவே, முஸ்லிம் மக்கள் அனைவரும் வதந்திகளையோ அல்லது அடிப்படை வாதிகளின் தூண்டுதல்களுக்கோ ஆளாகாமல் மிக அமைதியாக தமது மதக் கடமைகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.
முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரிலுள்ள அமைப்பு ஒன்று உட்பட அடிப்படைவாத அமைப்புகள் சில துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும் பேஸ்புக் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றன.
இன முறுகல்கள், மோதல்களை ஏற்படுத்தக் கூடியவாறான கருத்துகளுக்கு பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் என்ற வகையில் முன்னுரிமை கொடுக்காமலும் அடிப்படைவாதிகளின் கருத்துக்களினால் நாட்டில் ஏற்படும் மோதல்களுக்கு பிரசாரம் செய்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaht1.html

Geen opmerkingen:

Een reactie posten