தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 november 2011

விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கே இந்தியா விரும்பியது : நோர்வே தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கே இந்தியா விரும்பியதாக நோர்வே தெரிவித்துள்ளது.
நோர்வேயின் சமாதான முயற்சிகள் குறித்து மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இந்திய மத்திய அரசாங்கம் புலிகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்கு உதவிகளை வழங்கியதாக மீளாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2004ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் புலி விரோத கொள்கைகளை பின்பற்றியது.
பல்வேறு நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென வெளிப்படையாக காட்டிக் கொண்ட போதிலும், புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எவ்வித அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை.
நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அதிகளவில் நட்புறவு கொண்டிருந்ததாக இந்தியா பல தடவைகள் விமர்சனம் செய்திருந்தது.
நேரடியாக போருக்கு உதவிளை வழங்காத போதிலும் இந்தியா புலனாய்வு மற்றும் விமான ராடார்களை வழங்கியது.
இந்தியாவின் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடே இலங்கையை போருக்கு அதிளவில் உந்தியது.
பொதுமக்கள் உயிரிழப்புகளை வரையறுக்குமாறு சில சந்தர்ப்பங்களில் இந்தியா கோரிய போதிலும் போருக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்தது.
இறுதிக் கட்டப் போரின் புலிப் போராளிகள் சரணடைவதனை இலங்கை அரசாங்கமோ அல்லது இந்தியாவோ விரும்பவில்லை என நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

vrijdag 11 november 2011

11 11 11 ஞாபகார்த்த நினைவு தினம்! பூநகரான்

[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 04:14.50 PM GMT ]

donderdag 10 november 2011

சீல் படையின் டீம்- 6: ஓசாமா பற்றிய ரகசியங்கள் கசிந்துள்ளது !

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அதிர்வு.

சொல்லொன்று செயலொன்று பக்கசார்பே அதிர்வு!!
இணையங்களே சேஷ்டை விடாதீர்கள்: இமெட்டவின் பாச்சல் !

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்களை புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு

[ வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011, 06:51.23 AM GMT ]

பாரிஸ் - லாசப்பலில் தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிப்பு ! மக்கள் கொந்தளிப்பு

பிரான்சில் தமிழர் வர்த்தக மையமான லாசப்பல் பகுதியில் புதன்கிழமை இனந்தெரியாத விரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன

பொட்டம்மான் படுகாயம்! அவலங்களின் அத்தியாயங்கள்! - பாகம்-6 – நிராஜ் டேவிட்

பக்கசார்ப்பில்லாமல் நிதானமாக எழுதினால் உண்மை வெளியாகும்,இங்கு 
தோல்வி என்பதன் பதம் என்ன?இந்திய ராணுவம் எதை தோற்றது?புலிகளால் என்ன வெல்லப்பட்டது என்றால் எதுவுமே இல்லை,இறுதி 
இழப்புக்கு ஆயத்தங்கள் செய்யபட்டன.இந்திய ராணுவத்துக்கு இழப்புக்கள்
 என்பதே மிக சரியான பதம்.அவை உலகில் மரியாதையை இழந்தன,
வீரர்களை இழந்தன.தந்திரத்தில் மட்டுமே அதுவும் இந்திய அரசியலே 
தோற்றது.ஆனால் புலிகள் இழந்தவை பல.இன்றும் இந்தியாவின் 
ஒத்துழைப்பின்மையால்தான் தமிழன் தடுமாறுகிறான்.அன்று எதிரியுடன் 
சேர்ந்து உதவிக்கு வந்து ஒப்பந்தப்படி கொடுக்காத ஆயுதங்களை பறிக்க வந்த
அமைதிப்படையுடன் நீதியற்று மோதியதால் இன்று தவளைகளாய் வயிறு 
வெடித்து சாகிறோம்,சாகையிலும் சத்தியத்தை மறந்து சொந்த துதிபாடி 
உழைக்கின்றோம்,வெட்டமாயில்லை!! தவறை ஒப்புக்கொள்பவன் மனிதன்.மன்னிப்பவன் தெய்வம்!!இவங்க மனிதராவதும் அவங்க தெய்வமாவதும் டேவிட் போன்ற சுயநலங்களால் நடக்காமலே இருக்கின்றது துர்ரதிஸ்ரமே!!!