தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 november 2010

தயவு செய்து மக்களை ஏமாற்றும் உங்கள் இழி செயலை நிறுத்துங்கள்.

தயவு செய்து அவர்களை கேவலப்படுத்தாதீர்கள் – ஆதவன்
 
முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஆதவனின் விசேட செய்தி வன்னயிலிருந்து!
தயவு செய்து உங்கள் சூதாட்டத்தை நிறுத்துங்கள்.
 
மாவீரர் தின உரை நாடகத்தை முன்னிட்டு. ..
 
முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டு – மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை – பெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா!
 
சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
 
எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக்
கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை.
 
ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம்.
 
இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது.
 
இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான். விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொருத்தவரையில் மாவீரர் தின உரையாற்றும் தகுதி அதன் தலைவருக்கு மட்டுமே உண்டு. அதுவே புலிகளின் மரபாகவும் இருந்து வந்திருக்கிறது. சிலரின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடானது, புலிகளின் மரபையும், அந்த மரபைக் காத்து உயிர்நீத்த ஆயிரக் கணக்கான போராளிகளின், உடன் இருந்த மக்களின் தியாகங்களை நகைச்சுவைக்குரியதாக மாற்றும் செயலன்றி வேறொன்றுமில்லை. தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் பகிரங்கப்படுத்திய கே.பியை துரோகி என்றவர்கள் எந்த அடிப்படையில் ; இந்தச் செயலை அனுமதிக்கின்றனர்? அவ்வாறு உரையை ஏற்பதாயின் முதலில் கே.பியின் கூற்றை அங்கரித்துவிட்டல்லவா அதனை ஆமோதிக்க வேண்டும். சிலர் சொல்லுவது போன்றே தலைவர் இருக்கிறார், அவர் தக்க தருணத்தில் வருவார் என்றால் எவ்வாறு .,?????? தலைவர் பிரபாகரனின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும்? இப்படியான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகின்றவர்கள் யார்?
 
ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும்
கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம்.
 
புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர்வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன. அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை ‘மேதகு’ அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னர் தலைவர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. மேதகு சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.. உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.
 
எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.
 
நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின்  கவிதை வரிகள் இவை – ‘எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை’ – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை.
 
இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள்-   பட்டினியில் மயங்கும் முதியோருக்கு  ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான  பகடைக்  காய்களாக்க முயற்சிக்காதீர்கள்.
 
வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி  துரோகி பட்டம் சூட்டி  அடாவடித்தனம்  செய்யும் நீங்கள்  எங்களது அரசியல்  உரிமையில் மட்டும்  அக்கறை காட்டுவதனை எப்படி  நம்புவது?

ஆடு நனைகிறது என்று ஓநாய்  அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது?

maandag 29 november 2010

மகிந்தவை பிரித்தானியாவில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை உள்ளே!

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும்,

 தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலம் என்பதை அடையாளம் இன்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று பிரித்தானியா வரவுள்ளதாலும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப் படவேண்டிய விடையமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர்தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இயரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

 எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

 முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

 இன்று பிற்பகல் 9:00 மணியளவில் பிரித்தானியாவின் கீத்றூ விமானநிலையத்தில் மகிந்த ராஜபக்ச வந்திறங்கவுள்ளார் என்பதையும் அறியத் தருகிறோம்.

 அத்தோடு இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.மின்னஞ்சல் அனுப்பமுடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மகிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதிஉஅனுப்புங்கள். Proctors.office@admin.oxac.ukஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/

URGENT PROTEST at London Heathrow Terminal 4!!!
Tonight @ 10pm
Mahintha Landing tonight!!
Spread this msg around as quickly as you can please!!...
Please tell ur friends, family, parents as there is a tube strike would people with cars try their best to get there..
Nanri

zondag 28 november 2010

பெண்கள் தற்காப்பும் சீனாவில் தமிழ்வளர்ச்சியும்

                                       பெண்கள் தற்காப்பு

@ Yahoo! Video
                          சீனாவில் தமிழ்வளர்ச்சி

zaterdag 27 november 2010

துயர்கொடுத்தவர் பற்றி

* அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

* வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி` என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

* பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

* பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்`. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்` என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

* மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

* "ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

* "பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

* அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

* எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது` என்பது அவரது அறிவுரை!

* ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

* ‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி` என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

* போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு` என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

* ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ்  வைத்திருந்தார்!

* பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

* பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

* தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

* பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

* அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

* உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்` என்றார் பிரபாகரன்!

* பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

* பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

* தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

* "ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

* மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

* ‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்` என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!
இப்படி முன்னாள் போராளிகள்,இயக்ககத்தை ஆரம்பித்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே வரலாற்றை திரிவு படுத்துபவர்கள் மகாவம்சம் வரலாற்றை திரிவு படுத்தியதாக அன்று கூவியவர்களே!!எனினும் பாளி மொழியிலான மகாவம்சத்தில் பல உண்மைகள் உள்ளன,இங்கு பொய்கள் மட்டுமே பல்லாக்கு தூக்குகின்றன,காரணம் தமிழன் முட்டாள் என்ற உள்நினைவு மட்டுமே!!

புலிகளின் தலைவா நீ எங்கே

புலிகளின் தலைவா நீ எங்கே??இருந்தால் துணிந்து இன்றே குரல் கொடு,இல்லைஎன்றால் உந்தன் பெயரில் ஆயிரம் ஓநாய்கள் ஆட்டைதேடி அலைகின்றன!!போராடம் பற்றி எழுதி பொழுதை களிக்கின்றன!!பாதையினை மறந்து பணத்தில் குறியாய் இருக்கின்றன!!இருந்தால் உடனே வந்துவிடு!!...இல்லையென்றால் உன் வீரத்துக்கும் ஆத்மா சாந்திக்கும் இவர்கள் சாகும் வரை சந்தர்ப்பம் அளியார்கள்.இன்று நீ வரவில்லைஎன்றால்"இல்லை" என்றே அர்த்தம்,இல்லையென்றால் "கோழைகளுடன் இணைந்த கோழை நீ",தமிழரில் பற்று இருந்தால் தலையை காட்டி விடு!!கண்ணாமூச்சியாட இது ஒன்றும் சிறுபிள்ளை வேளாண்மையில்லை,வாழ்க்கை போராட்டம்,ஒளிந்து ஒழிந்து நின்றடிப்பதெல்லாம் இனியும் எடுபடாது.வந்துவிடு இன்று.இல்லையென்றால் நீ இல்லை!!!
யாருக்காக ஒழியவேண்டும்,தப்பியிருந்தால் தமிழருக்கு சந்தோசமே,தலையை காட்டினால் தவறுகள் போகுமே,குள்ளநரிகளும்,பதவிப் பேய்களும் பதுங்கிடுமே!!இல்லையென்றால் ஆளாளுக்கொரு குழுவாகி அனைத்தையும் ஏப்பமிட்டு போராட்ட்டத்தை மட்டுமல்ல தமிழர் மானந்தனையும் மண்ணோடு மன்னாக்கிடுவர்,நான் உந்தன் விரும்பியல்ல எனினும் தமிழ் எனக்கும் அன்னையன்றோ!!அவளை யாரடித்தாலும் வலிப்பது என்னிதயம்தானே!!ஆதலால் வந்துவிடு,இல்லையென்றால் நீ இல்லை.உன் சாவில் கூட குளிர்காயும் சபலங்களுக்கு கனவிலாவது சொல்லு "உண்மையை பேசச்சொல்லி"!!

woensdag 24 november 2010

நிராஜ் டேவிட்டின் உண்மையின் தரிசனம் 20-24

காலம் கடந்து ஞானம் பெற்ற நிராஜ் டேவிட் தமிழ் மக்களுக்கு இயக்கம் விட்ட பிழைகளை விழக்குவதை விட்டுவிட்டு இலங்கை ராணுவத்திடம்  புலிகள் வடமாராட்சியை இழந்து மக்களுக்கு கூட சொல்லாமல் இந்தியாவுக்கு வள்ள மேறிய நிலையில் இலங்கை அரசு,சிங்களக்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில் ஒப்பரேசன் பூமாலை  மூலம் இலங்கை அரசை பணியவைத்து வடக்கு கிழக்கிணைந்த மாநிலத்தை  அறுநூறு புலிப்போராளிகள் இழப்புடன் கிடைக்கச்செய்த இந்தியாவை சொந்த நலனுக்காக மக்களையும் பகையாக்கி,தீராத விரோதியாக்கி இறுதியில் எல்லாவற்றையும் இழந்து சொந்த நாட்டிலே அடிமை,அகதி வாழ்வை உண்டாக்கித்தந்த புலிகளுக்காக இன்று குறை கூறி,அதை உண்மையின் தரிசனம் என்ற பெயரிலும் தமிழரை அழிக்க ஆரம்பத்திலிருந்தே உதவியதும் பலதீனத்து  மக்களை கொன்றுகுவிக்கும் கொடூரமானவர்களுமான இஸ்ரவேலரிடமிருந்து தமிழர் அதை
கற்றுக் கொள்ளவேண்டுமேன்பதையும் உபதேசிக்கிறார்.இவர் சுவிஸ் நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போருக்குப்பயந்து ஆரம்பத்திலோடியவர்களும் இன்று வீரம் பேசும் அந்நிய நாட்டில் வாழ்வுரிமை பெற்ற பெற்றவர்களில் இவரும் ஒருவரா என்பதுதான் தெளிவில்லை!! பக்கசார்பு ,இஸ்ரேலிடம் ஆலோசனை பெறும் நிராஜ் டேவிட்

உதாரணம்:
இந்தியா மேற்கொண்ட கீழ்த்தரமான பிரசாரங்கள் - உண்மையின் தரிசனம்- பாகம்-24 (வீடியோ)
[ புதன்கிழமை, 24 நவம்பர் 2010, 03:59.13 AM GMT +05:30 ]

திலீபனின் உண்ணா விரதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்தியா மிகவும் கேவலமான, பிற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. திலீபனின் போராட்டத்தையும், அவனது தியாகத்தையும் கொச்சைப்படுத்தும்படியான பலவித நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருந்தது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ வானொலி சேவையான அகில இந்திய வானொலி  (ALL INDIA RADIO),  திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும் படியான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
திலீபனைப் பற்றியும், புலிகளின் தலைவரைப் பற்றியும் தவறான கருத்துக்களை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில், அது முழுமூச்சுடன் இறங்கியிருந்தது. மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தவர்தான். ஆனால் அவர் தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி கூறவில்லை.
மகாத்மாவே நேரடியாக உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்திருந்தார். ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார்|| என்று அகில இந்திய வானொலி பிரச்சாரம் செய்தது.
அதேபோன்று, திலீபன் தொடர்பாக, மற்றொரு வதந்தியும் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. திலீபன் ஏற்கனவே நடைபெற்றிருந்த சண்டை ஒன்றில் காயம் அடைந்திருந்ததால், அவனது ஈரலில் ஒரு பகுதியும், மற்றய சில உள்ளுறுப்புக்களும் ஏற்கனவே வைத்திய சிகிட்சையின் போது அகற்றியெடுக்கப்பட்டுவிட்டன.
திலீபன் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதனால்தான் திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை துணிந்து மேற்கொண்டு வருவதாக| வதந்திகள் பரப்பப்பட்டன.(இந்தியப்படையுடன் ஈழத்திற்கு வந்திருந்த தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இப்படியான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் அரும்பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.)
அதேபோன்று, திலிபன் மரணம் அடைந்த பின்பும், இந்தியாவின் சகபாடிகளால் மேலும் பல வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இறுதி நேரத்தில் திலீபன் தன்னைக் காப்பாற்றும்படி சக போராளிகளிடம் கெஞ்சியதாகவும், ஆனால், புலிகள் திலீபனை வலுக்கட்டாயமாக உண்ணாவிரதம் இருந்து சாகடித்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.
திலீபன் புலிகளால் விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்டதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாவின் அடிவருடிகளால் வதந்திகள் பரப்பப்பட்டன. திலீபனின் போராட்டமானது, இந்தியா பற்றி தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மாயையை உடைந்திருந்தது. இதனைப் பொறுக்க முடியாத இந்தியாவின் உளவுப் பிரிவினரே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதில் பிரதான பங்கு வகித்திருந்தார்கள்.
அவர்கள் தமது திட்டத்திற்கு இந்தியப் படைகளின் தயவில் தங்கியிருந்த தமிழ் அமைப்பின் உறுப்பினர்களையும், அவர்களின் குடும்பத்தினர்களையும் பயன்படுத்தினார்கள். ஆனால், இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்களை இந்தியாவிற்கு எதிராக மேலும் கோபம் கொள்ள வைத்ததுடன், திலீபன் மீது தாம் கொண்டிருந்த அன்பை மென்மேலும் அதிகரிக்கவும் செய்தது.
சண்டைகளின் போது விழுப்புண் அடைவது புலிகளுக்கு புதிதல்ல. இதை புலிகளுடன் தோளோடு தோள் நின்ற தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
சுமார் ஆறு மாத காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சண்டையின் போது திலீபன் வயிற்றில் காயமடைந்திருந்தது உண்மைதான். ஆனால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அளவிற்கு திலீபனுக்கு உடல்நிலை ஒன்றும் மோசமாக இருக்கவில்லை என்பதை, திலீபனின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
இது பற்றித்தான் ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்
நிராஜ் டேவிட் nirajdavid@bluewin.ch

நிராஜ் டேவிட்டின் உண்மையின் தரிசனம் தொடர் 10-1

காலம் கடந்து ஞானம் பெற்ற நிராஜ் டேவிட் தமிழ் மக்களுக்கு இயக்கம் விட்ட பிழைகளை விழக்குவதை விட்டுவிட்டு இலங்கை ராணுவத்திடம்  புலிகள் வடமாராட்சியை இழந்து மக்களுக்கு கூட சொல்லாமல் இந்தியாவுக்கு வள்ள மேறிய நிலையில் இலங்கை அரசு,சிங்களக்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில் ஒப்பரேசன் பூமாலை  மூலம் இலங்கை அரசை பணியவைத்து வடக்கு கிழக்கிணைந்த மாநிலத்தை  அறுநூறு புலிப்போராளிகள் இழப்புடன் கிடைக்கச்செய்த இந்தியாவை சொந்த நலனுக்காக மக்களையும் பகையாக்கி,தீராத விரோதியாக்கி இறுதியில் எல்லாவற்றையும் இழந்து சொந்த நாட்டிலே அடிமை,அகதி வாழ்வை உண்டாக்கித்தந்த புலிகளுக்காக இன்று குறை கூறி,அதை உண்மையின் தரிசனம் என்ற பெயரிலும் தமிழரை அழிக்க ஆரம்பத்திலிருந்தே உதவியதும் பலதீனத்து  மக்களை கொன்றுகுவிக்கும் கொடூரமானவர்களுமான இஸ்ரவேலரிடமிருந்து தமிழர் அதை
கற்றுக் கொள்ளவேண்டுமேன்பதையும் உபதேசிக்கிறார்.இவர் சுவிஸ் நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போருக்குப்பயந்து ஆரம்பத்திலோடியவர்களும் இன்று வீரம் பேசும் அந்நிய நாட்டில் வாழ்வுரிமை பெற்ற பெற்றவர்களில் இவரும் ஒருவரா என்பதுதான் தெளிவில்லை!! பக்கசார்பு ,இஸ்ரேலிடம் ஆலோசனை பெறும் நிராஜ் டேவிட்

உதாரணம்:ஆணவத்துடன் தீட்சித்தும் ஆவேசத்துடன் பிரபாகரனும் (உண்மையின் தரிசனம் பாகம்-22)
திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 8 வது நாள், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். திலீபனின் கோரிக்கைகள் பற்றிய தமது இறுதி முடிவை அறிவிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும், திலீபனுக்கு சாதகமான முடிவையே அவர் வெளியிடுவார் என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
திலீபனின் உண்ணா விரதத்தை முடித்துவைக்கும் நல்ல செய்தியையே இந்தியத் தூதுவர் அன்றைய தினம் கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆர்வத்துடன் காத்திருக்கவும் தலைப்பட்டார்கள்.
22.09.1987 அன்று பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய தீட்ஷித்தை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், அன்டன் பாலசிங்கமும் சென்று சந்தித்தார்கள்.
யாழ்ப்பாண மக்கள் நினைத்தது போன்று இந்தியத் தூதுவருடனான புலிகளின் சந்திப்பு ஒன்றும் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை.
தன்னைச் சந்திக்க வந்த புலிகளின் தலைவர்களுடன், இந்தியத் தூதுவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். புலிகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்.
அன்றைய சந்திப்பின் போது, இந்தியத் தூதுவர் தீட்ஷித் மட்டும் திலீபன் மீது ஓரளவு அனுதாபம் கொண்டு செயற்பட்டிருந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு நிச்சயம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும்.
இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீராத பகைக்கு வித்திட்டவர் என்று பின்னாட்களில் இந்தியப்படை அதிகாரிகளாலேயே விமர்சிக்கப்பட்ட தீட்ஷித், அன்று நடந்துகொண்ட விதம் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.
நிராஜ் டேவிட் nirajdavid@bluewin.ch
ஆணவத்துடன் தீட்சித்தும் ஆவேசத்துடன் பிரபாகரனும் (உண்மையின் தரிசனம் பாகம்-22)

donderdag 18 november 2010

திருக்குர்ஆன்

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக் - குர்ஆன் [30 :22]

இஸ்லாமியர்களான நாம் ஒரு மொழியை, இன்னொரு மொழியை விட உயர்த்துவதோ அல்லது தாழ்த்துவதோ இல்லை. அப்படி மொழி வெறி பிடித்து அலையச் சொல்லி எங்கள் நபி எங்களுக்குக் கற்றுத் தரவில்லை. நாம் தமிழில் பின்னூட்டல்கள் இடுவதெல்லாம் அதைத் தாய் மொழியாகக் கொண்டவர...்கள் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள் என்பதால் தான்.

அதல்லாமல் தமிழுக்கு ஒரு சிறப்பு வழங்கி அல்ல. ஒரு வேளை ஒரு சிங்கள மொழி நண்பரைச் சந்தித்தால் நாம் அவருடைய அழகிய தாய் மொழியான சிங்களத்திலேயே அவருக்கு இஸ்லாத்தைப் புரிய வைப்போம், அல்லது ஒரு சீன மொழி நண்பரை சந்தித்தால் அவருக்கு அவரின் அழகிய தாய் மொழியில் இஸ்லாத்தை விளக்குவோம்.

திருக்-குர்'ஆன் அப்படித்தான் எங்களுக்கு வழி காட்டுகிறது.

ஒரு தனி மொழியால் ஒன்று படுதல் என்பது ஒரு கற்பனை மட்டுமே. உதாரணத்திற்கு தமிழால் ஒன்று படுவதானால் தமிழ் பேசுபவர்கள் மட்டுமே அதனால் ஒன்று படலாம். மற்றவர்கள் அல்ல. முழு மனித குலமும் ஒன்று படுவதானால் அது "இறைவனுக்காக ஒன்று படுதல்" என்பதாலே முடியும்.

மறுபடியும் சொல்கிறேன், மொழிகள் அனைத்தும் சமமே, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. தமிழுக்கு தனிச் சிறப்பு என்றொன்று இல்லை, உலகில் உள்ள பல மொழிகளில் அதுவும் ஒன்று. அவ்வளவு தான்.

அன்று மொழி வெறியை, இன வெறியை தகர்த்தெறிந்த மாபெரும் தலைவர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அன்னவர்கள் தங்களது இறுதிப் பிரசங்கத்தில் சொன்னது இதைத் தான்.

மக்களே! அறிந்து கொள்ளுங்கள் !

"உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல
வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல.
அனைவரும் ஆதமுடைய மக்களே! "

Mohamed Abdullah
நண்பர்களே! மேலே போடப்பட்டுள்ள படம், அதனோடு சொல்லப்பட்டுள்ள விடயம் என்பவற்றைப் பார்க்கின்ற போது, இஸ்லாம் ஏன் அவ்வாறு சொல்கின்றது என்பது பிழையாக விளக்கப்பட்டிருப்பதால் எம்மில் தோன்றுகின்ற எண்ணங்கள் போல் இருக்கின்றது, அவ்வளவுதான்!

இஸ்லாம் பெண்க...ள், தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதற்கு எத்தனையோ சட்டங்களையும் வகுத்துத்தந்துள்ளது, அவைகளை, நாம் எல்லோரும் நண்பர்கள் என்ற வகையில்
உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

இந்தவிடயத்தை இஸ்லாம் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திற்கும் சொல்கின்றது, எனவே நானும், எம்மில் அதிகமானவர்கள் வாலிபர்கள் என்ற வகையில் உள்ளத்தோடு பேசவே நினைக்கிறேன்.

காம இச்சை என்பது, மனிதனில் இருக்கக்கூடிய ஒரு இயல்பு, இது முறையாக திருமணம் என்ற உறவினால் நடைபெறாத போது, அது வல்லுறவாக மாறுகிறது.

இங்கே படத்தில் tennis வீராங்கனை ஒருத்தர் காட்சியளிக்கிறார், நான் அறிந்தவரை இவர் இங்கே இருப்பவர்களுக்கு உறவுக்காரர் இல்லை எனவே பேசிக்கொண்டிருக்கிறோம்.

நம்மில் ஒருவருடைய மனைவியை இந்தக்கோலத்தில் அடுத்தவர்கள் பார்த்து ரசிக்க நாம் விரும்புவோமா???

இஸ்லாம் பெண்களை வீட்டில் முடங்கி இருக்கச்சொல்கின்ற மார்க்கம் என்றால் ஏன் அது மறைக்கச்சொல்ல வேண்டும்???
- இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால், பெண்கள் கண்ணியமான முறையிலே வெளிச்செல்ல வேண்டும், சமூகத்திற்கு பண்காற்ற வேண்டும் என்பது தான்.
இஸ்லாம் கொஞ்சம் எம்மனட்சாட்சியோடு பேசுகிறது:

ஒரு பருவமடைந்த வாலிபர், தனக்கென்று ஒரு மனைவி இல்லாதவர், நிச்சயமாக சுய இன்பம் என்கின்ற கொடிய நோய்க்கு, அடிமையாகி தன் சக்தியை இழந்து தன்னைத்தானே அழித்துக்கொள்வதை வெறுக்கின்ற ஒரு மார்க்கம்.

அன்புக்குரிய அருமைத்தோழர்களே! இரண்டு வினாக்களை உங்கள் மனட்சாட்சியோடு, உள்ளத்தோடு கேட்டுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

1) நீங்கள் பருவ வயதை அடைந்த திருமணம் செய்யாத ஒரு வாலிபர் என்றால், "நீங்கள், சுய இன்பம் என்கின்ற பழக்கத்திற்கு அடிமையாக இல்லையா என்று உள்ளத்துடன் கேளுங்கள்" "ஆம்" என்று பதில் வரும், பதில், "இல்லை" என்றால் உங்களுடைய வருங்கால திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்! சந்தோசமாக இருங்கள்.

2) முதலாவது கேள்விக்கு உங்கள் பதில் "ஆம்" என்று உங்கள் மனச்சாட்சி பதில் சொன்னால், மீண்டும் உங்களுடைய மனதிடம் கேளுங்கள், நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடும் போது உங்களுடைய கற்பனையில் யாரை நிறுத்தி சுய இன்பத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று கேளுங்கள்.

யாரோ அருவனுடைய புதல்வி அல்லது மனைவி அல்லது தாய், இவர்கள் மூவரில் ஒருவர் தான், சுய இன்பத்தில் ஈடுபடும் போது கற்பனையில் மனைவியாக இருக்கிறார்.

எம்முடைய மனைவியை யாரோ ஒருவர் கற்பனையில், படுக்கையில் வைத்து அனுபவிப்பதை எங்களால் சகித்துக்கொள்ள முடியுமா?

"இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்த நினைக்கின்றது, பாதுகாக்க நினைக்கின்றது, அவர்களோடு சார்ந்து இருப்பவர்களை பாதுகாக்க நினைக்கிறது!"

இஸ்லாம், பெண்களே! நீங்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை, நீங்கள் கண்ணியமானவர்கள், கண்ணியமான முறையில் வெளிச்செல்லுங்கள் என்றுதான் சொல்கின்றது சகோதரர்களே.

ஊடகங்களோ, அல்லது பெண்களை வைத்து இலாபம் சம்பாதிக்கின்றவர்களோ, யாரோ ஒரு முஸ்லிம், மனைவியை துன்புறுத்தி விட்டான் என்றால் அதனை தேடிப்பிடித்துக் கொண்டுவந்து, இதோ இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று சொல்வதனை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

இஸ்லாத்தை உண்மையாகவே புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், புனித வேதநூல் இருக்கின்றது, படித்துப்பாருங்கள், நீங்களே அதன் உண்மை நிலையை அறிந்துகொள்வீர்கள்.

இஸ்லாம், தான் முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஆணுடன், ஒரு பெண் விரும்புகின்றபடி மகிழ்ச்சியடைய அனுமதித்திருக்கின்றது ஆனால் இன்னொருவருடைய மனைவியோ, புதல்வியோ அவளுக்கு சொந்தமில்லாதவர்களால் ரசிக்கப்படுவதை, அனுபவிக்கப்படுவதைத்தான் தடுத்திருக்கின்றது.

யாரோ ஒரு முஸ்லிம் ஒரு பெண்ணை துன்புறுத்துகிறார் என்பதற்காக, இஸ்லாம், பெண்களை அடக்குகிறது என்று தயவுசெய்து பிழையாக புரியாதீர்கள். இஸ்லாத்தை நன்றாக விளங்கிய, அதன் படி நடக்கின்ற முஸ்லிமுக்கு ஒரு பெண் மனைவியாக இருப்பாள் என்றால் அவளுக்கு அனைத்து உரிமைகளையும் கொடுத்திருக்கின்றது இஸ்லாம்.

இந்த பதிவு நீண்டு விடும் என்பதற்காக இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள் என்ன என்பதை இங்கு நான் குறிப்பிடவில்லை, அறிந்துகொள்ள விருப்பம் என்றால் தயவுசெய்து கேளுங்கள் அவைகளை ஆதாரத்துடன் தருகிறேன்.

இறுதியாக, ஒவ்வொருவரும், தனது மனதோடு இந்த விடயத்தை பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் சற்று அதிகமாக சில விடயங்களை குறிப்பிட்டுள்ளேன், தயவுசெய்து யாருடைய உள்ளத்தையும் புண்படுத்துவதாக எனது வார்த்தைகள் அமைந்திருந்தால், நண்பர் என்றெண்ணி மன்னித்துவிடுங்கள்.

"யாருடைய நாவிலிருந்தும் (வார்த்தைகளிலிருந்து), கைகளிலிருந்தும் அடுத்த ஒரு மனிதர் பாதுகாப்புப்பெருகிராரோ அவர்தான் மிகச்சிறந்த முஸ்லிம் ஆவார் - நபி முஹம்மது (ஸல்)"
அடிப்படையில் நான் ஒரு விடயத்தை சொல்கிறேன். இஸ்லாத்தின் மிக அடிப்படையே "இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை, நேர் வழி தெளிவாகிவிட்டது... - 02:256" என்பது தான். அதாவது, எந்த மனிதரும், சுய விருப்பம் இல்லாமல் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும் இன்பது இஸ்லாத்தில் இல்லை, யார் இறைவனை நம்பி, இது எனக்கு வழிகாட்டும் என்று அதன் கட்டளைகளை எடுத்து நடக்கிறாரோ, அவரை அது நிச்சயம் வெற்றிபெறச் செய்யும்.

அடுத்ததாக, முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள், இஸ்லாம் என்பது, அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவை. அவைகளைவைத்து இஸ்லாம் மனிதனுக்கு பொருத்தமான விடயங்களை சொல்கிறதா இல்லையா என்பதை பாருங்கள், ஒரு முஸ்லிம் அதற்கு மாற்றமாக நடக்கும் போது, இஸ்லாத்தை புறக்கணித்து வாழ்கிறார் என்று கொள்ளுங்கள், இஸ்லாம் அதைத்தான் செய்யச் சொன்னது என்று நினைக்காதீர்கள்.

///உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு வீரனை மதிக்க வேண்டும் என்பதே உண்மை அது யாராக இருந்தாலும் ....அபாசமான அடிகள் தவறு என்று நாமும் சொல்லுகின்றோம் இல்லை என்று சொல்லவில்லை///

எல்லோரும் நல்லவர்கள் இல்லையே சகோதரரே! பலர் ரசிப்பார்கள், சிலர் ருசிப்பார்கள் பரவாயில்லை என்று மனைவியை, அவளது கணவன் கண்டுகொள்ளாவிட்டால் அவரை என்ன என்று அழைப்பது?

///சும்மா வீட்டில் இருக்கும் பொது இப்படி இருக்கவில்லையே இந்த விளையாட்டிற்கு இப்படியான ஆடைகள் தான் சரியாக வரும் ....மொகமத் அவர்களே ரசிப்பு என்பது வேறு ருசிப்பு என்பது வேறு உலகத்தில் இருக்கும் எல்லா இனங்களையும் மனிதன் ரசிக்கத்தான் இருக்கிறது .பெண்ணையும் ஒரு மனிதன் ரசிக்கவிட்டல் பெண்ணுக்கு பெருமை இல்லை ...நீங்கள் இன்னும் எந்த களத்தில் இருகிறேன்கள் நண்பனே ...நான் ஒன்னும் சொல்லடா நீங்கள் அராபிய அரேப நாடுகள் பற்றி கேள்விபட்டு இருக்கிறேர்கள் தானே ..அந்த நாடுகளில் இஸ்லாம் பெண்கள்தான் அதிகம் தப்பு பண்ணுகிறார்கள் உங்களுக்கு தெரியுமா நண்பரே ...என் உண்மைய சொன்னால் அந்த நாடுகளில் இஸ்லாம் பெண்களுடைய தொடர்பு இலக்கம் குட இருக்கு நண்பரே///

ஒரு பெண் வீட்டில் இருக்கும் போது அவள் விரும்பியவாறு உடை அணிவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இந்த விளையாட்டிற்கு தளர்ச்சியான ஆடைகளை அணிந்தும் சுலபமாக விளையாடலாம், மேலும் இப்படி தன்மானத்தை இழந்து, என்னை ரசித்தாலும், ருசித்தாலும் பிரச்சினை இல்லை என்று விளையாடி இவர்கள் எந்த பிரயோசனத்தை அடைந்தார்கள்? காட்சிப்பொருளாக இவர்கள் பாவிக்கப்படுகிறார்கள்.
இஸ்லாமிய பெண்கள் என்று சொல்லாதீர்கள் நண்பரே, தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு இஸ்லாமிய கட்டளைகளை புறக்கணித்து நடக்கின்ற முஸ்லிம் ஆண்களும், பெண்களும் தப்புச் செய்கிறார்கள். Enhanced by Smiley Central இஸ்லாமிய கட்டளைகளை முழுமையாக எடுத்து நடக்கின்ற ஒருவர் எப்படி தவறு செய்வார்? அருமைத் தோழரே!

பெண்கள் என்னதான் சாதனைகள் பண்ண முடியும் என்று கேட்கிறீர்கள், அன்னை தெரேசா போன்ற எத்தனையோ சாதனை புரிந்த பெண்கள், எல்லா மதத்திலும், கொள்கையிலும் இருக்கிறார்கள், இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால், ஒரு பெண் தன்னுடைய மானத்தை இழந்து, அடுத்தவர்களால் அவள் ருசிக்கப்பட்டு படைக்கின்ற சாதனை மட்டும் வேண்டாம் என்கிறது. Enhanced by Smiley Central

அருமைச் சகோதரரே, முஸ்லிம்கள் எல்லோரும் புனிதர்கள் என்று நாள் சொல்லவில்லை, அப்படி சொன்னால் அது அப்பட்டமான பொய், நான் சொல்லவருகின்ற கருத்து என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும், நான் நல்லவனாக, கண்ணியமானவனாக வாழ வேண்டும் என நினைத்து இஸ்லாம் சொல்கின்ற கட்டளையை எடுத்து நடந்து பார்ப்போம், அது எம்மை பாதுகாக்கிறதா இல்லையா என்பதை.

மனிதரை இஸ்லாம் எப்படி மாற்றியது என்பதை பார்க்கவேண்டும் என்றால், நபி முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களைப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம்கள் எல்லோரும் தப்பே செய்யாதவர்கள் என்று சொல்லவில்லை, இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றினால் தப்பே செய்யமாட்டார்கள் என்று தான் சொல்கிறேன், சகோதரரே!

மேலும் உங்கள் இரண்டாவது பதிவில் ஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள்,

முதலில் ஒரு கணவன், மனைவிக்கு உடை, வீடு, உணவு ஆகிய மூன்றையும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்ற மார்க்கம் இஸ்லாம். தன்னை மனம் முடிக்க விரும்பும் ஆணை, ஒரு பெண் மகர் (நன்கொடை) என்று சொல்லப்படுகின்ற, ஒரு பெண் விரும்புகின்ற தொகையை அவள் நிர்ணயிக்கலாம், அதனை அக்கணவர் கொடுத்துவிட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டும் இது இஸ்லாமிய சட்டம்.
"நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். - 04:04"

இது இஸ்லாமிய சட்டம் சகோதரரே. இது எதற்கு? பெண்களை பாதுகாக்க இஸ்லாம் சொல்லி இருக்கின்ற அழகான சட்டம், ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு, பின்னர் அந்தப்பெண்னைக் கைவிட்டால், இந்தப்பணத்திளிருந்து அந்தப்பெண் நல்ல முறையில் யாரிடவும் கைநீட்டாமல் வாழ இஸ்லாம் சொல்கின்ற முறை, இதுவெல்லாம் சில நேரம் ஆச்சரியமாக இருக்கலாம், நான் புதிதாக சொல்வதாக தோன்றலாம், அதனால் தான் இஸ்லாத்தை அறிய விருப்பம் என்றால் அதன் வேத நூலை எடுத்து வாசியுங்கள், இஸ்லாத்திற்கு வெளியிலிருக்கும் ஒருவரை வைத்து எடை போடாதீர்கள்.

எனவே பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அவர்கள் சம்பாத்தியத்தில் வயிறு பிழைக்கும் ஆண்கள், முஸ்லிம் என்று பெயரளவில் இருக்கிறார்களே தவிர, இஸ்லாம் சொல்வது அதைத்தான் என்று நினைத்துவிடாதீர்கள் நண்பரே.

அடுத்தது உங்களுடைய கேள்வி:
இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு இவளவு உரிமையை கொடுத்திருந்தும், ஒரு பெண் நாடுகடந்து தொழில் செய்து சீரளிகிறார் என்றால், அவர் இஸ்லாத்தில் அவருக்குரிய உரிமையை விளங்காதவர். இவரை ஒரு விசுவாசியான அதாவது இஸ்லாத்தை விளங்கி அதன்படி நடக்கின்ற ஒரு ஆண் திருமணம் செய்யவேண்டும் என்று இஸ்லாத்தில் எங்கும் இல்லை நண்பரே.

"கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) - 24:26"

மேலும் இஸ்லாத்தை புரிந்த ஒருவரை அறிந்து திருமணம் முடிப்பது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். - 04:19"

இஸ்லாம் எப்போதும் நடுநிலையாகத்தான் பேசும், சில நேரம், பெண்களை இஸ்லாம் ஒடுக்குகிறது என்று தப்பர்த்தம் சொல்வதற்கு சில பேர் சொல்லலாம், எனவே தான் அல்-குர்ஆன் என்பது எங்களுடைய வேதம், அதில் பெண்களுக்கென்றே ஒரு தனி அத்தி...யாயம், அவர்கள் தொடர்பான சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதனை நீங்கள் பெண் என்ற வகையில் வாசித்துப்பாருங்கள் என்று இங்கு தருகிறேன்.
http://www.tamililquran.com/qurandisp.php?start=4

பெண்களுக்கு வரையறை போட முதல் ஆண்களுக்கு ஒழுக்கம் சொல்லிவிட்டுத்தான் பெண்களுக்கு சொல்கின்றது இஸ்லாம். பெண்களுக்கு மட்டும் அல்ல Enhanced by Smiley Central

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். - குர்ஆன்:24:30

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். - குர்ஆன்:24:31

இஸ்லாம் என்பது, முழுமையான திருக் குர்ஆன் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை நெறி முறை.
இந்த இரண்டு மூலாதாரங்களில் இருந்து இதுதான் இஸ்லாம் என்று விளங்கிக்கொள்ளுங்கள் :)

...இஸ்லாம் என்றால் சானியா மிர்சாவுடைய கருத்தோ அல்லது என்னுடையதோ அல்ல. இஸ்லாம் என்பது, முழுமையான திருக் குர்ஆன் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை நெறி முறை.

இவைகளை முழுமையாக எடுத்து நடப்பவர் தான் இஸ்லாத்தை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இஸ்லாத்தை பற்றி அறிவதற்கு இவரிடம் தான் கேட்க வேண்டும் அல்லது நீங்கள், மேலே நான் குறிப்பிட்ட மூலாதாரங்களில் இருந்து இதுதான் இஸ்லாம் என்று   கொள்ளுங்கள்.

Suresh Das

சகோதர மொகமத் ...உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி நண்பரே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் மதம் என்பது எங்களுக்கு ஒரு கண் என்றால் இனம் என்பது எங்களுக்கு மறுகண் போல ...அனால் சிலர் இஸ்லாமுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் ஒரு இனத்துக்கு கொடு...ப்பது இல்லையே அது என் என்று விளக்க முடியுமா சகோதர ////எனவே பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அவர்கள் சம்பாத்தியத்தில் வயிறு பிழைக்கும் ஆண்கள், முஸ்லிம் என்று பெயரளவில் இருக்கிறார்களே தவிர, இஸ்லாம் சொல்வது அதைத்தான் என்று நினைத்துவிடாதீர்கள் நண்பரே.///////// இதை நானும் கண்டிக்கிறேன் நண்பரே அனால் இதில் நீங்கள் சொல்லும் கருத்தை எங்க எனது மனம் மறுக்கிறது நண்பனே //// பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அவர்கள் சம்பாத்தியத்தில் வயிறு பிழைக்கும் ஆண்கள், முஸ்லிம் என்று பெயரளவில் இருக்கிறார்களே/////இப்படி நீங்கள் சொல்லுவதை பார்த்தால் சிறிலங்காவில் உள்ள எல்லா இஸ்லாம் மக்களையும் தப்ப சொல்ல முடியுமா என் என்றால் எண்கள் ஸ்ரிலங்கள் இஸ்லாம் மக்களில் நிறைய மக்கள் அரபு நாடுகளில் இருக்கிறார்கள் என்பது உண்மை ... நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்து இருக்கிறீர்கள் நண்பரே ...////இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு இவளவு உரிமையை கொடுத்திருந்தும், ஒரு பெண் நாடுகடந்து தொழில் செய்து சீரளிகிறார் என்றால், அவர் இஸ்லாத்தில் அவருக்குரிய உரிமையை விளங்காதவர். இவரை ஒரு விசுவாசியான அதாவது இஸ்லாத்தை விளங்கி அதன்படி நடக்கின்ற ஒரு ஆண் திருமணம் செய்யவேண்டும் என்று இஸ்லாத்தில் எங்கும் இல்லை நண்பரே.////நான் கேட்பது என்னவென்றால் அபோ அந்த பெண்களை யாரு மனம் முடிப்பது நண்பரே ......எல்லா பெண்களும் தவறான பெண்களும் இல்லை நண்பரே ....நீங்கள் அடிகளை பற்றி பெசிநேர்கள் அனால் இப்படி இருக்கும் பெண்களின் நிலை ...இவர்களை இஸ்லாமை நன்றாக தெரியாதவர்கள் என்று சொல்ல முடியாது நண்பரே ....இதில் உண்மை என்னவென்றால் இன்றைய உலகத்தும் மதம் சொல்லுகிறபடி நடக்க முடியாது நண்பரே ....இபோ பேசும்போது மதம் என்று பேசுவபர்கள் செய்வது எல்லாமே குற்றம் அனால் மதம் என்று வரும் பொது தன்னை புனிதன் என்று கட்டி கொள்கிறார்கள் ....உதாரணம் என்ன என்றால் இங்கு இருக்கும் இஸ்லாம் பெண்களுடன் இஸ்லாம் ஆண்கள்தான் தொடர்பு வைத்து இருக்கார்கள் அவர்களை செரளிப்பதும் அந்த ஆண்கள்தான் என்பது உண்மை ....அனால் தனக்கு மனைவி என்று வரும்போது மட்டும் பெண் நல்லவளாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தப்பு இல்லையா ....இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் இவன் வீட்டு சாரதியாக இருந்தால் ஒரு இஸ்லாம் பெண்ணைத்தான் பணிபென்னக எடுக்கிறான் என் என்றால் தனது இஸ்ரத்துக்கு அவர்கள் வருவார்கள் என்று அவன் நினைக்கிறான்....உண்மைய சொன்னால் நண்பரே தப்பாக நினைக்க வேணாம் உண்மைய சொல்லுறேன் நான் கண்டவரை இங்கே இஸ்லாம் பெண்கள் இப்படி போறார்கள் என்றால் அதுக்கு முக்கிய கரணம் இஸ்லாம் ஆண்கள்தான் என்பதை வருத்ததுடன் சொல்லுகிறேன் நண்பரே ....நான் மதத்துக்கு முக்கியம் கொடுப்பவன் இல்லை நான் இனத்துக்கு முக்கியம் கொடுப்பவன் எனது இனம் என்ற வகையில் எனது பெண்கள் இப்படி போவதால் இஸ்லாம் பெண்கள் இப்படி போறார்கள் என்று சொல்லுவது இல்லை நண்பரே தமிழ் பெண்கள் இப்படி இருக்கிறார்கள் என்று வேற்று நட்டவன் எங்களை கேலிபண்ணி கேடு இருக்கோம் ....என்னை பொறுத்தவரை நான் உயிரோடு இருக்கும் வரை எனது அம்மா தங்கை அக்கா இவர்களை வேறு நாட்டுக்கு அனுப்பி சம்பாதிக்கணும் என்று இல்லை அனுப்பவும் மாட்டோம் .....அனால் இங்கே தானும் தன தங்கையும் வேலை பண்ணும் பொது இந்த நாட்டை பற்றி தெரியாதவன அண்ணன் சொல்லுங்கள் இதை மதம் என்னும் பெயரால் சொல்லிவிட முடியாது ...உறவு என்று ஒன்று இருக்கு நண்பரே என் உறவு கஸ்ரபடுவதை என்னால் பக்க முடியாதப்போ ....தங்கை இல்லை மனைவி இப்படி அனுப்பி என் சம்பதிக்கிரர்கள் என்பதுதான் என் கேள்வி .....////எனவே பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அவர்கள் சம்பாத்தியத்தில் வயிறு பிழைக்கும் ஆண்கள், முஸ்லிம் என்று பெயரளவில் இருக்கிறார்களே//// அப்படி பார்த்தல் இவர்கள் அப்பா அம்மா இஸ்லாமை ஏற்ருகொள்ளவில்லைய >?????அவர்கள் சொல்ல குடத இது தப்பு என்று .வீட்டுக்கு வெளியில் போகும்போது முகத்தை முடவேண்டும் என்று சொல்லும் பெற்றோர்கள் வெளிநாடில் எப்படி இருப்பார்கள் என்பதி பக்க மறந்து விட்டார்களே நண்பரே ..பணம் என்று வந்தவுடன் மதத்தை மறந்து விட்டார்களா ?????இதை நான் உங்கள் மதத்தின் வெறுப்பில் சொலுறேன் என்று நினைக்க வேண்டாம் நண்பரே எனது சகோதரிகள் எல்லோரும் இதனால்தான் சொல்லுறேன் எலோருக்கும் சொல்லுவேன் உன் தங்கையா வேலைக்கு அனுப்பி சாப்பிடுவதற்கு நே சகலம் என்று சொல்லுவேன் என் இஸ்லாம் நண்பர்களுக்கு ....முதலில் இவர்களை திருத்துவதை பாருங்கள் நண்பரே ....மதத்திற்கு முதல் தமிழனுக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கு நண்பரே அதைத்தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் ....உங்களுடன் எனக்கு பிடித்த ஒன்னு தாழ்மையான பதில் சொல்லுகிறேர்கள் ...மற்றும் தமிழில் போடுகிறீர்கள் நன்றி நண்பரே தோழமையுடன்

woensdag 17 november 2010

நிராஜ் டேவிட்டின் குழந்தைத்தனம்

உண்மையின் தரிசனம்-பாகம்-23
பக்கசார்பும் காலம் கடந்தபின் செய்யும் ஆராட்சியுமான இங்கு இந்தியராணுவம் தோற்றது என்பதே வேடிக்கைதான்!!புலிகளின் அன்றைய நடவடிக்கைகள் காரணமாக தமிழர் இன்று அடிமைகளாகி,அகதிகளான பின்னும் இவரின் புலம்பல் வேதனைக்குரியதும் தமிழனை இன்னும் ஏமாற்றலாம் என்பதனைஎடுத்தியம்புவதுமாகவே  உள்ளது.

வருந்தியழைத்துவிட்டு அழையாவிருந்தாளிகள் என்று கூற இவரால் மட்டுமே முடிகிறதென்றால் இவரின் உண்மையின் தன்மைபற்றி சிறிது சிந்திப்போமே!!இந்தியா தலையிடாதிருந்தால் இன்று பறிபோன தமிழர் பிரதேசங்கள் அன்றே பறிபோயிருக்கும் என்பது மனசாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் நிச்சயமாக தெரியும்.

  இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்-   (பாகம்-9)- நிராஜ் டேவிட் 
   இஸ்ரேலை உதவிக்கழைக்கும் நிராஜ் டேவிட்-8
   இஸ்ரேலை உதவிக்கழைக்கும் நிராஜ் டேவிட்-7

zondag 14 november 2010

தமிழ் எழுத்தும் ஒருங்குறி அரசியலும் - தமிழ் ஒருங்குறியில் வேண்டாம்!!! கிரந்த லிபி...

door Venkadesan Neelakrishnan op zondag 14 november 2010 om 11:39
தமிழ் மொழியானது இந்திய மொழிகளிலேயே மிகப் பழமையான ஒரு மொழியாகும். தமிழ் மொழியின் தனித்தன்மையே மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரிதும் . மாறாமல் இயங்கி வரும் சிறப்பே ஆகும். தொல்காப்பியர்க் காலத்து தமிழுக்கும் . இப்போதைய தமிழுக்கும் வேறுபாடுகள் மிகவும் குறைவு. ஆனால் சமஸ்கிருத மொழியோ, அரபி மொழியோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதே ஒற்றுமையோடு இன்றில்லை எனலாம். தற்சமயம் எழுந்துள்ள தமிழ் ஒருங்குறியில் புதிய எழுத்துக்களை இணைக்க மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகளை மக்களில் பெரும்பாலானோர் பெரிதான தெளிவு அற்ற நிலையில் இருப்பதை காண முடிகிறது. அதனைப் போக்கவே இந்தப் பதிவினை இடுகிறோம். தமிழ் மக்களுக்கு இருக்கும் தனிக்குணமே எந்தவொரு விடயத்தையும் பல்கி அணுகி ஆராய்வது இல்லை. எதைச் சொன்னாலும் கண்மூடித் தனமாக எதிர்ப்பார்கள், இல்லை ஆதரிப்பார்கள், opponents point of view-ல் இருந்து எதனையுமே சிந்திப்பதில்லை. அதனால் தெளிவும் கிட்டுவதில்லை.
தமிழ் ஒருங்குறி:
இன்று தமிழர்களில் பெரும்பாலானோர் கணணியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுதும் கணணியின் பயன்பாடு பெருகிய பின்னர் தத்தம் தாய்மொழிகளில் கணணியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைப் பெருகிய கொண்டு வருவது அறிந்ததே. அதற்கு தமிழ் மட்டும் என்ன விதிவிலக்கா? இல்லை தமிழில் கணணியின் ஊடாக இணையத்தில் எழுதுவோர், பதிவோர், கிறுக்குவோர்கள் ஏராளம். ஒரு மொழியின் இருப்பை இத்தகு செயல் எப்போதுமே உறுதி செய்துக் கொண்டே இருக்கும். இப்படி தமிழில் எழுதுவதற்கு உதவியாக இருப்பது யுனிகோட் என்னும் எழுத்து முறை. இது கணணிப் பயன்ப்பாட்டுக்கு உருவாக்கப் பட்டவை.
யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன.
கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணையத்தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும். ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.
தமிழ் எழுத்து:
தமிழ் மொழி தனக்கென ஒரு இலக்கண வரம்பைக் கொண்டதொரு மொழியாகும். ஒரு மொழி இப்படித் தான் பேசப்படல் வேண்டும், எழுதப் படல் வேண்டும் என்று இலக்கண வகுத்து standardiseசெய்யப்பட்டுள்ளது. இப்படியான வரன்முறைகள் இல்லாத பல மொழிகள் காலப் போக்கில் சிதைந்தும், கலந்தும்,. உருமாறியும் போய்விட்டன. ஆகவே ஒரு மொழி நீண்டகாலம் சீராக இயங்க இலக்கணங்கள் அவசியப் படுகின்றன. தமிழ் மொழி உட்பட அனைத்து தெற்காசிய மொழிகளின் எழுத்தும் பிராமி என்னும் எழுத்தில் இருந்து உருவாகி வந்தவை ஆகும். அசோகரின் காலத்துக்கு முன இந்தியாவில் எழுதும் முறை இல்லாமல் இருந்திருக்கிறது. கிரேக்கரின் வருகையால் அசோகர் காலத்தில் கிரேக்கரின் எழுத்துக்களைப் பின்பற்றி அசோக பிராமி எழுத்து முறையினை அசோகர் ஏற்படுத்தி வைத்தார். ஆனால் தமிழ் பிராமி எழுத்துக்களும் அதே காலக்கட்டத்தில் தோன்றியது. அதன் தோற்றம் அசோகரின் பிராமியில் இருந்து வந்தவையா? அல்லது கிரேக்கர் பீனிசியரின் அரேபியரின் வியாபரத் தொடர்பால் தமிழ் பிராமி ஏற்படுத்தப்பட்டதா என்பது இன்னும் சரியாக ஊர்சிதப்படுத்தப்படவில்லை. காரணம், அசோகரின் ஆளுகைக்குள் பண்டைய தமிழகம் வந்திருக்கவில்லை. அசோகரின் பிராமியில் இருந்து தமிழ் பிராமி ஒலியன்கள் பெரிதும் மாறுபடுவதுமே. அசோகரின் பிராமியில் ba, bha, ga, gha, என ஒலிகளுக்கு தனி எழுத்து கொடுக்கப்பட்டு வடமொழி எழுதுவதற்கு உகந்ததாக இருந்திருக்கிறது. இத்தகைய எழுத்துக்கள் தமிழில் இல்லை. ஆனால் தமிழ் பிராமியில் ழ, ற போன்ற எழுத்துக்கள் உள்ளன. இவைய் அசோகனின் பிராமியில் இல்லை. அசோக பிராமி தமிழில் எடுத்து கையாண்டு இருந்தால் தானாகவே ba, bha, போன்ற அழுத்தமான ஒலிகளுக்கு தமிழ் எழுத்துக்கள் தோன்றி இருக்கும் அல்லவா.. ஆகவே இந்திய எழுத்துக்கள் உருவாகும் போது தனித்தனியே வடபிராமி, தென் பிராமி உருவாகி இருக்க வேண்டும்.
தமிழில் எழுத்துக்கள் 247 எனப் படித்து இருப்போம் ஆனால்உண்மையில் தமிழின் எழுத்துக்கள் 31 ஆகும். அவை உயிர், மெய், ஆய்தம். உயிர் மெய் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் புணர்ந்து வருவதால் உண்டான எழுத்துக்கள். தமிழ் எழுத்துக்கள் தமிழ் பிராமியாக இருந்து பிற்காலத்தில் வட்டெழுத்துகளாக மாற்றம் ஆனது. ஒலைச் சுவடிகளில் தமிழ் பிராமி எழுதப் படுதல் கடினம் என்பதால் அது வட்டெழுத்துக்களாக மாற்றம் கண்டன. வட்டெழுத்துக்கள் பாண்டிய நாட்டிலேயே பெரிதும் பயன்பாட்டில் இருந்தன. அந்த வட்டெழுத்தினையே சோழர்களும், சேரர்களும் பயன்படுத்தியும் வந்தனர். இந்த வட்டெழுத்தினை அழித்து சோழர்கள் பிற்கால் இன்றைக்கும் பயன்படும் தமிழ் எழுத்தினை உருவாக்கி புழக்கத்தில் விட்டனர். எழுத்தின் வரி வடிவங்கள் மாறினாலும் தமிழ் பிராமி எழுத்து முதல் இன்று வரை தமிழ் எழுத்தின் ஒலி மாற்றம் காணவில்லை எனலாம்.
கிரந்தம்:

கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் வேறு வேறானவை

கிரந்தம் என்றால் என்ன என்று இன்று பலபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழில் கிரந்த எழுத்துக்களும் உள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் கிரந்தம் ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ. இந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களோடு இணைந்து பயன்பட்டு வரும் கிரந்த எழுத்துக்கள் ஆகும். வடநாட்டில் இருந்து சங்க மருவிய காலத்தில் குடியேறிய மக்கள் சமணர், பௌத்தர், பிராமணர் போன்றோர் தமது மொழியினை எழுத கிரந்த எழுத்துக்களை உருவாக்கினர். கிரந்த எழுத்துக்கள் பெரிதும் சமஸ்கிருதம், பாலி மொழிகளை எழுதவே இந்த எழுத்துக்களை உருவாக்கினர். அதாவது வடமொழியினை வட நாட்டில் வாழ்ந்த மக்கள் நகரியில் எழுத தொடங்கினர் . ஆனால் தென்னாட்டுக்கு வந்த சிறுபான்மையின மக்கள் கிரந்த எழுத்தை உருவாக்கினர் எனலாம். தமிழ் மன்னர்களின் ஆட்சி சிதைந்து தமிழகம் களப்பிரர் கைக்கு சென்ற பொழுது ஆட்சியாளர்களாக இருந்த களப்பிர மன்னர்கள் சமஸ்கிருதத்தையே ஆட்சி மொழியாக கொண்டனர். அவர்களின் கொடையால் கிரந்தம் ஆட்சிக் கட்டிலும் ஏறியது.
இதனையே தமிழின் இருண்டகாலம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஒப்பு நோக்க வேண்டியது என்னவென்றால். தென்னாட்டுக்கு முதலி வந்த சமணரும், பௌத்தரும் தமது சமய நூல்களை பெரிதும் தமிழில் இயற்றினர். அவர்கள் கிரந்தத்தை தமிழில் பயன்படுத்தவில்லை. தமது சமய நூல்களைப் பாலி, சமஸ்கிருத மொழிகளில் எழுதும் போதும் அவர்கள் கிரந்தத்தினைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்தினை பயன்படுத்தி உள்ளனர். இரண்டையும் கலக்கவில்லை. தமிழகம் பல்லவரின் ஆட்சிக்கு வந்த பின கிரந்தம் தமிழகம் எங்கும் ஆட்சியாளார்களால் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன. அவர்கள் காலத்தில் தான் கிரந்த எழுத்துக்கள் கன்னடம், தெலுங்கு, மாலைதீவுகள், தென் கிழக்காசியா ஆகிய நாடுகளுக்கு பரவின எனலாம். இன்றும் தாய்லாந்து, சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகள் கிரந்தத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். கிரந்தத்திலிருந்தே கன்னடம், தெலுங்கு எழுத்துக்கள் உருவாகின. அந்தக் காலக்கட்டத்தில் திராவிட மொழிகளில் சமஸ்கிருதம் மானவாரியாக கலக்கப்பட்டன. சமஸ்கிருத சொற்களை தமிழில் எடுத்தாள எழுத்துக்கள் இல்லாததால் கிரந்த எழுத்துக்கள் நடைமுறைக்கு வந்தது. இருந்தாலும் இந்தக் காலக்கட்டங்களிலும் தமிழையும் சமஸ்கிருதம், மணிபிராவளம் சார்ந்த மொழிகளையும் தனித்தனி மொழிகளாகவே பாவித்து வந்தனர். அதாவது தமிழ் மொழியில் தேவையான இடங்களில் சமஸ்கிருத சொற்களை தமிழ்ப் படுத்தியும் ( உதா. அமிர்தம் -அமிழ்தம், கஷாயம் – காழகம்), சில இடங்களில் அப்படியே கிரந்த எழுத்தினையும் பயன்படுத்தியும் வந்தனர். ஆனால் ஒரு இடத்திலும் தமிழ் மொழி கிரந்த எழுத்தில் எழுத்ப்படவில்லை. அதாவது இன்றைய ஆங்கில சொற்கள் தமிழில் இருந்தாலும், பயன்படுத்தினாலும் ( உதா. பஸ், ஏர்போர்ட், ) தேவைக்கு ஏற்ப சில கிரந்த எழுத்துக்களும், சில சொற்கள் தமிழில் எழுதி வருவதைப் போல எழுதி வந்தனர். ஆனால் ஒரு போதும் தமிழ் மொழி கிரந்தத்தில் எழுதப்படவில்லை.
அதாவது இன்றைய நிலையில் தமிழ் மொழி ஆங்கில எழுத்தால் எழுதப்பட்டு நூலாக வருகிறாதா ? இல்லையே இதே நிலை தான் அன்றும் சமஸ்கிருத சொற்கள் தமிழில் பயன்பட்டு வந்தன. ஆனால் இங்கிருந்த வடமொழியாளர்கள் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். மாறாக நகரியினைப் பயன்படுத்தவில்லை. இந்த நிலை நீடித்ததால் இங்கிருந்த வடமொழியாளர்களின் மொழியில் தமிழ் சொற்கள் ஏராளமாக கலந்து மணிப்பிரவாளமாக மாற்றம் கொண்டது. மணிப்பிரவாள நடையில் சமய இலக்கியங்கள் சில உருவாகின. ஆனால் அன்றும் மணிப்பிரவாளத்தையும் தமிழையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை இரண்டும் தனித்தனி மொழியினைப் போன்ற செயல்பட்டு வந்தன. மணிபிராவளத்தின் தாக்கத்தால் சேரலம் மலையாளமாக உருவாகியது, கன்னடம், தெலுங்கு மொழிகள் உருவாகின. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட மட்டவிலாச பிராகசன என்னும் நூல் கிரந்ததில் எழுதப்பட்டாலும் அது தமிழ் நூல் இல்லை. அது பிராகிருதம் சமஸ்கிருதம் கலந்த நடை. இதை அடியொற்றி வைணவ இலக்கியங்கள் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டன. அவை சமஸ்கிருதம் தமிழ் கலந்து எழுதப்பட்டன. ஆனால் அவை தமிழ் எனக் கொள்ளப்படவில்லை. ஆனால் மணிப்பிரவாள நடை மக்களுக்கு புரியாத படியாலும், மக்களிடம் பெரிதும் ஆர்வம் இல்லாததாலும். மணிபிராவாளம் வழக்கொழிந்து போயின. ஒரு வேளாய் மணிப்பிரவாள தொடர்ந்து தமிழகத்தில் இருந்திருந்தால் தற்கால் செந்தமிழ் மொழி இல்லாமல் போயிருக்கும். ஆனால் தமிழகத்தின் சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர்த்து கேரளம், கன்னடம், ஆந்திரம், சிங்களம் ஆகிய பகுதியில் இருந்த மக்கள் கிரந்த எழுத்தினைப் பயன்படுத்தினதாலும், வரன்முறை இன்றி சமஸ்கிருத சொற்களைக் கலந்தததாலும் அவர்களின் திராவிட மொழி சிதைந்து தனித்தனி மொழிகளாக மாற்றம் கண்டன. ஆனால் தமிழர்கள் மணிப்பிரவாளத்தை ஒதுக்கினப் படியால் தமிழ் மட்டும் தப்பித்துக் கொண்டது.
சமஸ்கிருத எழுத்து எது?

கிரந்த எழுத்துக்கள், தமிழைப் போன்று இருந்தாலும் தமிழ் இல்லை. இதைத் தான் தமிழில் சேர்க்க முனைகிறார்கள் இப்போது

பழங்காலம் முதலே சமஸ்கிருத மொழி ஒரு எழுத்து மரபினைப் பேணாமல் இரண்டு வித எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தது. ஒன்று நகரி எழுத்து, இதுவே இன்று மேம்படுத்தப்பட்டு தேவநகரி எழுத்தாக மாறியுள்ளது. தற்கால இந்தி மொழி இந்த எழுத்தினாலே எழுதப் படுகிறது. மற்றொன்று கிரந்தம் தற்சமயம் கிரந்தத்தில் சமஸ்கிருதம் பெரிதும் எழுதப்படுவதே இல்லை. இந்திய விடுதலைக்கு பின் சமஸ்கிருத மொழியில் இருந்த சிக்கலை அறிந்த இந்திய நடுவண அரசு சமஸ்கிருதத்தை எழுத நகரி எழுத்துக்களையே பரிந்துரை செய்து அதனை நடைமுறையிலும் கொண்டு வந்தது. இதனால் சமஸ்கிருத மொழியில் இருந்த எழுத்துக் சிக்கல் தீர்ந்தது. கிரந்தத்தில் இருந்த பல்வேறு இலக்கியங்கள் தேவநகரியில் இன்று மாற்றம் செய்யப்பட்டு விட்டது. கிரந்தத்தில் இருந்து உருவான மலையாள லிபி, கன்னட-தெலுங்கு லிபி, சிங்கள் லிபி ஆகியவை அந்தந்த மொழிகள் எழுதப் பயன்பட்டு வருகின்றன. கிரந்ததில் இருந்து உருவான தாய், பர்மிய லிபியிக்களும் வழக்கில் இருக்கின்றன. ஆனால் மலாய, இந்தோனோசிய, தக்கலோக் ஆகியவை ரோமன் எழுத்துக்களுக்கு மாறிவிட்டன. இதற்கு சமயம் சார்ந்த காரணங்களும் இருக்கலாம். முறையே அவர்கள் இஸ்லாமிய, கிறித்தவ மதங்களுக்கு மாறிவிட்டன. ஆனால் சமஸ்கிருதத்துக்கு என உருவான கிரந்தம் சமஸ்கிருதம் எழுதப் பயன்படாமல் போய்விட்டது.
தமிழில் கிரந்தம் தேவையா?
இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ம் நாள், சிறீ ரமண சர்மா என்ற பார்ப்பனர், யுனிகோடு சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீ ரமண சர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும், ப, பா, மா, உட்ட், தா உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!.“இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் “சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ‘ஸ்ரீ சதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ்’ மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ம் ஆண்டு வெளியான டி.எளி. நாராயண சாஸ்திரி என்பாரின் ‘போஜ சரிதம்’ என்னும் நூலுமாகும்.இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து ‘விரிவாக்கப்பட்ட தமிழ்’ என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது.
அதாவது சிறீ ரமண சர்மாவின் கிரந்த எழுத்துக்களைப் பாதுக்காக்கும் முயற்சிக்கு அவர் சமஸ்கிருத மொழியினைத் தான் பயன்ப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது கொங்கனி மொழி மூன்று எழுத்து முறைகளைக் கொண்டிருப்பது போல், சமஸ்கிருதத்தை எழுத கிரந்தத்துக்கு இடம் கோரி இருக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை. மாறாக அவர் தமிழ் தானே இருக்கு இதில் சேர்த்து விடலாம் என்று நினைத்துவிட்டார். இது எப்படி இருக்கின்றது என்றால் தமிழில் ழ, ள, ற, ன, ஒலியன்களை எழுத ஆங்கிலத்தில் தனி எழுத்துக்களை ஒதுக்க வேண்டும் என்று நாம் கோரினால் என்னவாகும்? ஏற்கன்வே இந்திய ஆங்கிலயே இலக்கியங்களில் ழ என்பதை zh என்று எழுதுகிறோம். இதற்கு எல்லாம் ஆங்கிலத்தில் இடம் கேட்டால் விடுவார்களா அவர்கள்?
குழம்பிப் போன தமிழர்களுக்கு.
இந்த யூனிகோட் பிரச்சினை வெடித்ததும் சில தமிழர்கள் குழம்பி போய் விட்டனர். அதாவது தமிழில் இருக்கும் ஜ,ஷ,ஸ,ஹ, போன்ற கிரந்தத்தைத் தான் நீக்கப் போகிறார்களோ எனவும். அப்படி என்றால் ஸ்டாலின் போன்ற பெயர்களை எப்படி எழுதுவார்கள் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்களுக்கு சொல்வது எல்லாம் இந்த ஐந்து எழுத்துக்களும் ஏற்கனவே யூனிக்கோட்டில் உள்ளன. அவை நீக்கப்படப் போவதில்லை. இந்த ஐந்து எழுத்துக்களோடு மேலும் ஐந்து உயிர் எழுத்துக்களும் 21 உயிர்மெய் எழுத்துக்களும் தமிழில் சேர்ந்தால் என்னவாகும்? யோசித்துப் பாருங்கள் தமிழில் மொத்த எழுத்துக்கள் 544 ஆகிவிடும். ஏற்கனவே நமது பிள்ளைகள் 247 எழுத்துக்களைப் படிக்க முடியாமல் திணறி வருவது அனைவரும் அறிந்ததே. இப்போது புரிந்ததா நாம் எதிர்ப்பது எதனை என்று? அதாவது தமிழ் எழுத்துக்கள் வேறு, கிரந்தம் வேறு. தற்சமயம் நாம் கிரந்ததில் இருந்து ஐந்து எழுத்துக்களை மட்டும் கடன் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.  கிரந்ததிலேயே தமிழை எழுதுவது தமிழ் எழுத்துக்களை அழிக்கும் முயற்சியாகும்.  தமிழ் எழுத்துகளுக்கும் கிரந்தத்துக்கும் இருக்கும் சில வரி வடிவ உருவ ஒற்றுமையை வைத்துக் கொண்டு இரண்டும் ஒன்று என வாதிடுவது, தமிழ் மலையாள எழுத்துகளின் உருவ ஒற்றுமையை வைத்து இரண்டும் ஒன்று எனக் கூறுவது போல் ஆகும்.
என்ன தான் தீர்வு?
நமக்கு எழும் முதல் கேள்வி சமஸ்கிருதத்தை ஏன் தமிழில் எழுத வேண்டும், அதற்கு புதிதாக எழுத்துக்களை சேர்ப்பது சரியா. அப்படியானாள் அரபி சொற்களை தமிழில் எழுத அரவி எழுத்துக்களை யூனிக்கோட்டில் சேர்த்தால் ஏற்றுக் கொள்வோமா?
ஆங்கிலம் படிக்க ஆங்கில எழுத்துக்களைப் படிக்க வேண்டும், சீனம் எழுத சீன எழுத்துக்களைத் தான் பயன்படுத்த முடியும், அதே போல சமஸ்கிருதம் எழுத தேவ நகரியைத் தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு உடன்படாதவர்கள் சமஸ்கிருத எழுத்தினை தேவநகரியில் இருந்து கிரந்தத்துக்கு மாற்றலாம். இல்லை என்றால் நடுவண் அரசிடம் கோரி இரண்டு எழுத்து முறைகளையும் பயன்படுத்தலாம். யூனிக்கோட்டில் கிரந்த சமஸ்கிருத்தக்கு தனி இடம் கோரலாம்.
ஏற்கனவே மலையாள லிபியில் சமஸ்கிருதத்தை எழுத வழி உண்டு. எழுத்துக்களுக்கு பஞ்சம் இல்லை. ஆகவே சமஸ்கிருதத்தை எழுத மலையாள லிபியை பயன்படுத்தலாம். தமிழ் கிரந்தமும் மலையாள லிபியும் 99 சதவீதம் ஒரே வரி வடிவத்தை கொண்டிருப்பவை. ஆகவே சமஸ்கிருதம் எழுத முனையும் ஒரு சதவீதம் தமிழர்களுக்காக 99 சதவீதம் தமிழர்கள் புது எழுத்துக்களைப் படிக்க வேண்டுமோ. அது மேலும் நம் மீது புது சுமையாக இருக்கும். இதனால் தமிழ் மீது பற்றுக் குறையுமே ஒழிய தமிழ் படிக்கும் ஆர்வம் வராமல் போகலாம். குறிப்பாக இளைய தலைமுறைத் தமிழர்கள் குழம்பி போவார்கள். ஆகவே சமஸ்கிருதத்தை தென்மொழியில் எழுதிப் படிக்க நினைப்பவர்கள் மலையாள லிபியைப் பயன்படுத்துங்கள் யார் வேண்டாம் என்றது. கிரந்த எழுத்தைக் காப்பாற்றத் தான் வேண்டும் என்றால் சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்துக்கு இடம் வாங்க்கி கொள்ளுங்கள்.
தமிழில் இருக்கும் ஜ,ஷ,ஸ,ஹ,ஶ,ஸ்ரீ போன்ற எழுத்துகளே தேவையற்றது தான். இருப்பினும் அதன் பயன்பாட்டையும் குறைக்கலாம். ஸ்ரீ என்ற எழுத்து தேவையே இல்லை. அதற்கு சிறீ என்று தமிழிலேயே எழுதலாம். ஜ, ஷ, ஸ, ஹ என்பதைக் கூட மாற்றித் தமிழிலயே எழுத வழிவகை செய்யலாம்.
எம்மை பொறுத்த வரைக்கு தமிழ் மேலும் எளிமை படுத்தப் பட வேண்டும். அதன் எழுத்துக்களை அதிகரித்து தேவை இல்லாத சுமையை வருங்கால சந்ததிதிகள் மேல் திணிப்பதால். அவர்கள் தமிழை முற்றுமாக புறந்தள்ளி ஆங்கில மொழியே விரும்பும் நிலை ஏற்படலாம் அல்லவா?
சிந்தியிங்கள்.. செயல்படுங்கள்….

தமிழ் எழுத்தும் ஒருங்குறி அரசியலும்.

VANDALISM

கிரந்த எழுத்து சமஸ்கிருத மொழியினை எழுதப் பயன்பட்டதைக் காட்டும் பல்லவ கிரந்த கல்வெட்டு, மாமல்லபுரம்.

தமிழ் மொழியானது இந்திய மொழிகளிலேயே மிகப் பழமையான ஒரு மொழியாகும். தமிழ் மொழியின் தனித்தன்மையே மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரிதும் . மாறாமல் இயங்கி வரும் சிறப்பே ஆகும். தொல்காப்பியர்க் காலத்து தமிழுக்கும் . இப்போதைய தமிழுக்கும் வேறுபாடுகள் மிகவும் குறைவு. ஆனால் சமஸ்கிருத மொழியோ, அரபி மொழியோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதே ஒற்றுமையோடு இன்றில்லை எனலாம். தற்சமயம் எழுந்துள்ள தமிழ் ஒருங்குறியில் புதிய எழுத்துக்களை இணைக்க மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகளை மக்களில் பெரும்பாலானோர் பெரிதான தெளிவு அற்ற நிலையில் இருப்பதை காண முடிகிறது. அதனைப் போக்கவே இந்தப் பதிவினை இடுகிறோம். தமிழ் மக்களுக்கு இருக்கும் தனிக்குணமே எந்தவொரு விடயத்தையும் பல்கி அணுகி ஆராய்வது இல்லை. எதைச் சொன்னாலும் கண்மூடித் தனமாக எதிர்ப்பார்கள், இல்லை ஆதரிப்பார்கள், opponents point of view-ல் இருந்து எதனையுமே சிந்திப்பதில்லை. அதனால் தெளிவும் கிட்டுவதில்லை.

தமிழ் ஒருங்குறி:

இன்று தமிழர்களில் பெரும்பாலானோர் கணணியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுதும் கணணியின் பயன்பாடு பெருகிய பின்னர் தத்தம் தாய்மொழிகளில் கணணியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைப் பெருகிய கொண்டு வருவது அறிந்ததே. அதற்கு தமிழ் மட்டும் என்ன விதிவிலக்கா? இல்லை தமிழில் கணணியின் ஊடாக இணையத்தில் எழுதுவோர், பதிவோர், கிறுக்குவோர்கள் ஏராளம். ஒரு மொழியின் இருப்பை இத்தகு செயல் எப்போதுமே உறுதி செய்துக் கொண்டே இருக்கும். இப்படி தமிழில் எழுதுவதற்கு உதவியாக இருப்பது யுனிகோட் என்னும் எழுத்து முறை. இது கணணிப் பயன்ப்பாட்டுக்கு உருவாக்கப் பட்டவை.
யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன.
கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணையத்தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும். ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

தமிழ் எழுத்து:

தமிழ் மொழி தனக்கென ஒரு இலக்கண வரம்பைக் கொண்டதொரு மொழியாகும். ஒரு மொழி இப்படித் தான் பேசப்படல் வேண்டும், எழுதப் படல் வேண்டும் என்று இலக்கண வகுத்து standardise செய்யப்பட்டுள்ளது. இப்படியான வரன்முறைகள் இல்லாத பல மொழிகள் காலப் போக்கில் சிதைந்தும், கலந்தும்,. உருமாறியும் போய்விட்டன. ஆகவே ஒரு மொழி நீண்டகாலம் சீராக இயங்க இலக்கணங்கள் அவசியப் படுகின்றன. தமிழ் மொழி உட்பட அனைத்து தெற்காசிய மொழிகளின் எழுத்தும் பிராமி என்னும் எழுத்தில் இருந்து உருவாகி வந்தவை ஆகும். அசோகரின் காலத்துக்கு முன இந்தியாவில் எழுதும் முறை இல்லாமல் இருந்திருக்கிறது. கிரேக்கரின் வருகையால் அசோகர் காலத்தில் கிரேக்கரின் எழுத்துக்களைப் பின்பற்றி அசோக பிராமி எழுத்து முறையினை அசோகர் ஏற்படுத்தி வைத்தார். ஆனால் தமிழ் பிராமி எழுத்துக்களும் அதே காலக்கட்டத்தில் தோன்றியது. அதன் தோற்றம் அசோகரின் பிராமியில் இருந்து வந்தவையா? அல்லது கிரேக்கர் பீனிசியரின் அரேபியரின் வியாபரத் தொடர்பால் தமிழ் பிராமி ஏற்படுத்தப்பட்டதா என்பது இன்னும் சரியாக ஊர்சிதப்படுத்தப்படவில்லை. காரணம், அசோகரின் ஆளுகைக்குள் பண்டைய தமிழகம் வந்திருக்கவில்லை. அசோகரின் பிராமியில் இருந்து தமிழ் பிராமி ஒலியன்கள் பெரிதும் மாறுபடுவதுமே. அசோகரின் பிராமியில் ba, bha, ga, gha, என ஒலிகளுக்கு தனி எழுத்து கொடுக்கப்பட்டு வடமொழி எழுதுவதற்கு உகந்ததாக இருந்திருக்கிறது. இத்தகைய எழுத்துக்கள் தமிழில் இல்லை. ஆனால் தமிழ் பிராமியில் ழ, ற போன்ற எழுத்துக்கள் உள்ளன. இவைய் அசோகனின் பிராமியில் இல்லை. அசோக பிராமி தமிழில் எடுத்து கையாண்டு இருந்தால் தானாகவே ba, bha, போன்ற அழுத்தமான ஒலிகளுக்கு தமிழ் எழுத்துக்கள் தோன்றி இருக்கும் அல்லவா.. ஆகவே இந்திய எழுத்துக்கள் உருவாகும் போது தனித்தனியே வடபிராமி, தென் பிராமி உருவாகி இருக்க வேண்டும்.
தமிழில் எழுத்துக்கள் 247 எனப் படித்து இருப்போம் ஆனால்உண்மையில் தமிழின் எழுத்துக்கள் 31 ஆகும். அவை உயிர், மெய், ஆய்தம். உயிர் மெய் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் புணர்ந்து வருவதால் உண்டான எழுத்துக்கள். தமிழ் எழுத்துக்கள் தமிழ் பிராமியாக இருந்து பிற்காலத்தில் வட்டெழுத்துகளாக மாற்றம் ஆனது. ஒலைச் சுவடிகளில் தமிழ் பிராமி எழுதப் படுதல் கடினம் என்பதால் அது வட்டெழுத்துக்களாக மாற்றம் கண்டன. வட்டெழுத்துக்கள் பாண்டிய நாட்டிலேயே பெரிதும் பயன்பாட்டில் இருந்தன. அந்த வட்டெழுத்தினையே சோழர்களும், சேரர்களும் பயன்படுத்தியும் வந்தனர். இந்த வட்டெழுத்தினை அழித்து சோழர்கள் பிற்கால் இன்றைக்கும் பயன்படும் தமிழ் எழுத்தினை உருவாக்கி புழக்கத்தில் விட்டனர். எழுத்தின் வரி வடிவங்கள் மாறினாலும் தமிழ் பிராமி எழுத்து முதல் இன்று வரை தமிழ் எழுத்தின் ஒலி மாற்றம் காணவில்லை எனலாம்.

கிரந்தம்:

கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் வேறு வேறானவை
கிரந்தம் என்றால் என்ன என்று இன்று பலபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழில் கிரந்த எழுத்துக்களும் உள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் கிரந்தம் ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ. இந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களோடு இணைந்து பயன்பட்டு வரும் கிரந்த எழுத்துக்கள் ஆகும். வடநாட்டில் இருந்து சங்க மருவிய காலத்தில் குடியேறிய மக்கள் சமணர், பௌத்தர், பிராமணர் போன்றோர் தமது மொழியினை எழுத கிரந்த எழுத்துக்களை உருவாக்கினர். கிரந்த எழுத்துக்கள் பெரிதும் சமஸ்கிருதம், பாலி மொழிகளை எழுதவே இந்த எழுத்துக்களை உருவாக்கினர். அதாவது வடமொழியினை வட நாட்டில் வாழ்ந்த மக்கள் நகரியில் எழுத தொடங்கினர் . ஆனால் தென்னாட்டுக்கு வந்த சிறுபான்மையின மக்கள் கிரந்த எழுத்தை உருவாக்கினர் எனலாம். தமிழ் மன்னர்களின் ஆட்சி சிதைந்து தமிழகம் களப்பிரர் கைக்கு சென்ற பொழுது ஆட்சியாளர்களாக இருந்த களப்பிர மன்னர்கள் சமஸ்கிருதத்தையே ஆட்சி மொழியாக கொண்டனர். அவர்களின் கொடையால் கிரந்தம் ஆட்சிக் கட்டிலும் ஏறியது.
இதனையே தமிழின் இருண்டகாலம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஒப்பு நோக்க வேண்டியது என்னவென்றால். தென்னாட்டுக்கு முதலி வந்த சமணரும், பௌத்தரும் தமது சமய நூல்களை பெரிதும் தமிழில் இயற்றினர். அவர்கள் கிரந்தத்தை தமிழில் பயன்படுத்தவில்லை. தமது சமய நூல்களைப் பாலி, சமஸ்கிருத மொழிகளில் எழுதும் போதும் அவர்கள் கிரந்தத்தினைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்தினை பயன்படுத்தி உள்ளனர். இரண்டையும் கலக்கவில்லை. தமிழகம் பல்லவரின் ஆட்சிக்கு வந்த பின கிரந்தம் தமிழகம் எங்கும் ஆட்சியாளார்களால் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன. அவர்கள் காலத்தில் தான் கிரந்த எழுத்துக்கள் கன்னடம், தெலுங்கு, மாலைதீவுகள், தென் கிழக்காசியா ஆகிய நாடுகளுக்கு பரவின எனலாம். இன்றும் தாய்லாந்து, சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகள் கிரந்தத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். கிரந்தத்திலிருந்தே கன்னடம், தெலுங்கு எழுத்துக்கள் உருவாகின. அந்தக் காலக்கட்டத்தில் திராவிட மொழிகளில் சமஸ்கிருதம் மானவாரியாக கலக்கப்பட்டன. சமஸ்கிருத சொற்களை தமிழில் எடுத்தாள எழுத்துக்கள் இல்லாததால் கிரந்த எழுத்துக்கள் நடைமுறைக்கு வந்தது. இருந்தாலும் இந்தக் காலக்கட்டங்களிலும் தமிழையும் சமஸ்கிருதம், மணிபிராவளம் சார்ந்த மொழிகளையும் தனித்தனி மொழிகளாகவே பாவித்து வந்தனர். அதாவது தமிழ் மொழியில் தேவையான இடங்களில் சமஸ்கிருத சொற்களை தமிழ்ப் படுத்தியும் ( உதா. அமிர்தம் -அமிழ்தம், கஷாயம் – காழகம்), சில இடங்களில் அப்படியே கிரந்த எழுத்தினையும் பயன்படுத்தியும் வந்தனர். ஆனால் ஒரு இடத்திலும் தமிழ் மொழி கிரந்த எழுத்தில் எழுத்ப்படவில்லை. அதாவது இன்றைய ஆங்கில சொற்கள் தமிழில் இருந்தாலும், பயன்படுத்தினாலும் ( உதா. பஸ், ஏர்போர்ட், ) தேவைக்கு ஏற்ப சில கிரந்த எழுத்துக்களும், சில சொற்கள் தமிழில் எழுதி வருவதைப் போல எழுதி வந்தனர். ஆனால் ஒரு போதும் தமிழ் மொழி கிரந்தத்தில் எழுதப்படவில்லை.
அதாவது இன்றைய நிலையில் தமிழ் மொழி ஆங்கில எழுத்தால் எழுதப்பட்டு நூலாக வருகிறாதா ? இல்லையே இதே நிலை தான் அன்றும் சமஸ்கிருத சொற்கள் தமிழில் பயன்பட்டு வந்தன. ஆனால் இங்கிருந்த வடமொழியாளர்கள் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். மாறாக நகரியினைப் பயன்படுத்தவில்லை. இந்த நிலை நீடித்ததால் இங்கிருந்த வடமொழியாளர்களின் மொழியில் தமிழ் சொற்கள் ஏராளமாக கலந்து மணிப்பிரவாளமாக மாற்றம் கொண்டது. மணிப்பிரவாள நடையில் சமய இலக்கியங்கள் சில உருவாகின. ஆனால் அன்றும் மணிப்பிரவாளத்தையும் தமிழையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை இரண்டும் தனித்தனி மொழியினைப் போன்ற செயல்பட்டு வந்தன. மணிபிராவளத்தின் தாக்கத்தால் சேரலம் மலையாளமாக உருவாகியது, கன்னடம், தெலுங்கு மொழிகள் உருவாகின. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட மட்டவிலாச பிராகசன என்னும் நூல் கிரந்ததில் எழுதப்பட்டாலும் அது தமிழ் நூல் இல்லை. அது பிராகிருதம் சமஸ்கிருதம் கலந்த நடை. இதை அடியொற்றி வைணவ இலக்கியங்கள் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டன. அவை சமஸ்கிருதம் தமிழ் கலந்து எழுதப்பட்டன. ஆனால் அவை தமிழ் எனக் கொள்ளப்படவில்லை. ஆனால் மணிப்பிரவாள நடை மக்களுக்கு புரியாத படியாலும், மக்களிடம் பெரிதும் ஆர்வம் இல்லாததாலும். மணிபிராவாளம் வழக்கொழிந்து போயின. ஒரு வேளாய் மணிப்பிரவாள தொடர்ந்து தமிழகத்தில் இருந்திருந்தால் தற்கால் செந்தமிழ் மொழி இல்லாமல் போயிருக்கும். ஆனால் தமிழகத்தின் சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர்த்து கேரளம், கன்னடம், ஆந்திரம், சிங்களம் ஆகிய பகுதியில் இருந்த மக்கள் கிரந்த எழுத்தினைப் பயன்படுத்தினதாலும், வரன்முறை இன்றி சமஸ்கிருத சொற்களைக் கலந்தததாலும் அவர்களின் திராவிட மொழி சிதைந்து தனித்தனி மொழிகளாக மாற்றம் கண்டன. ஆனால் தமிழர்கள் மணிப்பிரவாளத்தை ஒதுக்கினப் படியால் தமிழ் மட்டும் தப்பித்துக் கொண்டது.

சமஸ்கிருத எழுத்து எது?

கிரந்த எழுத்துக்கள், தமிழைப் போன்று இருந்தாலும் தமிழ் இல்லை. இதைத் தான் தமிழில் சேர்க்க முனைகிறார்கள் இப்போது
பழங்காலம் முதலே சமஸ்கிருத மொழி ஒரு எழுத்து மரபினைப் பேணாமல் இரண்டு வித எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தது. ஒன்று நகரி எழுத்து, இதுவே இன்று மேம்படுத்தப்பட்டு தேவநகரி எழுத்தாக மாறியுள்ளது. தற்கால இந்தி மொழி இந்த எழுத்தினாலே எழுதப் படுகிறது. மற்றொன்று கிரந்தம் தற்சமயம் கிரந்தத்தில் சமஸ்கிருதம் பெரிதும் எழுதப்படுவதே இல்லை. இந்திய விடுதலைக்கு பின் சமஸ்கிருத மொழியில் இருந்த சிக்கலை அறிந்த இந்திய நடுவண அரசு சமஸ்கிருதத்தை எழுத நகரி எழுத்துக்களையே பரிந்துரை செய்து அதனை நடைமுறையிலும் கொண்டு வந்தது. இதனால் சமஸ்கிருத மொழியில் இருந்த எழுத்துக் சிக்கல் தீர்ந்தது. கிரந்தத்தில் இருந்த பல்வேறு இலக்கியங்கள் தேவநகரியில் இன்று மாற்றம் செய்யப்பட்டு விட்டது. கிரந்தத்தில் இருந்து உருவான மலையாள லிபி, கன்னட-தெலுங்கு லிபி, சிங்கள் லிபி ஆகியவை அந்தந்த மொழிகள் எழுதப் பயன்பட்டு வருகின்றன. கிரந்ததில் இருந்து உருவான தாய், பர்மிய லிபியிக்களும் வழக்கில் இருக்கின்றன. ஆனால் மலாய, இந்தோனோசிய, தக்கலோக் ஆகியவை ரோமன் எழுத்துக்களுக்கு மாறிவிட்டன. இதற்கு சமயம் சார்ந்த காரணங்களும் இருக்கலாம். முறையே அவர்கள் இஸ்லாமிய, கிறித்தவ மதங்களுக்கு மாறிவிட்டன. ஆனால் சமஸ்கிருதத்துக்கு என உருவான கிரந்தம் சமஸ்கிருதம் எழுதப் பயன்படாமல் போய்விட்டது.

தமிழில் கிரந்தம் தேவையா?

இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ம் நாள், சிறீ ரமண சர்மா என்ற பார்ப்பனர், யுனிகோடு சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீ ரமண சர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும், ப, பா, மா, உட்ட், தா உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!.“இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் “சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ‘ஸ்ரீ சதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ்’ மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ம் ஆண்டு வெளியான டி.எளி. நாராயண சாஸ்திரி என்பாரின் ‘போஜ சரிதம்’ என்னும் நூலுமாகும்.இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து ‘விரிவாக்கப்பட்ட தமிழ்’ என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது.
அதாவது சிறீ ரமண சர்மாவின் கிரந்த எழுத்துக்களைப் பாதுக்காக்கும் முயற்சிக்கு அவர் சமஸ்கிருத மொழியினைத் தான் பயன்ப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது கொங்கனி மொழி மூன்று எழுத்து முறைகளைக் கொண்டிருப்பது போல், சமஸ்கிருதத்தை எழுத கிரந்தத்துக்கு இடம் கோரி இருக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை. மாறாக அவர் தமிழ் தானே இருக்கு இதில் சேர்த்து விடலாம் என்று நினைத்துவிட்டார். இது எப்படி இருக்கின்றது என்றால் தமிழில் ழ, ள, ற, ன, ஒலியன்களை எழுத ஆங்கிலத்தில் தனி எழுத்துக்களை ஒதுக்க வேண்டும் என்று நாம் கோரினால் என்னவாகும்? ஏற்கன்வே இந்திய ஆங்கிலயே இலக்கியங்களில் ழ என்பதை zh என்று எழுதுகிறோம். இதற்கு எல்லாம் ஆங்கிலத்தில் இடம் கேட்டால் விடுவார்களா அவர்கள்?

குழம்பிப் போன தமிழர்களுக்கு.

இந்த யூனிகோட் பிரச்சினை வெடித்ததும் சில தமிழர்கள் குழம்பி போய் விட்டனர். அதாவது தமிழில் இருக்கும் ஜ,ஷ,ஸ,ஹ, போன்ற கிரந்தத்தைத் தான் நீக்கப் போகிறார்களோ எனவும். அப்படி என்றால் ஸ்டாலின் போன்ற பெயர்களை எப்படி எழுதுவார்கள் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்களுக்கு சொல்வது எல்லாம் இந்த ஐந்து எழுத்துக்களும் ஏற்கனவே யூனிக்கோட்டில் உள்ளன. அவை நீக்கப்படப் போவதில்லை. இந்த ஐந்து எழுத்துக்களோடு மேலும் ஐந்து உயிர் எழுத்துக்களும் 21 உயிர்மெய் எழுத்துக்களும் தமிழில் சேர்ந்தால் என்னவாகும்? யோசித்துப் பாருங்கள் தமிழில் மொத்த எழுத்துக்கள் 544 ஆகிவிடும். ஏற்கனவே நமது பிள்ளைகள் 247 எழுத்துக்களைப் படிக்க முடியாமல் திணறி வருவது அனைவரும் அறிந்ததே. இப்போது புரிந்ததா நாம் எதிர்ப்பது எதனை என்று? அதாவது தமிழ் எழுத்துக்கள் வேறு, கிரந்தம் வேறு. தற்சமயம் நாம் கிரந்ததில் இருந்து ஐந்து எழுத்துக்களை மட்டும் கடன் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.  கிரந்ததிலேயே தமிழை எழுதுவது தமிழ் எழுத்துக்களை அழிக்கும் முயற்சியாகும்.  தமிழ் எழுத்துகளுக்கும் கிரந்தத்துக்கும் இருக்கும் சில வரி வடிவ உருவ ஒற்றுமையை வைத்துக் கொண்டு இரண்டும் ஒன்று என வாதிடுவது, தமிழ் மலையாள எழுத்துகளின் உருவ ஒற்றுமையை வைத்து இரண்டும் ஒன்று எனக் கூறுவது போல் ஆகும்.

என்ன தான் தீர்வு?

நமக்கு எழும் முதல் கேள்வி சமஸ்கிருதத்தை ஏன் தமிழில் எழுத வேண்டும், அதற்கு புதிதாக எழுத்துக்களை சேர்ப்பது சரியா. அப்படியானாள் அரபி சொற்களை தமிழில் எழுத அரவி எழுத்துக்களை யூனிக்கோட்டில் சேர்த்தால் ஏற்றுக் கொள்வோமா?
ஆங்கிலம் படிக்க ஆங்கில எழுத்துக்களைப் படிக்க வேண்டும், சீனம் எழுத சீன எழுத்துக்களைத் தான் பயன்படுத்த முடியும், அதே போல சமஸ்கிருதம் எழுத தேவ நகரியைத் தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு உடன்படாதவர்கள் சமஸ்கிருத எழுத்தினை தேவநகரியில் இருந்து கிரந்தத்துக்கு மாற்றலாம். இல்லை என்றால் நடுவண் அரசிடம் கோரி இரண்டு எழுத்து முறைகளையும் பயன்படுத்தலாம். யூனிக்கோட்டில் கிரந்த சமஸ்கிருத்தக்கு தனி இடம் கோரலாம்.
ஏற்கனவே மலையாள லிபியில் சமஸ்கிருதத்தை எழுத வழி உண்டு. எழுத்துக்களுக்கு பஞ்சம் இல்லை. ஆகவே சமஸ்கிருதத்தை எழுத மலையாள லிபியை பயன்படுத்தலாம். தமிழ் கிரந்தமும் மலையாள லிபியும் 99 சதவீதம் ஒரே வரி வடிவத்தை கொண்டிருப்பவை. ஆகவே சமஸ்கிருதம் எழுத முனையும் ஒரு சதவீதம் தமிழர்களுக்காக 99 சதவீதம் தமிழர்கள் புது எழுத்துக்களைப் படிக்க வேண்டுமோ. அது மேலும் நம் மீது புது சுமையாக இருக்கும். இதனால் தமிழ் மீது பற்றுக் குறையுமே ஒழிய தமிழ் படிக்கும் ஆர்வம் வராமல் போகலாம். குறிப்பாக இளைய தலைமுறைத் தமிழர்கள் குழம்பி போவார்கள். ஆகவே சமஸ்கிருதத்தை தென்மொழியில் எழுதிப் படிக்க நினைப்பவர்கள் மலையாள லிபியைப் பயன்படுத்துங்கள் யார் வேண்டாம் என்றது. கிரந்த எழுத்தைக் காப்பாற்றத் தான் வேண்டும் என்றால் சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்துக்கு இடம் வாங்க்கி கொள்ளுங்கள்.
தமிழில் இருக்கும் ஜ,ஷ,ஸ,ஹ,ஶ,ஸ்ரீ போன்ற எழுத்துகளே தேவையற்றது தான். இருப்பினும் அதன் பயன்பாட்டையும் குறைக்கலாம். ஸ்ரீ என்ற எழுத்து தேவையே இல்லை. அதற்கு சிறீ என்று தமிழிலேயே எழுதலாம். ஜ, ஷ, ஸ, ஹ என்பதைக் கூட மாற்றித் தமிழிலயே எழுத வழிவகை செய்யலாம்.
எம்மை பொறுத்த வரைக்கு தமிழ் மேலும் எளிமை படுத்தப் பட வேண்டும். அதன் எழுத்துக்களை அதிகரித்து தேவை இல்லாத சுமையை வருங்கால சந்ததிதிகள் மேல் திணிப்பதால். அவர்கள் தமிழை முற்றுமாக புறந்தள்ளி ஆங்கில மொழியே விரும்பும் நிலை ஏற்படலாம் அல்லவா?
சிந்தியிங்கள்.. செயல்படுங்கள்….
மேலும் படிக்கவும்
உசாத்துணை:

ஆசிரியர் பற்றி

எனது பெயர் இக்பால் செல்வன். புதுவையை பூர்விகமாக கொண்ட நான். கல்வி கற்றது சென்னையில். தற்போது வசிப்பது கனடா தேசத்தில். சமூகம், அறிவியல், விந்தைகள் மற்றும் தமிழ் சார்ந்த விசயங்களை எழுதுவதில் ஆர்வம் உடையவன்.