தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 22 mei 2014
zondag 18 mei 2014
zondag 11 mei 2014
dinsdag 6 mei 2014
இந்தியாவின் 2 கடற்படை தளங்கள் மீது இலங்கையர் தாக்க திட்டமிட்டார் !
சிங்கள இராணுவத்திற்கு குண்டு துளைத்தால் நிமிடத்தில் அறுவை சிகிச்சை !
maandag 5 mei 2014
பொது மலசல கூடம் கடைத் தொகுதியாக மாற்றம்
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகருக்கு வரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. 250 இற்கும் மேற்பட்ட வியாபாரத் தளங்களையும், 150 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளும், 25 இற்கும் மேற்பட்ட வான்களும் இந்நகரில் உள்ளன.
இந்நகரில் 5 இடங்களில் மலசலக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று பிரதேச சபையினால் கடைத் தெகுதியாகவும் மற்றொன்று நகர சுத்திகரிப்பாளரின் குடியிருப்பாகவும் இன்னுமொன்று பிரதேச சபை களஞ்சிய சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது என இந்நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகுதி 2 மலசலகூட தொகுதிகளும் 10 வருடங்களுக்கு மேலாக பாவனைக்கு உதவாத நிலையிலும், கட்டிடங்கள் சேதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.
இதனால் உடைந்த மலசலகூடங்களுக்கு வெளியில் சிறுநீர் கழிப்பதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார தீங்குகளும் ஏற்படுகின்றன.
இவ்வழியாக தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய மக்கள் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இம்மலசல கூடங்களை திருத்தி தரும்படி பல தடவைகள் பிரதேச சபையிடம் கூறியபோதும் இதுவரைகாலமும் திருத்தப்படாத நிலையிலேயே உள்ளன என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புதிய மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக வருடா வருடம் நிதி ஒதுக்கப்பட்டாலும் இதுவரையும் எந்தவொரு மலசலகூடமும் கட்டப்பவில்லை என மக்கள் சுட்டிக்காட்டிகின்றனர்.
நகருக்கு வருகை தரும் சிவனொளிபாதமலை யாத்திரீகர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிபர்கள், நகருக்கு வரும் வாடிக்கையாளர்கள், சாரதிகள், போன்றொர்கள் மலசலகூட வசதியின்மையால் சிரமப்படுவதை தினம் தினம் காணக்கூடியதாக உள்ளது.
நகரில் மிக முக்கிய பிரச்சினையாக உள்ள மலசலக்கூட வசதியை காலதாமதமின்றி செய்து தருமாறு நகரில் வசிக்கும் அனைவரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
எனினும் இது தொடர்பாக அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் குறிப்பிடுகையில்,
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மூலமாக 66 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 28 இலட்சம் நோர்வூட் நகரின் மலசலகூடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இறுதியில் நோர்வூட் நகரிற்கான மலசலகூடத்தின் பணிகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlx6.html
zondag 4 mei 2014
ஆட்சியாளர்களிடம் பிரச்சினைகள் பற்றி கூறினாலும் கவனம் செலுத்துவதில்லை!- மல்வத்து மாநாயக்கர்
பெண்ணை உரசிய இராணுவ வீரர்: செருப்பால் வெளுத்துவாங்கிய பெண்
இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!- கடந்த மாதத்தில் மட்டும் 20 கொலை சம்பவங்கள்!
இலங்கைக்கு ஆதரவான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மோசடி குற்றச்சாட்டில் கைது
donderdag 1 mei 2014
நாட்டைத் துண்டாட இடமளிக்கப்பட மாட்டாது: ஜனாதிபதி!!
“படையினரே வெளியேறுங்கள்” என்று ஒலிக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை! சீ.வி.விக்னேஸ்வரன்
Abonneren op:
Posts (Atom)