தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 mei 2014

இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!- கடந்த மாதத்தில் மட்டும் 20 கொலை சம்பவங்கள்!

இலங்கைக்கு ஆதரவான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மோசடி குற்றச்சாட்டில் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 12:51.13 PM GMT ]
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான மைக்கல் கிரிம் மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க சமஸ்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயோர்க் நகர குடியரசு கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரான அவர் எப்.பி.ஜ பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக எப்.பி.ஐயின் உதவி பணிப்பாளர் ஜோர்ஜ் வெனிஸிலோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படை அதிகாரியும் எப்.பி.ஜ முகவருமான 44 வயதான கிரிம் மீது நிதி மோசடி, ஏமாற்று உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். எவ்வாறாயினும் மைக்கல் கிரிம் குடியரசு கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மைக்கல் கிரிம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்க அரசியல்வாதியாவார்.
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை அவசியமானது என்ற அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு ஆதரவளித்தார்.
வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டிலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTYLYlr7.html#sthash.BGr3JzlP.dpuf

இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!- கடந்த மாதத்தில் மட்டும் 20 கொலை சம்பவங்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 02:24.02 PM GMT ]
இலங்கையில் கொலை உட்பட்ட குற்றச்செயல்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 20 கொலைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தக்கொலை சம்பவங்கள் கிரியுல்ல, குருநாகல், மொனராகலை,  எல்பிட்டிய,  மகா ஓயா,  புத்தள, வெல்லம்பிட்டிய, கிளிநொச்சி, அத்துருகிரிய போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இதில் குருநாகலில் இடம்பெற்ற கொலையில் இராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார்.
அவர், பெண் ஒருவரிடம் கூலியை பெற்றுக்கொண்டு ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த கொலைகளில் பெரும்பாலானவை குடும்ப பிரச்சினைகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் உரிய வகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் தரப்பில் இருந்து பதில்கள் எவையும் வெளியாகவில்லை.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTYLYls6.html#sthash.MM2lmkGc.dpuf

Geen opmerkingen:

Een reactie posten