யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் ஞாயிறு சிறப்பம்சமான "சூரியகாந்தி" யின் இரண்டாம் பக்கத்தில் வெளியாகிய ஒரு தொடர் "மீண்டும் புலி உறுமல்". அதன் முதலாலது பத்தி இன்று வெளியாகியிருந்த நிலையில் அதனை அப்படியே சுவரொன்றில் ஒட்டிப் படம் பிடித்து "யாழ்ப்பாணத்தில் மீண்டும் புலி உறுமல் - சுவ◌ாட்டிகள்" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது தமிழ்வின். அதில் வேடிக்கை என்னவென்றால் சூரியகாந்தியின் பக்க எண்ணும் , பத்தியின் தொடர் எண்ணும் அப்படியே காணப்படுகிறது. இந்நிலையில் சுவரொட்டியில் என்ன எழுதியிருந்தது என்பதைப் பார்பதற்கு அச்சத்தில் பொதுமக்கள் அவற்றைச் சரியாக வாசிக்கவுமில்லையாம்"
உண்மையில் தமிழ்வின் நிர்வாகத்துக்குத் தெரியாமல் அதன் யாழ்ப்பாணச் செய்தியாளர் வேடிக்கையாக இந்தச் செய்தியை அனுப்பினாரா அல்லது வேண்டுமென்றே புலிப் பூச்சாண்டி விளையாட்டில் உதயனைச் சிண்டு முடிந்து அரசுடன் மோத விடும் தகிடு தித்தமா?
Geen opmerkingen:
Een reactie posten