தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 mei 2014

இந்தியாவின் 2 கடற்படை தளங்கள் மீது இலங்கையர் தாக்க திட்டமிட்டார் !

சிங்கள இராணுவத்திற்கு குண்டு துளைத்தால் நிமிடத்தில் அறுவை சிகிச்சை !
06 May, 2014 by admin


"ஸ்டேட் ஒப் தி ஆட்" (state-of-the-art military hospital ) என்று சொல்லக்கூடிய அளவு, அதி நவீன சிகிச்சை நிலையம் ஒன்றை, ஸ்தாபித்துள்ளார் மகிந்தர். இது பொதுமக்களுக்காக கட்டப்பட்ட வைத்தியசாலை அல்ல. இராணுவத்திற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஒரு இராணுவச் சிப்பாய்க்கு சூடு பட்டால் அவருக்கான சத்திர சிகிச்சையை சில நிமிடங்களில் மேற்கொள்ள, ஏதுவாக இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன சத்திரசிகிச்சைப் பிரிவு, அங்கங்களை இழந்தால் அதனைப் பொருத்தும் பிரிவு, மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவு என்று பல , நவீன சிகிச்சைப் பிரிவுடன் கூடிய இந்த வைத்தியசாலையை மகிந்தர் நேற்றைய தினம் திறந்துவைத்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. 

நாரம்பிட்டிய என்னும் இடத்தில் சுமார் 1.5 பில்லியன் ரூபா செலவில் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது. 1024 படுக்கைகளைக் கொண்ட இந்த அதி நவீன வைத்தியசாலையை ஏன் தற்போது இராணுவத்தினருக்கு அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். போர் முடிவுற்ற நிலையில் , இராணுவத்தினர் மட்டும் பாவிக்க கூடிய வகையில் ஏன் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவேண்டும் என்பது மிகுந்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதேவேளை மகிந்தரின் சகோதரரும் , பாதுகாப்பு செயலாளருமான கோட்டபாய ராஜபக்ஷ தான் இத்திட்டத்தை தீட்டி நடைமுறைப் படுத்தியுள்ளார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் சில தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6785
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட மாட்டாது !
06 May, 2014 by admin
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதனை தடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இம்மாதம் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பல்கலைக்கழகம் மற்றும் மாணவ விடுதிகள் என்பன மூடப்படவுள்ளதாக பதிவாளர் காண்டீபன் கையொப்பம் இட்ட துண்டுப்பிரசுரம் மாணவ விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் எண்ணற்ற மனிதப் படுகொலை இடம்பெற்றது. இதனை உலகத்தமிழர்கள் இன அழிப்பு நாளாக நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதேவேளை மே 18 தினத்தை இலங்கை இராணுவம் தமது வெற்றி நாளாக கொண்டாடியும் வருகிறது. இவ்வாறு யாழ் பல்கலைக் கழகத்தை மூடுவதன் ஊடாக முள்ளிவாய்க்கால் தினத்தை மூடிமறைக்கப் பார்கிறது சிங்களம்.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6786
லண்டனில் இருந்து சென்ற நபரை திருப்பி அனுப்பிய இந்தியா !
06 May, 2014 by admin
இலங்கை அரசின் தடைப் பட்டியலை இந்தியா ஏற்றுக்கொண்டதா என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளது. சமீபத்தில் இலங்கை அரசானது வெளிநாடுகளில் ஜனநாயக ரீதியில் இயங்கும் சுமார் 16 தமிழ் அமைப்புகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. அத்தோடு 424 தமிழர்கள் இலங்கை வரமுடியாது என்றும் அறிவித்துள்ளது. இதேவேளை இங்கிலாந்தில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக தனது தாயை இந்தியாவிற்கு அழைத்துச் சென்றபோது, தடை விதிக்கப்பட்ட 424 பேரில் நீங்களும் ஒருவர் என்று கூறி இந்திய அதிகாரிகள் அவரை திருப்பியனுப்பியுள்ளார்கள் என்ற செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடை உத்தரவு கனடாவில் செல்லாது என்று அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனும் அவ்வாறே தனது எதிர்ப்பினை ஏற்கனவே தெரிவித்து விட்டது. இலங்கை அரசின் இந்த வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்ததோடு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடு பட்டதாக சர்வதேச அளவில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்படி உரிய விசாரணை மேற்கொள்ளாத இலங்கை அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்றே திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் என்று கலைஞர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6787
இந்தியாவின் 2 கடற்படை தளங்கள் மீது இலங்கையர் தாக்க திட்டமிட்டார் !
06 May, 2014 by admin
இந்தியாவின் இரண்டு முக்கிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை சாகீர் ஹூசெய்ன் என்ற இலங்கையர் முன்னெடுத்து வந்ததாக தமிழக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில், இலங்கையின் கண்டியைச் சேர்ந்த சாசீர் ஹூசெய்ன் கடமையாற்றி வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், தமிழக காவல்துறையினர் அண்மையில் அவரை கைது செய்திருந்தனர். சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்த அனுமதியளிக்குமாறு காவல்துறையினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாநிலங்களான கொச்சி மற்றும் விசாக பட்டிணம் ஆகிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வந்ததாக காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த இரண்டு கடற்படை தளங்கள் பற்றிய தகவல்களை சாகீர் ஹூசெய்ன் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.துணி வர்த்தகர் என்ற போர்வையில் சாகீர் பல தடவைகள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 20 தடவைகள் சாகீர் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதேவேளை, பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6788

Geen opmerkingen:

Een reactie posten