சிறிலங்காவில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் எடுக்கும் என்று இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் திபேந்தர் சிங் 25 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியதாக ‘இந்து‘ ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் குழு ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“1987ம் ஆண்டு இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே, சிறிலங்காவில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் செல்லுவும் என்று லெப்.ஜெனரல் திபேந்தர் சிங் கூறியிருந்தார்.
அப்போது அவர் ஒரு அரச பணியாளராக இருந்தார்.
அதனால் அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியிருந்தது.
சிறிலங்காவின் வரலாற்றிலேயே ராஜபக்ச அரசாங்கம் தான் மிகவும் பலம் வாய்ந்தது என்றும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபக்ச அரசுக்கு தமிழ்த் தேசியக கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://asrilanka.com/2012/12/04/12035
Geen opmerkingen:
Een reactie posten