தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 december 2012

தமிழ் மக்களின் கோரிக்கைகளு​க்கு எமது ஆதரவை தெரிவிக்கி​ன்றோம்!-யேர்மன் குர்டிஷ் அமைப்புகளி​ன் சம்மேளனம் !


யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  யேர்மனியில் உள்ள குர்டிஷ் அமைப்புகளின் சம்மேளனம் தனது ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
யேர்மன் மொழியில் வெளியாகிய அவர்களின் ஊடக அறிக்கை பின்வருமாறு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
01.12.2012 அன்று இரவு சோதனையின் போது சிறீலங்கா இராணுவத்தினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரைக் கைது செய்தனர். மாணவர் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட மாணவர்கள் இப்போது வவுனியாவில் கொண்டுசெல்ப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு அமைதியான கவனயீர்ப்பு ஊர்வலத்தில் மாணவர்கள் மீது இராணுவ மற்றும் பொலிஸ் வன்முறை தாக்குதல் நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
60 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தமது பண்பாடு, மொழி, மதம் மற்றும் தாயகம் அழிக்கப்படுவதில் உள்ளாகப்பட்டுளார்கள். இது போன்ற அழிவை கண்டும் காணாமல் இருப்பதாலும் இஅனுமதிப்பதாலும் பலாண்டுகாலமாக தமிழர்கள் மீதான இனவழிப்புக்கு ஆதரவு வழங்கப்படுகின்றது.
இவ்விடயத்தில் இனவாத சிறீலங்கா அரசின் மற்றும் துருக்கி நாட்டின் அரசின் ஒரேமாதிரியான அணுகுமுறையும் தெளிவாக சுட்டிக்காட்ட முடிகின்றது. இரு அரசுகளின் இனவழிப்பு அரசியல் எவ்வித அரசியல் பின்னணியிலும் மற்றும் அறத்தின் நெறியிலும் நியாயப்படுத்த முடியாது.
யேர்மனியில் உள்ள குர்டிஷ் அமைப்புகளின் சம்மேளனமாகிய Yek Kom ஆகிய நாம் எமது மௌனத்தின் ஊடாக எவ் விதத்திலும் இவ் விடையத்தில் குற்றவாளிகளாக நிற்காமல், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவை தெரிவிகின்றோம்.
அடையாளங்கள் பாதுகாக்க மற்றும் மேன்மை படுத்தப்பட வேண்டும். பண்பாடு, மொழி ஒருமைப்படுத்தப்படுவதால் ஒரு இனம் அல்லது அதன் பரம்பரை அதன் தனித்துவத்தை மற்றும் வைராக்கியத்தை இழக்கின்றது.
தமிழர்கள் மீது நடைபெறும் இனவழிப்பை கண்டும் காணாமல் இருப்பது அக் குற்றத்தை அனுமதிப்பதே. அந்த வகையல் இப்படியான ஒரு செயல் மனிதவுரிமை மீறலாகும். அந்த வகையல் இனவழிப்பை கண்டும் காணாமல் இருப்பது மானிடத்துக்கெதிரான குற்றமாகும்.
மாணவர்களின் கைதை, அதே நேரத்தில் தமிழ் மக்களின் மீது ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசை நாம் மிக வன்மையாக கண்டிக்கும் இவ்வேளையில், அவர்களை தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
அதேநேரத்தில் சர்வதேச ஜனநாயக மனிதநேய சக்திகளை ஒருங்கிணைந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தமது குரல்களை எழுப்பும்படி  வேண்டிக்கொள்கின்றோம்.
குர்டிஷ் அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவை கடந்த காலங்களாக ஒடுக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையில் பல்வேறு ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னேடுகின்றது.
கடந்த ஆண்டுகளில் குர்டிஷ் மக்களின் விடுதலைக்கான போராட்டங்களில் ஈழத்தமிழர் மக்கள் அவை இணைந்து ஆதரவு கொடுத்திருந்தது. அதே போல் மாணவர்களின் கைதை கண்டித்து யேர்மனி, Düsseldorf நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் குர்டிஷ் இளையோர்கள், யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரோடு இணைந்து கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது .
ஒடுக்கப்பட்ட பல்லின மக்கள் சர்வதேச ரீதியான ஓர் ஒருமைப்பாட்டை உருவாக்குவது மிக அவசியமானது. என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten