தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 december 2012

பூவான பெண்கள் திடீரென புலியாக மாறினர்: சிங்கள மாணவி சாட்சியம்!!


தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன் என யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவியொருவர் டிவீட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கி விட்டிருக்கிறோம்.

26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது.

மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள்.

தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..

மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன். என குறிப்பிட்டுள்ளார்.

எனியாவது சிங்கள இனவாதிகள் தமிழர்களின் மண்டியிடாத வீரத்தை புரிந்து கொள்வார்களா?


http://www.paristamil.com/tamilnews/view-news-MjM1MjI2NTY4.htm#.UL3lTOSmCI4

Geen opmerkingen:

Een reactie posten