மனித உரிமைகள் மேம்படாது போனால்,2013 ம்,ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பங்கேற்கப் போவதில்லை என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Chrystiane Roy இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவை பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க தவறி வருவதாகவே கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் மனித உரிமைகளை பாதுகாக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் நீதித்துறைக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் கனடாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் கனடா அவதானித்து வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmqzCTWNUjuy.html
Geen opmerkingen:
Een reactie posten