காதல் என்னும் காமத் தீ
காதல் என்னும் காமத் தீயானது தருமபுரிமாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குடிசைகளைஎரித்திருக்கிறது.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுல் மிகை நாடும்மேன்மைக் குணம் நமக்கெல்லாம் இல்லாது போய்விட்டது.
எரிந்த கட்சியும் எரியாத கட்சியுமாய் இங்கு இரண்டுகட்சிகளாகப் பிரிந்து ‘லாவணி’பாடிக்கொண்டிருக்கிறார்கள், நமது அறிவு ஜீவிகளில் பலர்.
இந்த இழிவு நிலை கண்டுதான்,“நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி கலப்படம்என்பது எத்தகைய குற்றமோ அது போலவே, இந்தக் காதல் குருடுகளின்கலப்பினச் சேர்க்கையிலும் சட்டத்தின் பார்வை தேவை” என்ற கருத்தை முன்வைத்து நான் சில தினங்களுக்கு முன் இங்கு ஒரு பதிவை எழுதினேன்.
இப்படி எழுதியதால் ‘சாதீ வளர்ப்பவன்’ என்றும் ‘சமத்துவத்தின் எதிரி’ என்றும் ‘ஜாதித் துவேஷம் பூண்டவன் ’ என்றும் ஒரு சிலர் என்மீது சாயம் பூசிக் காட்டி,தங்கள் மேதாவிலாசத்தை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறர்கள்.
அவர்களின் இந்த ‘முற்போக்குபோக்குச் சித்தாந்த வேட்கை’ என்பது (முற்போக்குஎன்றால் வாந்தி; பிற்போக்கு என்றால் பேதி), சாதி,மத,இன சமத்துவத்தின் தாகம்மிக்க எழுத்தாளர்கள்போல் புரட்’சீ’கரப் புரட்டுக் கோஷங்களுக்குத் தங்களைமுன்னிலைப் படுத்திக் கொள்கின்ற தற்குறித்தனமே அன்றி வேறல்ல.
வாதம் என்று வந்தால் அதற்கு நான் இடம் கொடுக்காமல் தலைக் கனத்தோடுஎழுதி எதிர்ப்பவரைக் காயப்படுத்துவதாக ஒரு சிலர் தங்களது அறிவற்றசிந்தனைகளுக்கு வக்காலத்துக் கொள்கிறார்கள்.
உண்மை அதுவல்ல; எனது கருத்துக்களை கருத்துப் பூர்வமாக விமர்சிக்கமுடியாமல் அதைத் தவறாக அனர்த்தப் படுத்தி, விஷயத்தை விஷமாக்க வேறுதிசைக்குக் கொண்டு சென்று, அதற்குப் பக்கவாதமாகத் தங்கள் ஜால்ராக்கோஷ்டிகளை வரவைக்க முயல்கிறவர்களைத்தான் இதுவரை நான் எனதுபக்கங்களில் பார்த்திருக்கிறேன்.
எனது கருத்துக்கு உடன்பட்டு, விஷயம் அறிந்தோர் பலர் அடையாளம்இடுவதை, இந்த அரைகுறைகள் கேலி செய்துவிட்டு ஓடி மறைவதையேவழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்குப் பொழுதுபோக்கத்தான் இந்த முகநூலே தவிர, சமூகத்தின் நலன்கருதி விஷயங்களைச் சொல்வதல்ல.
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?
மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக நான் இங்கு எழுதுவதில்லை என்பதைப்பன்முறை பகர்ந்து விட்டேன்;பகிர்ந்தும் விட்டேன்.
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?
மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக நான் இங்கு எழுதுவதில்லை என்பதைப்பன்முறை பகர்ந்து விட்டேன்;பகிர்ந்தும் விட்டேன்.
நண்பர்களே,
‘நமது சமுதாயத்தில் இன்று மலிந்து வரும் காதல் திருமணங்கள் குறித்தானஎச்சரிக்கை உணர்வு நமக்கு வேண்டும்’ என்பதை அறிவுடையோரும் பண்பட்டபாரம்பரியப் பெருமையை நாடுவோரும் ஆழ்ந்துணர்ந்து சிந்திக்கட்டும்; அவசரப்புத்திக்காரக் காதலர்கள் உணரட்டும்’ என்பதற்காகத்தான் நான் இந்த விஷயத்தைக்கையில் எடுத்துள்ளேன்.
இங்கே-
எனது கருத்துக்களோடு எவரும் முரண்படலாம். ஆனால் அதுஅறிவுபூர்வமானதாகவும் சமூக அமைதிக்கும் தெளிவுக்கும் உரிய வகையிலும்இருக்க வேண்டும்.
அதாவது, நான் என்ன சொல்லியிருக்கின்றேனோ அந்தக் கருத்தின்அடிப்படையில்தான் எதிர்க் கருத்துக்களை அடுக்க வேண்டுமே தவிர, நான்சொல்லாத கருத்தைச் சொன்னதாகக் கொண்டு இங்கு எதிர்வாதம் செய்ய, எவர்வந்தாலும் அதற்குரிய அவமானத்தை அவர்கள் வெகுமானமாகப் பெற்றாகவேண்டும் என்பதைச் சொல்லி வைக்கிறேன்.
சில ‘அரைக்கால் ட்ரவுசர்கள்’ எனது கருத்துக்ளைத் தங்களுக்கே உரியஞானத்தோடு அரைகுறையாகப் புரிந்து கொண்டு எனக்குப் பதில் சொல்வதாகமுதுகுக்குப் பின்னல் ஒழிந்து கொண்டு முனகிக் கொண்டிருப்பதும், மதம் பற்றியும்சாதி பற்றியும் பெரியார் சொன்ன கருத்ததையெல்லாம் தங்களுக்குக் கவசம்ஆக்கிக் கொண்டு அதில் ஒழிந்து கொள்வதும் காதல் திருமண எதிர்ப்பு வாதத்துக்குஎதிராகச் சொத்தை விமர்சனங்களை தங்கள் பக்கத்தில் எழுதிக் கொண்டுதங்களைத் தாங்களே சொறிந்து இன்புற்றுக் கொள்வதுமாக இருக்கின்றார்கள்.
கத்துகின்ற தவளையின் வரட்டுச் சத்தம் கேட்டு மற்ற நுணல்களும்
பக்க வாத்தியம் போடுவதால், அந்த வரட்டுத் தவளைகளின் கத்தல்களை
‘ஒரு சங்கீதக் கச்சேரி’ என்று புத்தியுடையோர் புகல மாட்டார்கள்.
பெற்றவர்கள் தன் பிள்ளையை எந்தப் பள்ளியில் படிக்க வைப்பது;எந்தமாதிரியான உடைகளை அவர்களுக்குப் போட்டு அழகு பார்ப்பது; எந்த மாதிரியானஊட்டச் சத்துக்களை,உணவு வகைகளைத் தந்து வளர்ப்பது; எதிர்காலத்தில் எந்தமாதிரியான தொழிற் கல்வியைத் தருவது?
என்ற உரிமையெல்லாம் பெற்றவர்களுக்கு ‘ஒரு காப்புரிமை’யைப் போல் இருக்க, ‘அந்தக் குழந்தைகளுக்கு பதினாறு வயதில் வரும் பருவ உணர்ச்சிகளுக்கு மட்டும்அவர்களைப் பலி கொடுத்து விடுவது சட்டப்படியான தேவை’ என்பதை நீதிஏற்குமா?
அறிவுடையோர்தான் இதற்கு விளக்கம் தரவேண்டும்.
அறிவுடையோர்தான் இதற்கு விளக்கம் தரவேண்டும்.
பருவ வளர்ச்சியின் பாலினக் கவர்ச்சிதான் இளைஞர் இளைஞிகளுக்கு இன்றையகாதல் பற்று; அதாவது ஒரு ஆண் பெண்மீதும் ஒரு பெண் ஆண் மீதும் இயல்பாகக்கொள்கிற காதல்.
இன்றையை இளைஞர்கள்/இளைஞிகள் காதலை சினிமாவின் வழியேதான்சிந்திக்கின்றார்கள்; அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் உணர்வதில்லை.
தான் பருவம் எய்தும் வரை உயிருக்கு உயிராய், ரத்தத்தைச் சிந்தி உழைத்துவளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களின் பெருமையும் பாதுகாப்பும் அவர்களுடனானஉறவு நிலையும்; தான் விரும்பியதெல்லாம் வாங்கித் தந்து மகிழ்ந்த அவர்களின்பாசமும் ‘பருவக் கோளாறு’ என்னும் பாழ் கிணற்றில் வீழ்ந்ததும் மறந்து போய்விடுகிறது.
‘தான் விரும்பியவனுடன் அல்லது விரும்பியவளுடன்தான் வாழ வேண்டும்’என்ற உன்மத்தம் தலைக்கேறி, அவர்கள் சட்டத்தின் துணையை நாடித் திருமணம்செய்து கொள்கின்ற அளவுக்குப் போய் விடுகிறது.
இதில் ஒரு சில பெற்றோர்கள் வேறு வழியின்றி அவர்களின் காதல் திருமணத்தைஏற்றுக் கொள்கிறார்களே தவிர பெரும்பாலோர் அல்ல; ‘ஒரே பெண்’, ‘ஒரே ஆண்’என்று அமைந்து விட்ட பெற்றோர்,வேறு வழியின்றி தங்கள் பிள்ளையின் காதல்திருமணத்துக்கு உடன்பட்டுப் போனாலும் கூட பெரும்பான்மைப் பெற்றோர்உடன்படுவதில்லை; காரணம் அவர்கள் சார்ந்து வாழும் சமுதாயத்தால் பலவகையில் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்கிறார்கள்;அல்லதுபெண்ணைக் கடைசிவரையில் வைத்து காப்பாற்றும் ஆற்றல்.தகுதி ஆணுக்கோ,ஆணுடன் கடைசிவரையில் குடும்பம் நடத்தும் ஆற்றல்,பக்குவம் பெண்ணுக்கோஇருப்பதில்லை’ என்பதை அறிந்திருப்பது.
தங்கள் பேச்சைக் கேட்காமல் சட்டத்தின் துணையை நாடும் ஜோடிகள்பெற்றவர்களின் பொறுப்பையும் உரிமையையும் துச்சமெனத் தூக்கி எறியும்துணிவு அறிவுப் பூர்வமானதும் அல்ல;ஆக்க பூர்வமானதும்அல்ல;
கடந்த 10 ஆண்டுகளுக்குள் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் இன்றுஎத்தனை பேர் லட்சியத் தம்பதிகளாக வாழ்கிறார்கள்? என்பதை இங்கு, புரட்டுக்கொள்கை பேசுவோர் காவல் நிலையங்களிலும் குடும்ப,வழக்கு மன்றங்களிலும்போய்த் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால், ‘காதல் திருமணங்கள் சாதி ஒழிப்பின் வித்து’என்பதாகச் சிலிர்த்துக் கொண்டு திரிகின்ற இந்த புரட்டுச் சமூக சிற்பிகள், காதல்திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளிலேயே, வாழ்வு கசந்து போய்கோர்ட்டுகளின் துணையை நாடி,மணமுறிவு பெறத் துடிக்கும் முன்னாள்காதலர்களின் கால்களில் விழுந்து,“நீங்கள் எக்கேடு கெட்டாலும்பரவாயில்லை;காதலை எப்படியாவது வாழ வையுங்கள்; அதற்குக் கேடுசெய்யும்வகையில் பிரிந்து போகாதீர்கள்” என்று கெஞ்சட்டும்;. அந்தக் காதல்ஜோடிகள் காலால் எட்டி உதைப்பதைத் தங்கள் குறிக்கோளுக்குக் கிடைத்தவெகுமதியாகப் பெற்றுக் கொள்ளட்டும்.
நமக்கு எவ்விதத்திலும் ஆட்சேபணை இல்லை.
அதேசமயம்,இந்தப் புரட்டுச் சமூகச் சித்தாந்திகள் பதில் சொல்ல வேண்டியவிஷயங்கள் இவை:
பெண்ணையோ ஆணையோ பெற்ற பெற்றோர், தாங்களும் இந்த சமூகஅமைப்பில் மானத்தோடும் மற்றவர்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழவேண்டும்என்ற தாகத்தோடும் வாழ்வதற்கு உரிமை உண்டா இல்லையா?
முதிர்ச்சியற்ற பருவக் கவர்ச்சிக்குத் தன் மகனோ,மகளோ ஆளாகும்சூழ்நிலையில் அவர்களைத் தடுப்பதும் தடுத்தாட் கொள்வதும் பெற்றவர்களுக்குஉரிமை இல்லையா?
வயது வந்தால் ஒரு ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்துகொள்வதைச் சட்டம் பாதுக்காப்புத் தருகிறது’ என்பதில் மட்டும் நீதி வாழ்கிறதா?
தன் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லை என்பதால் மானத்தோடும்ரோஷத்தோடும் வாழ்வதற்கு, பாதிக்கப்பட்ட பெற்றவர்களுக்கு இதே சட்டம் என்னபாதுகாப்பைத் தருகிறது?
இந்தக் காதல் திருமணத்துக்குப் பாதுகாப்புத் தரும் சட்டமானது ‘அவர்கள்கடைசிவரை மணவாழ்வில் இணைந்து நிற்கிறார்களா?என்பதற்கும் என்னஉத்தரவாதம் தருகிறது?
தங்கள் காதல் வாழ்க்கையை அடையத் துணை நின்ற அதே சட்டம் சிலஆண்டுகளில் மனமுறிவும் மண முறிவும் கொள்ளும் கணவன் மனைவியர் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதற்கு என்ன பொறுப்பு ஏற்கிறது?
“அன்று இந்தப் பாழும் சட்டம்தானே, நாங்கள் எதிர்த்தபோதும் எங்கள் பெண்ணை /மகனை எங்களிடமிருந்து பிரித்தது? இப்போது அவர்கள் வாழ்க்கையில்ஏற்பட்டுள்ள பிரிவுக்கும் சண்டைக்கும் அதனால் நாசமாகிப் போய்விட்டஅவர்களின் வாழ்க்கைக்கும் காரணம் என்று ஏன் வருவதில்லை?” என்று பெற்றொர் விடும் கண்ணீரை எந்த சட்டம் துடைக்கிறது?
”காதல் வாழ்க.காதல் திருமணங்கள் சாதிக் கொடுமைகளுக்குஎதிரானவை;அவற்ரை வரவேற்போம்; அதற்கு எதிரானவர்கள் சாதிவெறியர்கள்;அவர்களை ஒழிப்போம்’ என்றெல்லாம் வெற்று முழக்கமிட்டவர்கள்,காதல் திருமண முறிவுகளுக்கு என்ன விளக்கம் அளிக்கிறார்கள்?
பருவக் காதலின் அங்கீகரிப்பைச் செய்யும் சட்டம், காதல் திருமணம் ஜோடிகள் தம் வாழ்க்கையில் உரிய சமூக மரியாதையுடன் அனைத்துவாழ்வாதரங்களையும் பெற்றிருக்க வகை செய்ய வேண்டாமா?
அதற்கு இந்த சமூகப் புரட்சீ’யாளர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?போராடவில்லை?
அதற்கு இந்த சமூகப் புரட்சீ’யாளர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?போராடவில்லை?
சட்டம் ஒரு இருட்டறை என்பதாகவே இருக்கக் கூடாது?
‘அடுத்தவன் வீட்டுக் குழந்தைகள் எப்படி நாசமாகப் போனால் என்ன?
அவை காதலில் கலந்து ஜாதி உணர்வுக்கு எதிராகத் திருமணம் செய்வதைவரவேற்போம்’ என்று முக நூலில் முனகுகின்றவர்கள் சமூகக் கேடர்களேயன்றிவேறு என்ன?
அவை காதலில் கலந்து ஜாதி உணர்வுக்கு எதிராகத் திருமணம் செய்வதைவரவேற்போம்’ என்று முக நூலில் முனகுகின்றவர்கள் சமூகக் கேடர்களேயன்றிவேறு என்ன?
குரங்குதான் கெட்டதும் அல்லாது,வனத்தையே அழித்தது’ என்ற சொலவடைக்குச்சுத்தமான அடையாளமானவர்கள் இவர்கள்.
அத்தகையவர்கள் இங்கே படம் காட்டுவதை விட்டொழித்து, அறிவு பூர்வமாகச்சிந்தித்து அனுபவ அறிவோடும் அகண்ட பார்வையோடும் எழுதட்டும்வரவேற்கிறேன்.
பருவக் காதலின் பலிகடாவாகப் போகும் திருமண வாழ்க்கையை எதிர்க்கும்சிந்தனையோடு நான் சொல்ல வரும் கருத்துக்கள் இதுதான் .
காதல் திருமணங்கள் மூலம்தான் சோஷலிஸ சமுதாயம் உருவாகின்றன என்கிறமூடத்தனத்தை முற்றாக மறுக்கின்றேன்;எதிர்க்கின்றேன்.
இதில் நான் சாதி உணர்வையும் இனத் துவேஷத்ததை எங்கே குறிப்பிடுகின்றேன்?
நிச்சயம் 18 வயதைக் கடந்து விட்டால் யாரும் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சட்டம் சொல்வதைப் பயன் படுத்தி, அந்த ஜோடிகள் ஜாதிமதம் பார்க்காமல் திருமணம் செய்ய முனைவதும் அவர்களுக்கு பெற்றோர்எதிர்ப்புத்தெரிவிக்கும் போது பெண்ணுக்கோ ஆணுக்கோ ஒரு சாதி பிரிவின்தலைவர்கள் சேர்ந்து அந்தப் பெற்றோரை மிரட்டுவதையோ அதற்குச் சட்டத்தின்தண்டனைய வாங்கித் தந்து விடுவோம் என்று பயமுறுத்துவதையோ நாம் இன்றுகண்கூடாகக் காண்கிறோம்.
உண்மையில் –
சில சாதிப் புரட்’சீ’த் தலைகள் சில ஊர்களில் சிறுபான்மையினராக வாழும் தங்கள்இனத்தவர்களைக் கூட்டம் கூட்டி, “நீங்கள் எல்லாம் மேல்சாதிக்காரர்கள் போல்வாழ வேண்டும் என்றால் உங்கள் வீட்டு இளைஞர்கள் மேல் சாதியினரின்பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி அவர்களைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அவர்களின் காதலை மேல் சாதிப் பெற்றோர்கள் தடுக்கசட்டத்தில் இடமில்லை; உங்களுக்கு எதிர்ப்பு வந்தால் நாங்கள் இருக்கிறோம்;இன்றே நமது கட்சியில் சேர்ந்து நமது கட்சிக் கொடியை இங்கே பறக்க விடுங்கள்”என்று உணர்ச்சிகரமாகப் பேசித் தூண்டி, கட்சிக்குத் தொண்டர்களைச்சேர்ப்பதற்குப் பதில் குண்டர்களை ஊர் தோறும் வளர்த்து வருகிறார்கள்.
இது எவ்வளவு பெரிய அராஜகம்.?
இதை உள்ளூர் போலீசும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை உள்ளூர் போலீசும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுபான்மை இனத்தவர்க்கும் பாமரர்களுக்கும் கல்வி அறிவைப் பெருக்கி, அதன்மூலம் அரசுப் பணிகளில் அழகு பார்க்க உழைக்க வேண்டிய தலைவர்கள், ‘அதெல்லாம் கிடைத்து விட்டால் நம்மிடம் வர மாட்டார்கள்’ என்பதற்காகவே,அப்பாமர மக்களை பகுத்தறியும் நிலைக்கு ஆளாக்காமல் பகடைக் காய்களாய்ப்பயன் படுத்தி சொத்தும் சுகமும் அரசியல் பதவிகளும் பெற்று வருகிறார்கள்.
இதனை இங்குள்ள சில அறிவு ஜீவிகளும் பத்திரிகையாளர்களும் மறைத்து,பகல்வேஷதாரிகளாய் உலா வருகிறார்கள்.
உயர் ஒழுக்கமும் சமூக மரியாதையும் காதலாலும் கலப்புத் திருமணங்களாலும்ஒரு போதும் வந்து விடாது. நண்பர்களே.
நல்ல பண்பையும் நாணயமான நடத்தைகளும் கொண்டு வாழ்வதற்கு இங்குயாருக்கும் தடை இல்லை.
சமூகத்தின் பொருளாதாரச் சமன்பாடும் பண்பட்ட சுகாதாரமான வாழ்க்கைச்சூழலும் செம்மொழியின் சித்தாந்த வளமும் இல்லாமல் சாதி, இன பேதமற்றசமுதாயத்தை உருவாக்க முடியாது.
அவை இல்லாமல் சாதியை ஒழிப்போம்’ என்பது. தனக்குத் தானே தலையில்கொல்லி வைத்துக் கொள்ளும் குரங்கின் செயல்.
காதலைச் சாதி எதிர்ப்பின் காரணியாகக் கொண்டு அதை ஆதரிப்பதாக விஷமத்தனமாக பிரச்சாரம் மேற்கொள்வதும் அதற்கு சட்டத்தைப்பயன்படுத்தி பிற சாதிக்காரர்களை மிரட்டுவதும், பிறகு அதன் எதிர்விளவுகளைத்தங்கள் அரசியல் ஆதாயத்துகான மேடைப் பிரசங்கம் ஆக்குவதும் இப்போதுஅதிகரித்து வருகிறது.
‘இத்தகைய அயோக்கியத்தனமான அரசியல் பின்னணி மற்றும் சாதிவெறித் தூண்டல் காரணமாகத்தான் தருமபுரி இனக் கொடுமைநிகழ்ந்தது’ என்பதை நடு நிலைமையோடு ஆராய்கின்றவர்களுக்குப் புரியும்.
ஆனால் எல்லாம் அரசியல் மயம் ஆக்கப் பட்ட பிறகு, உண்மைகள்புதைக்கப்பட்டும் நியாயம் சிதைக்கப்பட்டும் உணர்சிமிகும் பொய்யானசமத்துவத்தின் கீச்சுக் குரல்கள் நம் காதுகளைக் கூச வைக்கின்றன.
அரசியலும் இனத் துவேஷமும் இங்கே மிருகங்களுக்கும் கீழே ஜனங்களைஜனித்துக் கொண்டிருக்கின்றன.
இதை உணராது;அல்லது உணர்ந்து கொள்ள விரும்பாது சிலஎழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்கூட,தாங்கள் சார்ந்த சமூகத்தின்/அரசியல்சாக்கடை எண்ணங்களையே பிரதிபலிப்பதைக் காண்கின்றேன்.
காதல் திருமணம் என்பது இரண்டு வேறு சமுதாயத்தின் அமைதியைக்குலைக்கும் என்றால் சம்பந்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தபெரியவர்கள்/தலைவர்கள் ஒன்று கூடி காதல் வசப்பட்ட ஆண்,பெண்இருவருக்கும் புத்தி சொல்லி அவர்கள் திருமணத்தை ஒத்தி வைத்தல் அல்லதுமாற்றி அமைத்தல் என்கிற மரபைக் கைப் பிடிப்பதே நீதி.
அதற்குப் பதில் சட்டத்தின் நிலையைக் காட்டி அந்த ஜோடியைச் சேர்த்து வைத்துஇரு வேறு சமூகத்துக்கும் தீராப் பகையை மூட்டி, அந்தப் பகைமைத்தீயில் இங்கேபலர் குளிர்காய்கிறார்கள்; குறிப்பாக அரசியல்வாதிகள்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் பாமர ஜனங்கள்தான்.
முற்றாத அறிவில் முளைக்கும் காதல் ஒரு காமத் தீ தான்.
முற்றாத அறிவில் முளைக்கும் காதல் ஒரு காமத் தீ தான்.
அது ஆயிரங்காலத்து வாழ்வுக்கல்ல; ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்’என்பதற்கேற்ப பருவ நுகர்ச்சியின் பாதகத் தூண்டல். ‘அதன் பாதாளத்தில் வீழ்ந்துநாசமாகப் போகிறேன்;என்னைத் தடுக்காதீர்கள்’ என்று கெஞ்சுவதும் மறுத்தால்மிஞ்சுவதும்தான் இன்றைய காதல் ஜோடிகளின் பரிதாப நிலை.
‘இதைத் தடுக்கின்ற உரிமையும் பொறுப்பும் பெற்றவர்களுக்கில்லை’ என்பது,பொறுப்பற்ற சமூக விரோதிகளின் புரட்’சீ’கர சிந்தனை.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற உயர் ஒழுக்கம் நலிந்து போன காலமாய் இது நாறிப்போய் விட்டது.
அப்படி உயர் ஒழுக்கத்துடன் வாழ விரும்புவோருக்கு இந்த சமூகம் மட்டுமல்லசட்டமும் பாதுகாப்பைத் தருவது முக்கியம் அல்லவோ?
கண்கூடாகவே தோற்றுப் போகும் காதல் திருமணங்களுக்கு வக்காலத்துவாங்குவோரும் அதற்கு சட்ட வியாக்கியானம் செய்வோரும் உண்மையிலேயேஒழுக்கம் கெட்ட சமுதாயத்துக்கு உரமிடுகிறவர்கள்; உண்மைக்கும் பாரம்பரியப்பெருமைகளுக்கும் ஒப்பாரி வைக்கின்றவர்கள்; தனக்கு இரண்டு கண் போனாலும்பரவயில்லை;அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது நாசமாக வேண்டும் என்ற நச்சுஎண்ணம் கொண்ட நபும்சகர்கள். அவர்களுடைய குடும்பத்தின் நிலையைஆராய்ந்தால் அந்த இரண்டுங்கெட்டான்களின் ’சில்லறை வாழ்வு’ யாதெனவிளங்கும்.
நண்பர்களே,
இளம்பிராயத்தில் எழும் பருவக் காதலுக்கு நாம் பச்சைக் கொடி காட்டுவதுகூடாது; அது காதல் ஜோடிகளுடைய இல்லற வாழ்வின் நெடிய பயணத்தில்பல்வேறு முரண்பாடுகளைத் தந்து மண முறிவுக்கோ, மன முறிவுக்கோ கா‘ரண’மாகி விடுகிறது.
காதல்,ஜாதி பார்ப்பதில்லை என்பதுடன் எதிர்காலத்தையும் பார்ப்பதில்லை.எங்கோ ஒன்றிரண்டு காதல் திருமணங்கள் கசப்பின்றி 30 ஆண்டுகள் ஓடிவிடுவதால் அவையே முன் உதாரணங்கள் ஆகி விட முடியாது.
விதி விலக்குகளே விதியாகி விட முடியாது.
விதி விலக்குகளே விதியாகி விட முடியாது.
எனவே –
காதல் திருமணங்கள் மூலம் சாதி ஒழிப்பு என்பதெல்லாம் அரசியல் ஓட்டுவேட்டைக்கும், இளைஞர்களின் கரகோஷத்துக்கும் உரிய விஷயமே தவிர நமதுபாரம்பரியப் பெருமைக்கும் சிறப்பான சமூக அமைதிக்கும் உரமிடுபவைஅல்ல. நடைமுறையில் அது பெரும்இன்னல்களுக்குத்தான் வித்திட்டு வருகிறது.
காதலின் தொடக்கத்தில் கரகோஷம் இடுபவர்கள் அதன் திருமணத்துப் பின்,கடைசிவரை எப்படி வாழ்கிறார்கள்? என்று சிந்திப்பதே இல்லை.
காதலர்களை அவர்கள் திருமணத்தோடு கை விட்டு விடுகிறார்கள்.
காதல் என்பது கடைத் தெருவில் கிடைக்கும் கத்தரிக்காய் ஆகி விட்டது; ஆனால்ஆயிரங்காலத்துப் பயிராகிய குடும்ப வாழ்க்கையை கடைத்தெருவில் விதைக்கமுடியாது என்பதை காதல் வசப்பட்ட குருடர்களை விட, அவர்களைச் சேர்த்துவைத்தால் ஜாதிகள் மறைந்து புதிய சமூகம் புலர்ந்து விடும்’ என்று புரட்டுத்தத்துவம் பேசும் புல்லர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்,.
காதல் எதிர்ப்பு அவசியம் வளரவேண்டும்; இளைஞர் இளைஞிகளுக்கு
சில கட்டுப்பாடுகளை சட்டப்படி உருவாக்கவேண்டும் என்பது நமது இந்தியசமூகத்துக்குத் தேவை.
எல்லாம் உலக மயம் என்பது மேற்கத்தியர்களுக்கு லாபம் தரலாம்;
நாம் நமக்குத்தேவையானதில் மட்டும் உலகப் பார்வை கொள்ள வேண்டுமேதவிர, நமது பாரம்பரியத்தின் பெருமையைக் காவு கொடுத்தல்ல.
‘நமக்கென்று உள்ள குடும்ப உறவுகளையும் சமூக ஒற்றுமையையும்பண்பாட்டையும் பேணிக் காக்க வேண்டும்’ என்ற எனது நோக்கம் முற்றிலும்சாதி,மதம் மற்றும் இனப் பார்வையைக் கடந்தது.
எந்தக் கருத்தையும் சமுதாய நலன் கருதி எழுதலாம்;பேசலாம்.
சமூக நீதியைக் காக்கச் சட்டம் தவறும் எனில் அதையும் ஆதாரத்தோடு சொல்லிசுட்டிக் காட்டலாம்.
இதை, நீதியின் உயர் படிமானத்தை உணர்ந்த நீதிமான்கள் ஏற்பார்கள்.
நீதியைச் சொல்வதில் நாம் அஞ்சுவதும் இல்லை;அதன் எல்லையை மிஞ்சுவதும்இல்லை.
இவண்-
கிருஷ்ணன்பாலா
4.12.2012
http://ulagathamizharmaiyam.blogspot.nl/2012/12/blog-post.html?spref=fb
Geen opmerkingen:
Een reactie posten