பிரான்ஸில் இந்த ஆண்டு வதிவிட அனுமதியின்றி ஐந்து வருடங்களுக்கு மேல் இருப்பவர்களில் அவர்களின் பிள்ளைகள் 3ஆண்டுகள் பிரான்ஸ் பாடசாலையில் கல்விகற்றால் அக்குடும்பத்திற்கு வதிவிட அனுமதி வழங்கப்படும் என பிரான்ஸ் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மனுவல் வால்ஸ் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
3வருடங்கள் பிரான்ஸில் பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் சான்றிதழ்கள் மற்றும் பிரான்ஸில் 5ஆண்டுகள் வசித்ததற்கான சான்றிதழ் என்பனவற்றுடன் சம்பந்தப்பட்ட உள்விவகார அமைச்சின் குடிவரவு பிரிவுக்கு அனுப்பிவைக்க முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 35ஆயிரம் பேருக்குக்கும் 1997ஆம் ஆண்டு 80ஆயிரம் பேருக்கும் வதிவிட அனுமதி வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் ( முன்னைய அரசு ஆட்சியின் போது) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இரு வருடம் பிரான்ஸில் வாழ்ந்தால் பிள்ளைகள் ஒருவருடம் பாடசாலையில் கல்வி கற்றால் வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில் இந்த கால எல்லைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
5வருடங்கள் பிரான்ஸில் வாழ்பவர்கள் கடைசி இருவருடங்களில் ஆகக்குறைந்தது 8மாதங்கள் வேலை செய்திருந்தால் அல்லது 5வருடங்களில் மொத்தம் 30மாதங்கள் வேலை செய்திருந்தால் அவர்களும் வதிவிட அனுமதிக்கு விண்ணபிக்க முடியும்.
18வயதிற்கு கீழ் பட்டவர்கள் 2இரு வருடங்கள் பிரான்ஸில் வாழ்ந்திருந்தால் அவர்கள் அக்காலப்பகுதியில் பாடசாலையில் கல்வி கற்றிருந்தால், அவர்கள் பிரான்ஸ் சமூக கலாசாரத்துடன் இணையும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களும் வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.
18வயதிற்கு கீழ் பட்டவர்கள் 2இரு வருடங்கள் பிரான்ஸில் வாழ்ந்திருந்தால் அவர்கள் அக்காலப்பகுதியில் பாடசாலையில் கல்வி கற்றிருந்தால், அவர்கள் பிரான்ஸ் சமூக கலாசாரத்துடன் இணையும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களும் வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.
வதிவிட அனுமதி உள்ள ஒருவருடன் திருமணம் முடிக்காது 18மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தால் அவர்களும் வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://asrilanka.com/2012/11/29/11898
Geen opmerkingen:
Een reactie posten