இலங்கைக்கான இந்திய வதிவிட பிரதிநிதியின் மதிய போசன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் தமிழர்களால் கோரப்படுகின்ற வட கிழக்கு பிரதேசங்களிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதில் தமது அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
1983ம் ஆண்டு முதல் அதாவது கடந்த 26 ஆண்டுகளாக நாட்டின் மொத்த சனத்தொகையில் 13 வீதமாகவுள்ள தமிழ் மக்கள் தங்களிற்கும் இந்நாட்டில் முழு சுய சுதந்திர அதிகாரம் வேண்டும் என்று கோரி பெரும்பான்மை சிங்கள மக்களிற்கெதிராக இரத்தம் சிந்தி போராடினர்.
எண்பதுகளின் நடுப்பகுதியில் இலங்கையினை ஆண்ட ஜே.ஆர். ஜெயவர்தன அவர்கள் தமிழ் விடுதலைப் போராளிகளின் செயற்பாடுகளின் மீது சினம் கொண்டு அவர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியிடம் உதவி கோரப்பட்டது. அதன் அடிப்படையில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கை அரசானது தமிழர்களால் ஆளப்பட்ட வட- கிழக்கு பிரதேசங்களிற்கு பிரத்தியேக அரசியல் அமைப்பான 13ம் திருத்தச் சட்டத்தை 1987ம் ஆண்டு நிறைவேற்றியது.
இச்சட்டமூலமானது எழுத்து வடிவிலேனும் தமிழ் பகுதிகளில் அமுல்படுத்தப்படவில்லை. ஆயினும் தற்பொழுது தமிழர்களின் சுயாட்சி அதிகார தொடர்பான கோரிக்கையில் இலங்கை அரசு இரட்டை நிலையினைப் பின்பற்றுவதற்கு துணை புரிகின்றது.
80ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் தலையீட்டின் மூலமாக விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் ஆளப்பட்ட பரந்த நிலபரப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய இராணுவத்தின் செயற்பாட்டினால் அதிருப்தியுற்ற இலங்கை அரசு இந்திய இராணுவத்தை வெளியேற்றியது. இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளிடையே இரண்டு ஆண்டுகளுக்கு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாயினும் அதன் பின்னர் ஏற்ப்பட்ட போரின் பொழுது இரு தரப்பினரும் வெற்றி தோல்விகளை சந்தித்த பொழுதிலும் 2009ம் ஆண்டு பிரபாகரனின் இறப்புடன் போர் முடிவுற்றது.
இதற்கிடைப்பட்ட காலப்பகுதியில் 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்து முகமாக பாராளுமன்ற குழுக்கள் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் என்பன உருவாக்கப்பட்டு வன்னிப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையில் 13 பிளஸ் வட கிழக்கு பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என போர் வெற்றி கொண்டாட்டத்தின் பொழுது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்தார். ஆயினும் மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தங்களுடைய வாக்குறுதியினை நிறைவேற்றத் தவறியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரை 18 சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள போதிலும் அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது பாராளுமன்ற தெரிவிக்குழு உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆயினும் முதலில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட பின்னர் பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அங்கம் வகிக்கலாம் என அறிவித்துள்ளது. இல்லையேல் சிங்கள ஆதிக்க அரசியல் கட்சிகள் சுயாட்சி கொண்ட தமிழர்களிற்கான மாகாணசபையினை வழங்கத் தவறிவிடும் என்பதனாலாகும்.
ஆதிகார பரவலாக்கள் செயற்பாட்டின் மூலமாக மீண்டுமொருமுறை விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தின் தண்டுவடத்தினை உறுதியாக்க முயல்கின்றனர் என்னும் அச்சத்தில் இலங்கையினுள் 13ம் திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக அழிக்கப்பட வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். மேலும் இச்சட்டமூலம் மற்றுமோர் பிரிவினைக்கு வழிகோலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் இலங்கையின் மூத்த சகோதரனாக கருதப்படுகின்ற இந்தியா அதிகார பரவலாக்கல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கியது.
மேலும் தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் செயன் முறையானது மீண்டும் ஒருமுறை விடுதலை போராட்டத்திறகு வழிவகுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை 12வது இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்த பொழுது தெரிவித்தார்.
இலங்கையானது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதானது அதிகார பகிர்விலும் தாக்கம் செலுத்தும் எனும் அச்சம் இந்தியாவிற்குள்ளது. இந்நிலை இலங்கைக்கு ஆபத்தானதாகவும் அமையலாம். இப்புதிய தொடர்புகள் மீண்டும் ஓரு முறை புலிக்குட்டிகள் புலிகளாக உருவாகலாம்.
Geen opmerkingen:
Een reactie posten