[ நக்கீரன் ]
இந்தக் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் கொலை நடந்த காலகட்டத்தில் இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த சுப்பிர மணியசாமிதான் காரணம் என்றும் தொடர்ந்து எல்லா மேடைகளிலும் முழங்கி வருகிறார் சுப்பிரமணியசாமியோடு இருந்த திருச்சி வேலுச்சாமி.
தற்போது, ‘"ராஜிவ் காந்தி படுகொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்'’என்ற நூலை எழுதி அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த 23-11-2012 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு சென்னை தியாகராய நகரிலுள்ள சர்.பிட்டி தியாகராய கலையரங்கத்தில் அரங்கேறியது. ஆபிரஹாம் செல்வக்குமார் வரவேற்க... புலவர் புலமைப்பித்தன் தலைமையுரை யாற்ற... பழ.நெடுமாறன் நூலை வெளியிட, 90 வயதான ஈழத்துகாந்தி டேவிட் ஐயா மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பெற்றுக்கொண்டார்கள். வாழ்த்துரை வழங்க "அவர் பெயரைப் போட்டால் நான் வரமாட்டேன்' என்ற இருவருக்கு மான போட்டியில் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவும், எக்ஸ் எம்.எம்.ஏ. ஹெச்.ராஜாவும் ஆப்சென்ட். ஓவியர் புகழேந்தி, இயக்குனர் புகழேந்தி, டி.எஸ்.எஸ். மணி, வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். நிகழ்ச்சியை தனது கணீர் குரலால் தொகுத்து வழங்கினார் வெங்கடபிரகாஷ்.
தலைமையுரையாற்றிய புலவர் புலமைப்பித்தனோ, "" "தூக்குக் கயிற்றில் நிஜம்' என்ற நூலை எழுதிய திருச்சி வேலுச்சாமியை நல்ல அரசியல்வாதியாகவும் பார்க்கிறேன்; நண்பனாகவும் பார்க்கிறேன். ஒரு உயிருக்கு பல லட்சம் தமிழர்களை கொன்று தண்டித்திருக்கிறார்கள். சந்திரா சாமியும் சுப்பிரமணியசாமியும் செய்த சதியில் இப்படி கொல்லப்பட்ட அப்பாவி மக்களை கொன்ற வர்களுக்கு என்ன தண்டனை? இப்போதுகூட கொத்துக்குண்டு களின் சப்தம்தான் இல்லையே தவிர மன்மோகன்சிங்கின் மவுன யுத்தம் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி ஒரு திறனாய்வு புத்தகத்தை எழுதுவேன்''’என்று எல்லோரையும் முறுக்கேற வைத்தார் புலமைப்பித்தன்.
நூலை வெளியிட்டுவிட்டு பேசிய பழ.நெடுமாறன், ""ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள். கொலை விசாரணை நாடகம்போல் நடத்தப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயனின் நாடகம். கொலைக்குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் 26 பேரில் 13 பேர் ஈழத் தமிழர்கள். மீதி 13 பேர் தமிழக தமிழர்கள். இப்படி சரி சமமாகவா சதித்திட்டம் தீட்டுவார்கள்? அதுவும், உலக வரலாற்றிலேயே ஒரு கொலைக்கு 26 பேருக்கு தூக்குத் தண்டனை கொடுத்தது இதுதான் முதல் முறை. நல்லவேளை உச்சநீதிமன்றத்துக்குப் போயிருக்கா விட்டால் அந்த 26 பேருக்கும் தூக்கு கொடுக்கப்பட்டு புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.
மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி கொலை விசாரணையெல்லாம் பகிரங்கமாக நடந்தது. பக்கம் பக்கமாய் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால், ராஜிவ்காந்தி கொலை வழக்கு மட்டும் ரகசியமாக நடந்தது. எந்த பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. 26 பேருக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குள் செல்லும்போது சோதிக்கப்பட்டே அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஹிட்லர் ஆட்சியில்கூட அப்படி நடந்ததில்லை.
தடா கைதியாக என்னை விசாரித்தபோது, "இளைஞர்களை கூட்டி குண்டு வைக்கச் சொல்லி திட்டம் தீட்டினார்' என்று அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். ஆனால், அதற்கு முந்தைய நாளே வேறொரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் இருந்தேன். இதை அறிந்த நீதிபதி சித்திக் என்னை தடா வழக்கிலிருந்து ஐந்தே நாட்களிலேயே விடுவித்தார். இப்படி யாருக்கும் நடந்ததில்லை. இதை கவனித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் நீதிபதி சித்திக்குக்கு உயர் பதவி கொடுப்பதுபோல் அவரை மாற்றி நவநீதகிருஷ்ணனை நீதிபதியாக நியமிக்க ஏற்பாடு செய்தார். அவர் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார். அந்தத் தீர்ப்பை எழுதியது சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன். அதை வாசித்தார் நீதிபதி அவ்வளவுதான். இது ஒரு நீதிமன்ற படுகொலை என்று உரக்கக் கூறியது மிகப் பிரபலமான மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் ஆர்கனைசேஸன். இது தமிழர்களுக்கு விடப்பட்ட சவால். ஈழம்... ஈழம் என்று யார் பேசினாலும் இதுதான் கதி என்ற சவால். சுப்பிரமணியசாமிதான் சதிகாரர் என்பதை அம்பலப்படுத்தியுள்ள வேலுச்சாமியின் உயிருக்கே ஆபத்து வரலாம்'' என்றார்..
நடிகர் ராஜ்கிரணோ, ""தீவிரவாதத்துக்கும் உரிமைவாதத்துக் கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் மண்ணுக்கான உரிமைக்காக போராடியவர்கள் என்பதை உணர்த்தும் இந்த நூலை மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். அதுமட்டுமல்ல... ராஜிவ் கொலை வழக்கு சதியில் இருப்பது யார் என்ற உண்மையை இந்தியர்களுக்குத் தெரிவிக்க இந்த நூலை இந்தியிலும்; உலகத்துக்கே அறிவிக்க ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும்''’’ என்றார் உணர்ச்சி பொங்க.
வழக்கறிஞர் புகழேந்தி, ""ஒரு கொலையை நான்தான் செய்தேன் என்று யாராவது எழுதிக் கொடுத்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாலும், உண்மையான குற்றவாளிதானா என்று அவரை விசாரணை செய்த பிறகுதான் கைது செய்வார்கள். ஆனால், தடா என்பது அப்படியல்ல. நான் இல்லை என்று மறுத்தாலும் கையெழுத்துப்போட மறுத்தாலும்கூட போலீஸ் சொன் னால் அந்த நபரை குற்றவாளியாக்க முடியும். இப்படி பலரையும் துன் புறுத்தி கையெழுத்து வாங்கித்தான் தடாவில் கைது செய்தார்கள். சி.பி.ஐ.-யை பொறுத்தவரை ஆட்சியாளர்களின் கைக்கூலி என்றுதான் சொல்வேன்'' என்று குற்றம்சாட்டினார்.
ஓவியர் புகழேந்தியோ, ""உலகம் முழுக்க விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடைசெய்ய இந்த கொலை யைத்தான் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், ராஜீவ்வை கொன்றது புலிகள் அல்ல என்று உணர்த்துகிறது இந்த நூல். யாரையெல்லாம் தலைவர் என்று வாக்களித்திருக்கிறோமோ அவர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கிறது. துப்பறியும் நாவலைப் போல் விறுவிறுப்பாக இருக்கிறது. மறைக்கப்பட்ட வரலாறுகளையும் திரிக்கப்பட்ட உண்மைகளையும் உரத்து சொல்கிறது''’ என்றார்.
இயக்குனர் புகழேந்தி, ""என்றைக்காவது அப்பாவி சிங்களர்களை விடுதலைப்புலிகள் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறதா? சிங்கள ராணு வம்தான் இலக்கு. இந்தக் கொலை யை பிரபாகரன் என்ற மேன்மையான உண்மையான உறுதியான போராளி செய்திருக்க வாய்ப்பே இல்லை. இதைத்தான் வேலுச்சாமி விரிவாக சொல்லியிருக்கிறார்''’என்கிறார்.
பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி, “""21 வருஷம் கழிச்சு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு. செய்வதையெல்லாம் செய்துவிட்டு தன்னை காப் பாத்திக்க அ.தி.மு.க.வை ஒரு பக்கமும் தி.மு.க.வை ஒரு பக்கமும் எப்படி அடித்திருக்கிறார் சு.சாமி என்பதையும் இந்த புத்தகம் விளக்குகிறது. அதுமட்டுமல்ல, இந்த புத்தகம் ராஜிவ் கொலையில் ஒரு சுற்றுச்சூழல் சாட்சி'' என்றார்.
8:34-க்கு ஏற்புரை வழங்க மைக் பிடித்த நூலாசிரியர் திருச்சி வேலுச்சாமியோ, “""இது ஒரு வரலாற்று ஆவணம். எனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம்தான். நான் உண்மையான காங்கிரஸ்காரன் என்று சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். அடிமைப் படுத்துகிறவர்களை எதிர்ப்பதுதான் காங்கிரஸின் கொள்கை. அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைத்தான் பிரபாகரனும் செயல்படுத்து கிறார். இந்தக் கொலையைப் பற்றிய உண்மைகளை இன்றுவரை அம்பலப்படுத்தும் என்னை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை? இது ஒரு மோசடி இல்லையா? உங்களுக்கு துப்பு இல்லை என்றால் சுப்பிரமணியசாமியையும் சந்திராசாமியையும் ஐந்து நிமிடம் என்னிடம் அனுப்புங்கள். நான் உண்மையைக் கக்க வைக்கிறேன்.
உலகம் உருண்டை என்று சொன்னவனை அடித்தே கொன்றார்கள். ஆனால், இப்போது உலகம் உருண்டை என்று ஏற்றுக்கொண்டுவிட்டோம். அதுபோல... இல்லை, இல்லை என்று சொல்லும் ஆயிரக்கணக்கான பேரில் நானும் ஒருவனாக இருக்க விரும்பவில்லை. உலகம் உருண்டை என்று சொல்லி செத்துப் போனானே அவனாக இருக்க விரும்புகிறேன். மு.வ., ஜப்பானுக்கு சென்றபோது கரும்பை கடித்து துப்பிக்கொண்டே போனாராம். ஜப்பான் சிறுவன், துப்பப்பட்ட அந்த கரும்பு சக்கைகளை எடுத்து குழந்தைகள் விளையாடும் அழகான கிலுகிலுப்பை ஒன்றை உருவாக்கினா னாம். அப்படித்தான் இந்த நூலை தொகுத்திருக் கிறார் தம்பி ஏகலைவன்''’என்று மெய் சிலிர்த்தார்.
இறுதியாக வாழ்த்துரை வழங்கிய சீமானோ, ""ராஜிவ்காந்தி இறந்த தினத்தை சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தினமாக அறிவித்திருக்கிறது அரசு. தேசப்பிதா காந்தியையோ, இந்திராகாந்தியையோ கொலை செய்த நாளில் ஏன் இதே போல் செய்யவில்லை? முஸ்லிம்களை தீவிரவாதி கள் என்று தவறாக சித்தரிப்பதுபோல, தமிழர் களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாக வும் சித்தரிக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். உலகம் முழுக்க தடைசெய்திருக்கிறார்கள். அந்தத் தடையை உடைக்கும் பேராயுதம்தான் இந்த புத்தகம். விடுதலைப் புலிகள்தான் அந்த மாபெரும் கொலையை செய்துவிட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவரவேண்டும்.
இந்தப் புத்தகம் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கக்கூடாதா? எப்போது பார்த்தாலும் விடுதலைப்புலிகள் என்றாலே டெரரிஸ்ட் என்கிறார் சுப்பிரமணியசாமி. உலக டெரரிஸ்ட் நீயே சுத்திக்கிட்டிருக்க. ஒன் மேன் ஆர்மி என்று சொல்வார்கள். ராஜீவ் கொலையில் உள்ள மர்மங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் திருச்சி வேலுச்சாமிதான் அந்த ஒன் மேன் ஆர்மி. கிறிஸ்துவர்கள் வீட்டில் இருக்கும் பைபிளைப் போல, முஸ்லிம்கள் வீட்டில் இருக் கும் குர்ரானைப் போல, இந்துக்கள் வைத்திருக்கும் பகவத்கீதை போல இந்த நூல் அனைத்து தமிழர்களின் வீட்டிலும் இருக்க வேண்டும்''’என்றார் ஆக்ரோஷமாக.
தொடர்புபட்ட செய்தி
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மக்கள் விடுதலை இயக்கமென உலகெங்கும் நிரூபிப்போம்: நடிகர் ராஜ்கிரண்
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மக்கள் விடுதலை இயக்கமென உலகெங்கும் நிரூபிப்போம்: நடிகர் ராஜ்கிரண்
http://news.lankasri.com/show-RUmqzBRcNUko2.html
Geen opmerkingen:
Een reactie posten