வன்னியில் இறுதிப் போரின்போது ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஒளிப்படத்துடன் வெளியிட்ட தேர்தல் விளம்பரத்தை இந்தியாவின் காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டுள்ளது.
குஜராத் தேர்தல் பரப்புரைக்காக, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட விளம்பரத்தில், வன்னியில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் படம் போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், அந்தப்படம் சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட குழந்தையின் படம் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், இந்த தேர்தல் விளம்பரத்தை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டுள்ளது.
இணையத்தளங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் போன்ற அத்தனை ஊடகங்களில் இருந்தும் இந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை காங்கிரஸ் கட்சித் தலைமை நீக்கியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten