தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 januari 2013

மலேசியாவை அவமதிப்பு செய்த இலங்கை உயர்ஸ்தானிகருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !!


மலேசியாவை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்காக இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகர் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தி கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது
நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் உயர்ஸ்தானிகரத்துக்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த டிசம்பர் 27 ஆம் திகதியன்று உதவி உயர்ஸ்தானிகர் சுனில் விக்கிரமசிங்க என்பவர், ஆர்ப்பாட்டக்காரர்களை உயர்ஸ்தானிகரக பூமியில் இருந்து விரட்டியதுடன் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சுமத்தினர்.
மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தில் பணியாற்றும் சில இலங்கைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை தமிழ் முற்போக்கு குழு கவனத்துக்கு கொண்டு வந்தபோதே உதவி உயர்ஸ்தானிகர் மலேசியாவை அவமதிப்பு செய்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இதற்காக உதவி உயர்ஸ்தானிகர் மன்னிப்புக்கோர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர்ஸ்தானிகரத்துக்கு உள்ளே பிரவேசிக்கவிடாது மலேசிய பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈ:டுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் மாணிக்கவாசமும் அங்கு சென்றிருந்தார்.
அத்துடன் மலேசியாவை அவமதிப்பு செய்தமைக்காக இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகர் இரண்டு வாரங்களுக்குள் தமது மன்னிப்பை கோரவேண்டும் என்று அவர் இலங்கை உயர்ஸ்தானிகரக அதிகாரிகளிடம் காலக்கெடு விதித்ததாக மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten