இலங்கையின் தேசிய நிகழ்வுகளில் இசைப்பதற்காக மீண்டும் எழுதப்பட்ட சிங்கள, தமிழ் வசனங்களுடனான தேசிய கீதத்தை தேசிய நல்லிணக்க அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்த புதிய தேசியகீதம் எதிர்வரும் 4ம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் இசைக்கப்படவுள்ளது.
குறித்த அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக்குழு இந்த தேசியகீதத்தை ஜனாதிபதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோரிடம் கையளித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் இணைந்த தேசியகீதம் ஒன்றை அறிமுகப்படுத்த தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நல்லிணக்க அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten