தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 januari 2013

அவுஸ்திரேலிய குழுவிடம் பா.உ.சிறிதரன் ஒருமணிநேரம் பேச்சு !!


வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள சமகால நிலமைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவுஸ்திரேலிய நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் பிரதி தலைவர் தலமையிலான குழுவினரிடம் எடுத்துரைத்துள்ளார்.
இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த மேற்படிக் குழுவினர் பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட அலுவலகமான “அறிவகம்”  இல் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசியிருந்தனர்.
இதன்போது வடக்கில் யுத்தத்தின் பின்னரும் இராணுவ நெருக்குவாரங்கள் தொடர்கின்ற நிலமை, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும், பல்கலைக்கழக மாணவர்களை புனர்வாழ்வுக்குட்படுத்தியமை போன்றன தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரின் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை மற்றும், அவதூறு குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஆதாரங்களை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியதுடன், அது தொடர்பில் நடந்தவற்றையும் கூறியிருந்தார்.
இதேபோல் கடல் கடந்து தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கான காரணம் இங்கு நின்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியாமையே என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்,
யுத்தம் நிறைவடைந்து 3வருடங்கள் கடந்துள்ளபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான எந்த சமிக்ஞையும் காண்பிக்கப்படவில்லை எனவும் மாறாக தமிழ் இளைஞர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்களும், புனர்வாழ்வுக்கு அனுப்பும் சம்பவங்களுமே இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.
இதனோடு வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் தொகைக்கும் அதிகமாகவே படையினர் நிலைகொண் டிருப்பதையும் தரவுகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தியதுடன், யுத்தத்திற்கு உதவிய அவுஸ்திரேலியா உட்பட சர்வதேச நாடுகள் தமிழர்களுக்கு சுதந்திரமா னதும், கௌரவமானதுமான தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்கவும் இதய சுத்தியுடன் செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த குழுவினர் இந்த விடயம் குறித்து தாம் கவனத்தில் எடுப்பதாகவும் தாம் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten