தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 januari 2013

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை எதிர்கொள்ள தயார்! இலங்கை அதிரடி அறிவிப்பு


இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என இலங்கை அதிரடியாக அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், யுத்த விடயம் குறித்து இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் உரிமை அமெரிக்காவிற்கு காணப்படுகின்றது, அதேபோன்று அதற்கு பதிலளிக்கும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten