மற்றவர்களை கவரும் விதமான உடை, குட்டை பாவாடை மற்றும் ஹை ஹீல்ஸ் போடும் பெண்களை தான் அதிகம் கற்பழிக்கின்றனர் என இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் பெண்கள் அணியும் உடை தான் என இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்டு கிரஹாம் கூறியுள்ளார்.
இவர் இங்கிலாந்தின் டோரி கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் கூறுகையில், கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டும், ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டும் இரவு நேரத்தில் மது அருந்துவது ஆபத்தானது. அதை அவர்கள் குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் கற்பழிப்பு போன்றவை நடக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார்.
ரிச்சர்டின் இந்த பேச்சுக்கு கற்பழிப்புக்கு எதிரான அமைப்பை சேர்ந்த ஜோ உட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு நம்பை 100 ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு சென்று விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten