2011 ம் ஆண்டு திரு.விக்னேஸ்வரன் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்வியில் குறிப்பிட்ட சில விடையங்களை நாம் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறோம்.
*பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியவேளை சோல்பெரி அரசியலமைப்புச் சட்டத்தை நிறுவினார்கள். இதனூடாக இலங்கையில் வாழும் தமிழர்கள், சம அந்தஸ்தோடு இருக்க கூடிய வழிமுறை உருவாகியது. ஆனால் 1972ம் ஆண்டு சோல் பெரி அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்ககளைக் கொண்டுவந்தது இலங்கை அரசு. இதனூடாகவே பெளத்தம் மேலோங்கவும் , தமிழர்களை தாம் தாழ்த்தப்பட்டதையும் உணர்ந்தார்கள். அன்று திருத்தப்பட்ட அச் சட்டத்தை நான் ஏற்க்கவில்லை என்று திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை அவர் கடைப்பிடிப்பாரா ?
*இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழரே... அவர்கள் சிங்களவர்கள் இலங்கைக்கு வரமுன்னரே இலங்கையில் வசித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார் திரு.விக்னேஸ்வரன் அவர்கள். அதே நிலைப்பாட்டில் தான் அவர் தொடர்ந்தும் இருப்பார ?
*மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். அதே நிலைப்பாட்டில் தான் அவர் இன்னமும் இருக்கிறாரா ?
இவை அனைத்தும் தமிழர்கள் மத்தியில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளாக உள்ளது. இதனை அவர் முதலில் தெளிவுபடுத்துவது நல்லது.
Geen opmerkingen:
Een reactie posten