ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற அமைச்சருக்கு போத்தலடி !
25 July, 2013 by admin
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமைச்சர் ஜீவன் குமாரதுங்க சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். அவர் அங்கே சென்று காரில் இருந்து இறங்கிய மறுகணமே அவர் மீது போத்தல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனே அவர் மீண்டும் காருக்குள் ஏற்றப்பட்டார். அவரைப் பொலிசார் பாதுகாப்பாக அவ்விடத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டார்கள். ஆக மொத்தத்தில் அமைச்சர் எஸ்கேப் அவ்வளவுதான் !
சிங்களவர்களிடமும் நரிப் புத்தியைக் காட்டும் மகிந்தர் !
25 July, 2013 by admin
இதுபோல பிரித்து ஆளும் பிரித்தானியர்களின் தந்திரத்தை கரைத்துக் குடித்துள்ள மகிந்தர், தமிழர்களிடம் காட்டிய அதே தந்திரத்தை சிங்களவர்களிடமும் காட்ட தயங்கவில்லை. இலங்கையில் உள்ள எதிர்கட்சியானா ஐக்கிய தேசிய கட்சியின் பல பிரமுகர்களை தன்வசம் கவர்ந்த மகிந்தர் அக் கட்சியை செல்லாக் காசு ஆக்கிவிட்டார். இன்றைய நிலையில் இலங்கையில் ஒரு பலமான எதிர்கட்சியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கிறது. இன் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து மற்றுமொரு பெரிய பிரபலம் மகிந்தர் பக்கம் தாவியுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, தயஸ்ரீ ஜயசேகர தான். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு முதுகெலும்பாக இருந்த தயஸ்ரீ , தற்போது மகிந்தர் போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டிக்கொண்டு கட்சி விட்டு கட்சி தாவியுள்ளார். இச் செய்தியானது ரணில் விக்கிரமசிங்கவின் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக உள்ளது.
பலத்தை இழந்து பெயரையும் புகழையும் இழந்து நிற்கும் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியை இனி தூக்கி நிறுத்த முடியாத முடவன் ஆனார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்காமல் அவர் தொடர்ந்து இருந்துவருகிறார். ஐக்கிய தேசிய கட்சியில் பல இளையவர்கள், மற்றும் அக் கட்சியை செவ்வனவே நடத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இவர் இடம் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆக மொத்தத்தில் கட்சி பாதாளத்தில் விழுந்தாலும் பரவாயில்லை, நான் தலைவராக இருக்கவேண்டும் என்ற பேராசையால், இலங்கையில் உள்ள எதிர்கட்சியை ஒரு செல்லாக் காசாக மாற்றியுள்ளா ரணில். மகிந்தரின் கரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பலமடைந்து வருகின்றது என்பதே உண்மை நிலையாகும்.
Geen opmerkingen:
Een reactie posten