தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 juli 2013

மகிந்தரோடு நேரடியாக மோதியுள்ள பிரிடிஷ் எம்.பி !

ரஷ்ய பெண் ஒருவரோடு இலங்கைக்கு விடுமுறைக்குச் சென்ற ககரூம் ஷகிக் என்னும் பிரித்தானியப் பிரஜை தங்காலையில் வைத்துக் கொலைசெய்யப்படார். இக்கொலையில் தங்காலை பிரதேச சபைத் தலைவர் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் மகிந்தரின் நெருங்கிய நண்பர் என்ற காரணத்தால் கொலை நடந்து பல மாதங்கள் ஆனாலும் விசாரணைகள் எதுவும் துரிதமாக நடைபெறவில்லை. இன் நிலையில் சுமார் 18 மாதங்கள் கழித்தே டி.என்.ஏ பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. ககரூம் ஷகிக்கின் தொகுதி எம்.பி இலங்கை சென்றிருந்தார். அவர் இலங்கையில் பல அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியிருந்தார். இருப்பினும் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இதேவேளை காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பாக ஆராய பிரித்தானிய எம்.பீக்கள் சிலர் கடந்தவாரம் இலங்கை சென்றுள்ளார்கள். அவர்களில் சயமன் டங்கஸ்சும் சென்றிருந்தார். அவர் மகிந்தரை எதேட்சையாக சந்தித்தவேளை , கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்காலை கொலை தொடர்பாக அவர் பேச ஆரம்பித்ததும் , மகிந்தர் காரசாரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காமன் வெலத் நாடுகளில் , இலங்கை அங்கத்துவம் வகிக்கவேண்டும் என்றால் அது சில நடைமுறைகளைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று பிரித்தானிய எம்.பி சயமன் டங்கஸ் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் என்று பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

தான் மகிந்தரிடம் சில கேள்விகளை நேரடியாகக் கேட்டேன் என்று சயமன் மேலும் தெரிவித்துள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten