தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 juli 2013

பழைய முறுகண்டிப் பிள்ளையாரைப் புரட்டிய இலங்கை மின்சராசபை வாகனம் !



அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழையமுறுகண்டி பகுதியில் நேற்று முந்தினம் அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். வீதியின் அருகில் இருந்த பழையமுறுகண்டி பிள்ளையார் கோயிலும் முற்றாக சேதமடைந்தது என மேலும் அறியப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

ஏ- 9 வீதியில் வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி அருகில் இருந்த கோயிலை இடித்து தள்ளியுள்ளது. இதனால் கோயில் முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதன்போது வாகனத்தின் உதவியாளர் காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இக் கோயில் உடைந்துள்ளதால் அங்கே புத்தகோவில் ஒன்றை நிர்மாணிக்கலாம் என இராணுவத்தினர் நினைப்பார்களே ! அது சரி குறிப்பிட்ட சிங்கள ஓட்டுனர் தற்செயலாகத் தான் இக் கோவிலை உடைத்தாரா ? பிள்ளையாருக்கே வெளிச்சம் !


Geen opmerkingen:

Een reactie posten