சிறு தவறுக்காக இந்தியாவை சேர்ந்த ஓட்டுனரை, துபாய் அரபி ஒருவர் நடுரோட்டில் வைத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரபி ஒருவரின் காரை, இந்திய ஓட்டுனரின் வான் ஒன்று லேசாக உரசியது. இதனால் கோபம் கொண்ட அரபி நடுரோட்டில் இந்திய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியரைத் தாக்கிய அரபி மீது துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த துபாய் காவல்துறை அதிகாரி காமிஸ், ஐக்கிய அரபு அமீரகச் சட்டப்படி சகமனிதனைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட அரபு அலுவலரைக் தேடிக்கண்டுபிடித்து விசாரித்தபோது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், தனது செயலுக்காக வருத்தமும் தெரிவித்தார். எனினும் வெளிநாட்டு ஊழியரைத் தாக்குவது சட்டப்படி குற்றம் என்பதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் தனிநபரின் அனுமதியின்றி அவர்களைப் படம்பிடிப்பதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் உரிமைமீறல் என்ற வகையில் இணையத்தில் பரப்பிய நபர்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten