தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 juli 2013

வடக்குச் சாலையை எதிர்த்து சிங்களவர் பாரிய ஆர்பாட்டம் நடத்தியுள்ளார்கள் !


ராகம ரயில் நிலையத்தில் இருந்து "நோதேன் எக்ஸ்பிரஸ் வே" என்னும் வடக்கு அதிவேகச் சாலை போடப்படவுள்ளது. இது வடக்கு வரை செல்லுமா என்பது ஒரு புறம் இருக்க , இந்த அதிவேக ரயில் சாலையை தாம் அனுமதிக்க முடியாது என்றும், ரயில் சாலை என்ற போர்வையில் அரசாங்கம் தமது காணிகளைச் சூறையாடவுள்ளதாகவும் சிங்களவர்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள். இதனால் அவர்கள் ராகம ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, பாரிய ஆர்ப்பாட்டத்தை நேற்று(23) நடத்தியுள்ளார்கள். டயர்களைப் போட்டு நெருப்பு மூட்டியும், சாலை மறியலில் ஈடுபட்டும் இவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

இந்த ஆர்பாட்டத்தை பின் நின்று தூண்டி விட்டது பொதுபலசேனாவாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.



Geen opmerkingen:

Een reactie posten