நேற்று நடைபெற்ற " DOUBLE-A-FESTIVAL 2012 " எனும் இளையோர்களுக்கான இசை விழாவில் இவ் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.
“21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை" எனும் காணொளி ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி செல்வன் கோகுலன் தயாரிப்பில் யேர்மன் மொழியில் உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட யேர்மனிய மக்கள், தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை அறிந்து கண்ணீர் சிந்தியதோடு தமிழ் மக்களுக்கான ஆதரவையும் தெரிவித்தனர்.
அத்தோடு Aalen தமிழ் மக்கள் பிரதிநிதிகள், ஈழத்தமிழர்களின் தற்காலிக நிலைமைகளையும் சுட்டிக்காட்டியதோடு ஏனைய தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்கள்.
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி
Geen opmerkingen:
Een reactie posten