தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 juli 2012

இலங்கை யுத்த அகதிகளை விரைவில் திருப்பி அனுப்ப சுவீடன் தீர்மானம்



சுவீடனில் உள்ள இலங்கை யுத்த அகதிகளை இலங்கைக்கு விரைவில் திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்தத்தை காரணம் காட்டி சுவீடனில் அகதி அந்தஸ்த்து கோரிய இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் சுவீடனில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து சுவீடன் அரசாங்கம் திருப்தி கொண்டதன் பின்னர், இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


http://news.lankasri.com/show-RUmqyHSZOYkr4.html

Geen opmerkingen:

Een reactie posten