கடந்த கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஸாத் சாலி, இன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மூன்று முஸ்லிம் கட்சிகள் அரசுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இதனால் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை பெற முடியாது. ஏனென்றால் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு இம்முறையும் முதலமைச்சர் பதவி தரப்படும் என அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ குறித்த மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம் முதலமைச்சர் பதவியை இலகுவாக கைப்பற்றியிருக்கு முடியும். அவ்வாறில்லாவிடினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம்.
எனினும் அவற்றை மேற்கொள்ளாமல் அரசாங்கத்துடன் சங்கமித்துள்ளது. இதனாலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காகவே மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ளோம். நான் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன்" என்றார்.
அரசாங்கத்திற்கு எதிரான மனோ கணேசனுடன் தனது சமூகத்தின் நலனிற்காக அமைச்சர் தொண்டமானினால் இணைந்து போட்டியிட முடியும் என்றால், ஏன் அரசாங்கத்திலுள்ள குறித்த மூன்று முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்களினால் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காக போட்டியிட முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியிருக்கலாமே என ஊடகவியலாளரொருவர் வினவிய போது,
தாக்கப்பட்ட தம்புள்ளை பள்ளிவாசல் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக உள்ளது என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்த போது, சுமார் 2 வருடங்களுக்கு முன்னரே குறித்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்தவிடம் எவ்வாறு இது தொடர்பில் பேசுவது" என பதிலளித்தார்.
அத்துடன், இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அஸாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten