தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juli 2012

யாழ். திணைக்கள பெயர் பலகைகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ள பரிதாபம்!



யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகை அதிகரித்து வருகின்றது. எனினும் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவனங்களின் பெயர்பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே.
யாழ். குடாநாடானது வட கிழக்கு மாகணங்களில் அதிகமான தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாகும். ஆனால் இங்கு வைக்கப்படும் பெயர் பலகைகளே சிங்கள மொழியினை முதன்மையாக கொண்டு காணப்படுகின்றன
இதனை அவதானித்த சிலர் இனிவரும் காலங்களில் தனிச் சிங்கள மொழிதான் பயன்படுத்தப்படும் என்று கூறி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்தப் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழர்களுக்கு ஒரு செய்தியினை சொல்லுகின்றது.
அதாவது சிங்களத்திற்கு கீழ் தான் தமிழர்கள் என்ற செய்தியினை சொல்லுகிறதா? இவ்வாறு ஆதங்கப்படுகின்றனர் பிரதேச ஆர்வலர்கள்.

Geen opmerkingen:

Een reactie posten