தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juli 2012

கனடாவில் தமிழ் கடற்படை அதிகாரிக்கு தஞ்சக் கோரிக்கை நிராகரிப்பு: அதிர்ச்சியில் இலங்கை !



போர்க்குற்றம் புரிந்த கடற்படையில் பணியாற்றியவர் என்பதால், கொமடோர் குருபரன் என்ற கடற்படையின் முன்னாள் அதிகாரிக்கு கனேடிய நீதிமன்றம் அரசியல் தஞ்சம் அளிக்க மறுத்துள்ள விவகாரம் இலங்கை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்படையில் பணியாற்றிய கொமடோர் குருபரன், இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாதபோதும், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட கடற்படையில் பணியாற்றியவர் என்ற வகையில் அவருக்கு அரசியல்தஞ்சம் அளிக்க கனேடிய சமஸ்டி நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த மாதம் 13ஆம் திகதி இதுபற்றிய தீர்ப்பை கனேடிய சமஸ்டி நீதிமன்றம் வெளியிட்டது.
கொமடோர் குருபரன் போரின் இறுதிக் காலகட்டத்திலோ (2006-2009 வரை) அல்லது அதற்கு முன்னரோ போர் நடவடிக்கைப் பிரதேசத்தில் பணியாற்றியிருக்கவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து படகான ‘எஸ்எல்என்எஸ் ஜெயசாகர‘வில் 1980களில் இவர் ஒரு பதில் சப் லெப்டினன்டாக, பணியாற்றியிருந்தார். அவருடன் விடுதலைப் புலிகள் இணக்கப்பாட்டுக்கு வருவதைத் தடுப்பதற்காக, அவர் கொழும்புக்கு மாற்றப்பட்டார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதற்கிடையே, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட கடற்படையில் பணியாற்றியதைக் காரணம் காட்டி அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கையை கனடா நிராகரித்துள்ளது, “ஏற்றுக் கொள்ள முடியாத முடிவு” என்று இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கொடியின் கீழ் போரிட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் புலிகள் தற்போதும் கனடாவில் வசிக்கின்றனர் என்றும், 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னரும் அவர்களில் பலர் அங்கு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் இந்த முடிவுக்கு “இலங்கையின் கொலைக்களங்கள்” ஆவணப்படங்களும், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையுமே காரணம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களில் - 2009 ஜுனில் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற கொமடோர் குருபரன், 2009 ஓகஸ்ட் 4 ஆம் திகதி கனேடிய எல்லையை அடைத்திருந்தார். இவர் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியது பற்றி இலங்கை கடற்டை அறிந்திருக்கவில்லை.
அவரது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து, சமஸ்டி நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு அனைத்துலக ஊடகங்களில் வெளியான பின்னரே, இதுபற்றி கடற்படை அறிந்துள்ளது.
கனடாவின் இந்த முடிவு இலங்கை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten