தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juli 2012

சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? - விளக்கமளிக்குமாறு புலிகள் அமைப்பிற்கு அறிவித்தல் !!


ஒல்லாந்து,ஜேர்மனி ....போன்ற நாடுகள் ஆவணங்களை தமிழில் இருந்து அவர்கள் மொழிக்கு மாற்றித்தரும்படி கேட்பார்கள்,வெள்ளைக்காரனுக்கு(ஆங்கிலேயன்)பிறந்ததுகள் வட்டார மொழியில் இருந்தால் தங்கள் அப்பன் மொழியில் மாற்றித்தரட்டுமாம்!!இவங்களுக்கு இந்தியாவில் என்ன வேலை???இந்தியா சுதந்திர நாடென்றால் ஆங்கிலேயர் இன்னமும் வெளியேறவில்லையா??அப்போ எப்படி சுதந்திரநாடு??அடிமைகள் வல்லரசு பற்றி எப்படி வெட்கமின்றிப்பேசுகிறார்கள்???
சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றப் பதிவாளர் அனில்குமார் கவுசல் இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4-ம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கும், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தரவு ஒன்றினை ஏன் பிறப்பிக்கக்கூடாது என்பதற்குமான காரண விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
சட்டவிரோதமான இயக்கமாக அறிவிக்கக்கூடாது என்பதற்கான மறுப்போ அல்லது பதிலோ இருப்பின் 30 நாட்களுக்குள் டில்லியில் ஷெர்சா சாலையில் உள்ள உயர்நீதிமன்ற மருத்துவப்பிரிவு கட்டிடம், 3-வது தளத்தில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம்.
மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டில்லி உயர்நீதிமன்ற ஷஏ' கட்டிட தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20-ல் வரும் ஆகஸ்ட் மாதம்  27-ந் தேதி பிற்பகல் உரிய வக்கீல் மூலம் நடுவர் மன்றத்தில் ஆஜராகலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten