தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 juli 2012

மட்டக்களப்பில் “தமிழரசுக்கட்சியின் தலைமைக் குழுவுக்குப் பகிரங்கமான வேண்டுகோள்” என்ற தலைப்பில் சுவரொட்டிகள் !



மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனந்தேரியாதோரினால்  நேற்றிரவு 10.00 மணிக்குப் பின்னர்  “ தமிழரசுக்கட்சியின் தலைமைக்குழுவுக்குப் பகிரங்கமான வேண்டுகோள் “ என்ற தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகள் வீதிகளில் வீசப்பட்டிருந்தன.
மக்களுக்குக் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய வகையிலான தகவல்களை இச்சுவரொட்டிகள் கொண்டிருப்பதனால் அவை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்களால் நுட்பமாக முன்னெடுக்கப்படும் பிரசாரமாக இவை இருக்கலாம் என தமிழ் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
எனினும் இதிலுள்ள விடயங்களும் நியாயத்தன்மையையும் பொய்யானவை என்பதனை சிலர் மறுதலிக்க முடியாத நிலையில் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten