தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்ட பின் அவர்கள் வளர ஆம்பித்தால் தமிழரைத் தோற்கடித்த துட்டகைமுனு என்ற பெயரை வரவாற்றில் பெற முடியாது என நினைக்கும் நிர்வாகத் தலைவர்கள் உள்ளமையாகும். என சுதந்திரத்திற்கான அரங்கத்தின் சம ஏற்பாட்டாளர் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க்த்துக்கான ஆணைக்குழு பரிந்துரை மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் கண்டியில் இடம்பெற்ற மாநாட்டில் சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டார்.
விரும்பியோ விரும்பாமலோ அனைவருக்கும் ஒன்று சேர வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் முடிந்து ஒருவாரம் செல்வதற்கு முன்னர், குணதாச அமரசேகரவின் மொழியில் கூறின், பிரபாகரன் சடலத்தில் வெப்பம் தணிவதற்கு முன்னர் ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி கூட்டு அறிக்கை வெளியிட்டார்.
அதில் மூன்று விடயங்களை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணங்கினார்.
1.யுத்த இறுதி சமயத்தில் சர்வதேச மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துதல்.
2.யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களை 2009 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றல்.
3.யுத்தத்திற்கு வழிவகுத்த தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல்.
2.யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களை 2009 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றல்.
3.யுத்தத்திற்கு வழிவகுத்த தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல்.
இவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என வடக்கு மக்களும் சர்வதேசமும் அறியும். இது குறித்த சிங்கள மக்கள் மாத்திரமே அறியாதவர்களாக உள்ளனர்.
வடக்கில் இராணுவத்தினரைக் குறைந்து அரசியல் தீர்வு வழங்கி அரசியல் அதிகாரத்தை அங்குள்ள மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.
ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க்த்துக்கான ஆணைக் குழு பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் விரும்பியோ விரும்பாமலோ அரசு அதனை செய்தாக வேண்டும்.
அப்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அரசுக்கு வலியுறுத்த வேண்டியது சிவில் அமைப்புக்களின் பொறுப்பாகும். அரச, எதிர்க்கட்சிகள் இதில் பூரண ஒத்துழைப்பை கொண்டிருக்க வேண்டும்.
இந்நடவடிக்கையை மேற்கொள்ள 1994 ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு பூரண ஆதரவு கிடைத்தது. ஆனால் அப்போதும் சாத்தியப்படவில்லை.
2001 ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை மூலம் தேசிய பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அரச அதிகாரிகள் உயரதிகாரிகள் இனவாதிகளால் அது முறையடிக்கப்பட்டது.
தற்போது மற்றுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை நழுவ விடாமல் பிடித்துக் கொண்டு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவை சுதந்திரத்திற்கான அரங்கம் போன்ற சிவில் அமைப்புக்கள் வசம் உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் அக்கில விராஜ் காரியவசம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலாநிதி நிமால்கா பெணான்டோ, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இங்கு கருத்துfகளை வெளியிட்டனர். கலைஞர் ஜயதிலக பண்டாரவும் இதில் கலந்து கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten