1981ம் ஆண்டின் பின்னர் கடந்த 2012ம் ஆண்டில் சனத்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்களின் சனத்தொகை 3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழ் மக்கள் சனத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சியை முஸ்லிம் மக்களின் சனத்n;தாகை அதிகரிப்பு ஈடு செய்துள்ளது. சிங்கள மக்களின் சனத்தொகை தசம் ஆறு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் சிங்கள மக்களின் சனத்தொகை 74.6 வீதம் எனவும், தமிழ் மக்களின் சனத்தொகை 11.2 எனவும் முஸ்லிம் மக்களின் சனத்தொகை 9.3 எனவும், இந்திய தமிழ் மக்களின் சனத்தொகை 4 வீதம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், சனத்தொகைப் பரம்பல் பற்றிய சரியான புள்ளி விபரத் தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten