வவுனியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி கண்டி, பேராதனை வீதி 31/48 என்ற முகவரியில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கபப்ட்டுள்ளார்.
குறித்த முகவரியில் தற்காலிகமாக வசித்துவந்த எஸ்.திலகா என்ற 17 வயது பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் வவுனியா பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
இவருடைய தாய் இறந்துவிட்ட நிலையில் தந்தை கொழும்பில் பணிபுரிந்து வருகிறார்.
ஆகையால் பேராதனையில் தனது உறவினர்களுடன் குறித்த பெண் வசித்து வந்துள்ளார்.
தனது தற்கொலைக்கு எவரும் காரணம் இல்லை என்று குறித்த பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten