இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இது நாளில் சிறிமாபோதி பகுதியில் 134 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது, எந்தவொரு மனிதஉரிமை அமைப்புகளும் அதற்கு எதிராக பேசவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உகண்டா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கம்பாலாவில், கொமன்வெல்த் உள்ளூராட்சி மாநாட்டில் நேற்று நிகழ்த்திய உரையின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“தீவிரவாதத்தின் முதல் இலக்குகளில் ஒன்றாக உள்ளூராட்சி நிர்வாகமே இருந்தது.
தீவிரவாதத்துக்கு முதல் பலியானவர் யாழ்ப்பாண நகர முதல்வர் தான்.
போர் முடிவுக்கு வந்ததும், உள்ளூராட்சி நிர்வாகத்தை மீள இயங்கச் செய்வதற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten