யாழ் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 60 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தியதாக இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட 53 பேரிடம் இருந்து 18 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாவும், பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட 39 பேரிடம் இருந்து 22 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாவும், மார்ச் மாதத்தில் 29 கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 13 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாவும், ஏப்ரல் மாதம் 16 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாவும் அறவீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் தொடுகை மூலம் சட்ட விரோதமாக மின்சாரத்தைப் பெற்ற குற்றத்திற்காக தண்டப்பணம் செலுத்தியுள்ளனர் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
யாழில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாணின் விலை
யாழில் சில வெதுப்பகங்கள் மற்றும் பாண் விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்கக் கூடிய விலையில் பாண் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் பலரினால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
450 கிராம் நிறையுள்ள பாண் 58 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படல் வேண்டும் என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு நடை முறையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு இறாத்தல் பாண் எனக் கேட்கும்போது 50 சதம் பெறுமதியான சொப்பின் பாக்குக்குள் அதனை வைத்து நுகர்வோரிடம் 60 ரூபா பணம் பெறப்படுகின்றது.
இரண்டு இறாத்தல் பாண் கேட்கும்போது ஒரு ரூபா பெறுமதியான பாக்குக்குள் வைத்து இரண்டு இறாத்தல் பாண் கொடுத்துவிட்டு 120 ரூபா பணம் அறவிடப்படுகிறது.
இந்த வகையில் பாண் நுகர்வோர் ஒருவர் ஒரு இறாத்தல் பாணுக்கு ஒரு ரூபா ஐம்பது சதத்தையும், இரண்டு இறாத்தல் பாணுக்கு மூன்று ரூபாவையும் கூடுதலாகச் செலுத்த வேண்டி உள்ளது. சில வெதுப்பகங்களில் பாணின் நிறையும் 450 கிராமாக இல்லை. றோஸ் பாண் எனச் சொல்லப்படும் வாட்டிய பாண் கால் இறாத்தல் எனக் கூறி விற்கப்படுகின்றது.
ஆனால் நான்கு கால் இறாத்தல் பாணை சேர்த்து நிறைபோட்டுப் பார்த்தால் 450 கிராமாக அது இல்லை. பத்து ரூபாவுக்கும் பாண் தயாரித்து விற்பனையில் உள்ளது.
பாணின் பாவனை யாழ். மாவட்டத்தில் அதிகளவில் உள்ளது. உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அவசரம் கருதி பாணைப் பாவிப்பதில் அவர்கள் முன்னிலையில் காணப்படுகின்றனர்.
பாணின் விலை, நிறை, தரம் என்பவற்றில் சம்பந்தப்பட்ட அதி காரிகள் கவனம் செலுத்துவது டன் வெதுப்பகங்கள், விற்பனை நிலையங்களை அடிக்கடி திடீர் பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனப் பொது மக்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழில் மலசல குழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கைவிடப்பட்ட மலசல குழியில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுகள் மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க என்.பண்டாரா தெரிவித்துள்ளார்.
யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதகல் கிழக்கு ஜே 152 கிராம அலுவலர் பிரிவிலிருந்து குறித்த எலும்புக்கூடு மீட்கப்பட்டது.
மாதகல் பகுதியில் உள்ள உதயதாரகை சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தூர்ந்துபோன நிலையில் காணப்பட்ட மலசல கூடக் குழியை துப்பரவு செய்யும் நடவடிக்கையை வீட்டு உரிமையாளாகள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே மண்டையோடு, வாயின் பற்கள் உள்ளடக்கிய தாடைப்பகுதி, காலின் தொடை எலும்பு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் இளவாலைப் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்;கு சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க என்.பண்டாரா தலைமையிலான குழுவினர் குறித்த குழியிலிருந்து எலும்புக்கூடொன்றை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி பி.ஜே.தம்பித்துரை சட்டவைத்திய அதிகாரியுடன் சென்று பார்வையிட்டதுடன் எலும்பு கூட்டை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்தோடு கொழும்பிற்கு அனுப்பி வைத்து இதன் பரபணு பரிசோதனை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten