கச்சத்தீவை அரசியல் காரணங்களுக்காக
இலங்கைக்குக் கொடுத்தோம்.
-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
‘ஆவணங்களின் அடிப்படையில் கச்சத்தீவை இலங்கைக்குக்
கொடுக்கவில்லை;அரசியல் காரணங்களுக்காகக் கொடுத்தோம்.’
-அது என்ன அரசியல் காரணம்?-இதோ,
1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது
வங்கதேசம் உருவானது.அதை விரும்பாத அமெரிக்கா,
இந்தியாவை அச்சுறுத்த ‘எண்டர்பிரைசஸ்’ என்ற அணு ஆயுதம்
தாங்கிய கப்பலை அனுப்பியது.கொல்கொத்தாவைத் தாக்குவது
அவர்களதுத் திட்டம்.
அந்தச் சமயத்தில் சோவியத் ரஷியா,நமக்கு ஆதரவாகக் களம்
இறங்கியதால்,அமெரிக்கா பின்வாங்கியது.அதன்பின் இந்துமாக்
கடலில் நின்று கொண்டோ அல்லது பறந்து கொண்டோ எந்த நாடும்
கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக்கூடாது என்று அய்க்கிய
நாடுகள் அவையில் உலக நாடுகள் தீர்மானம் நிறைவேற்றின.
இந்நிலையில்,இந்தியா தனது தற்காப்புக் குறித்து சிந்தித்துப்
பார்த்தது.இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி.அங்கே பாகிஸ்தானும்,
சீனாவும்.கிழக்கிலும்-மேற்க
ஆபத்து இல்லை.தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான்.
வங்கதேசப் போருக்குப்பின்,இலங்கையில் விமானதளம் அமைக்க
இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான்.அதைத் தடுக்க
அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி,இலங்கைப் பிரதமர்
சிறீமாவோ பண்டார நாயகாவிடம் பேசத் தொடங்கினார்.
கச்சத்தீவை எங்களுக்குத் தந்துவிட்டால்,தளம் அமைக்க
பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம் என்று பண்டார நாயகா
பேரம் பேசினார்.தமிழ் நாட்டைக் கலந்து ஆலோசிக்காமலும்,
தமிழகத்தின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படாமலும்
கச்சத்தீவை இலங்கைக்கு கையளித்து விட்டார் இந்திரா.
(அன்றைக்கு பாகிஸ்தானுக்கு பயந்து கச்சத்தீவை விட்டுக்
கொடுத்தார் இந்திரா.இன்றைக்கு அதே இலங்கையில் இந்தியாவின் பேரெதிரியான சீனா கால் பதித்து விட்டது கவனிக்கத் தக்கது)
-சைதை மா.அன்பரசன்
Geen opmerkingen:
Een reactie posten