13 ஏப்ரல் அன்று நடந்த தாக்குதலில் அங்கு நின்ற போராளிகளோடு நின்றிருந்த ஊடகப் படப்பிடிப்பானர் Laurent Van der Stockt 'அங்கு நடந்த தாக்குதலின் போது போராளிகளும் மக்களும் தொடர்ந்து இருமியதையும் வாந்தி எடுத்ததையும் அதனைத் தொடர்ந்து அவர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டதையும் கண்டேன். ஆனாலும் அவர்கள் அந்தத் தாக்குதலுக்குள்ளான காற்றறைச் சுவாசித்ததால் தொடர்ந்தும் வாந்தி எடுத்து மயக்கமுறத் தொடங்கினார்கள்' எனக் கூறியுள்ளார். சிரியாவின் தலைநகரான டமாஸ் பகுதியசை; சுற்றி வர இந்த இரசாயணத் தாக்குதல் நடாத்தப்பட்ட ஆதாரங்களையும் அந்த இரசாயணப் பொருட்களையும் இந்த ஊடகவியலாளர்கள் திரட்டி உள்ளனர்.
Laurent Van der Stockt ஒளிப்திவு செய்த காணொளி ஒன்றில் போராளிகளும் அவர்களின் மருத்துவர்களும் அந்தத் தாக்குதலின் பின்னான அறிகுறிகளையும் அதன் விளைவுகளையும் விபரித்துள்ளனர். 'இந்தத் தாக்குலுக்குள்ளானவர்களுக்கு சுவாசத்தைத் தடை செய்வதோடு பலத்த தலையிடி, வாந்தி மற்றும் கண்ணிமைகள் சொருகுதல், பார்வை இழத்தல் என்பன நேரும். நாம் இதற்கான மருத்துவத்தைச் செய்யா விட்டால் சிலமணி நேரங்களில் அவர்கள் அப்படியே இறந்து போவார்கள்' என டமாசின் வாயிலிலுள்ள கூத்தா பிராந்தியத்தில் சேவையிலீடுபட்டுள்ள Al-Fateh de Kaffer Battna வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரித்துள்ளார்.
அங்கு தாக்குதலுக்குள்ளானவர்களிடம் இரத்தம் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த நச்சு இரசாயண வாயு மிகவும் கவனமாக, மிக வேகமாகப் பரவி சர்வதேச சமூகத்தால் கண்டுபிடிக்கப்படாமலிருக்கும் வகையில் கலக்கப்பட்டுள்ளதாக இரத்தத்தை ஆய்வு செய்த பிரான்சின் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் சிரிய அரசு அதை மறுத்து வந்தாலும் சிரிய அரசாங்கம் கண்ணீர்ப் புகையுடன் நச்சு இரசாயண வாயுவைக் கலந்து தக்குதல் செய்கின்றது என்றும் இதனால் இரசாயணத் தாக்குதலின் எச்சங்களை ஆய்வு செய்ய முடியாமல் சர்வதேசத்தின் கண்களைக் கட்டுகின்றது என்றும் பிரான்சின் இரசாயணத் தாக்குதல் ஆய்வுத் தொடர்பகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சிரியா மீது மேலும் அழுத்தத்தைப் பிரயோகித்து உடனடியாக இரசாயணத் தாக்குதலை நிறுத்தும்படி எச்சரித்துள்ளது.
ஊடகவியலாளர்களின் பலம் நாட்டின் தலைவிதியையே மாற்றக் கூடியது. இதனாலேயே சர்வதேச ஊடகங்களை அராஜகமாக வெளியேற்றிவிட்டே சிங்கள் இனவெறி அரசு தமிழ்மக்கள் மீதான தனது இன அழிப்பை நடாத்தியது. இங்கிலாந்தின் போர் மந்திரியாக இரண்டாம் உலகப்போரின் போது பதவி வகித்த வின்சன் சேர்ச்சில் அவர்கள. போரின் போது முதலில் பலியாவது 'உண்மை' என்று கூறியிருந்தார். அனால் இவர்கள் போன்ற ஊடகவியலாளர்கள் சிலர் அந்த 'உண்மை' பலியாகாமல் காப்பாற்றவும் செய்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten