தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

போலி ஆவணங்கள் தயாரித்து வந்த பெண் கொழும்பில் கைது - பல இடங்கள் சுற்றி வளைப்பு !


போலி ஆவணங்கள் மற்றும் அவற்றை தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட போலி இறப்பர் முத்திரைகள் என்பவற்றுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட மூன்று இடங்கள் சுற்றி வளைப்பு
போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட மூன்று இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
கண்டி கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆவணங்கள் தயாரிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த சுற்றி வளைப்பு தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
போலி அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், மரண சான்றிதழ், விவாகப்பதிவுப் பத்திரம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் போலியான முறையில் இந்த இடங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கண்டி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten