பழையதைப் பாதுகாப்பது அநாகரிகம் என்று நாம் கருதி அவற்றை குறைந்த விலைக்கு விற்று நாம் புதிய பொருள்களை வாங்குகிறோம்.
ஆனால் விற்கப்படுவது பழைய பொருள்கள் மட்டுமல்ல. அதனூடாக சொற்களையும் மொழியையும் பாரம்பரியத்தையும் விற்கின்றோம் என்பதை மறந்து விடுகிறோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினரின் முயற் சியால் வெளிவந்த “”யாழ்ப்பாண வாழ்வியல்” நூல் வெளியீட்டு விழா கைலாசபதி கலையரங்கில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் பல்கலைக்கழகப் பதில் துணை வேந்தர் பேராசிரியர் ச.சத்தியசீலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும்போது யாழ்ப்பாணத்தின் கலை, பண்பாடு போன்றவற்றை ஆவணப்படுத்த பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
அதனை இன்று வரலாற்றுத்துறை செய்து முடித்துள்ளது. ஆனாலும் இவ்வாறாக ஆவணப்படுத்தும் பொறுப்பு அனைத்து துறைகளுக்கும் உண்டு என்று அவர் மேலும் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten