[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 06:46.55 AM GMT ]
பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.
இவர்களிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் 22 தமிழர்கள், 8 சிங்களவர்கள், 6 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக பிரித்தானிய அதிகாரிகள் 72 பேரும் மேற்படி விசேட விமானத்தில் வந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten