நேற்றைய தினம், லண்டனில் இருந்து சுமார் 80 தமிழர்களை, பிரித்தானிய அரசு நாடுகடத்த முற்பட்டது. அவ்வேளை அங்கே சென்ற ACT NOW உறுப்பினர்கள் பஸ்ஸை விமானநிலையம் நோக்கிச் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பஸ் வேறுபாதையூடாகச் செல்லவேண்டி நேர்ந்துள்ளது. அந்தப் பாதையையும் தடுக்க முற்பட்ட ACT NOW உறுப்பினர்களைப் பொலிசார் கைதுசெய்து பின்னர் விடுவித்துள்ளனர். தமிழர்களை திருப்பி அனுப்பவேண்டாம் என ACT NOW அமைப்பு பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு, மறியலிலும் ஈடுபட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் பற்றாக்குறையால், இப்போராட்டம் செவ்வனவே நடைபெறவில்லை என அறியப்படுகிறது. அதிகளவு மக்கள் வந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், குறிப்பிட்ட பஸ்ஸை ஒரு இடத்தில் வைத்து முடக்கியிருக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten