ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர், பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனுக்கு எழுதிய கடிதத்தில், சூடான் வாக்கெடுப்பு மூலம் ஒரு நீண்டகால இரத்தக் களரியுடனான உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததுடன், தென் சூடான் என்ற புதிய நாட்டை உருவாக்கும் ஒரு நல்ல முடிவாக அமைந்தது.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் இந்தத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் அமைதியும் கிடைக்காது தொடர்ந்து துன்புறுகின்றனர்.
கொழும்பு ஆட்சியினால் வடகிழக்கில் தமிழர்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினையை ஒருபோதும் அரசியல் மூலம் தீர்க்க முடியாது. சூடானில் நடந்தது போன்று ஓர் பொது வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம், இலங்கையிலுள்ள சிங்களவர்களும், தமிழர்களும் பயன் பெறலாம் என தாம் நம்புவதாகக் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராஜாங்கத் துறையினரை சந்திக்கும் போது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு உதவும்படி கோரிக்கை விடுத்திருந்தோம்.
அமெரிக்க இராஜாங்கத் துறையினரை சந்திக்கும் போது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பைப் பற்றி முழுமையாக விளங்கப்படுத்தியிருந்தோம். இதனை இராஜாங்கத் துறையினர் மிகவும் உன்னிப்பாக கேட்டனர்.
பிரிட்டனையும் இந்தியாவையும் இந்த தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும்படி கோருவதையே தமது அடுத்த முயற்சியாக மேற்கொண்டுள்ளதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten