குறிப்பு : சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? என்று மாத்தையா என்னிடம் கேட்டான்.
விளக்கம் : புலிகள் இயக்கத்தை கட்டியவரில் ஒருவரே சிவரஞ்சித். பல்கலைக்கழக மாணவராக செயல்பட்ட இவரும், இவரின் குழுவும் பலரை புலிக்கு இணைத்தனர். 1985க்கு பிந்திய காலத்தில் புலியுடன் இக்குழு முரண்பட்ட நிலையில், புலியில் இருந்து விலகிய போதும் அரசியலில் ஈடுபட்டனர். இவருடன் இருந்த முக்கிய நபரை யாழ் கச்சேரியடியில் இராணுவம் சுட்டுக்கொன்ற நிலையிலும், இவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனியாக ஒரு சிறு இலக்கிய சஞ்சிகையை கொண்டு வந்து பின் நிறுத்தியவர். புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியபடி, முரண்பாட்டுடன் விலகியும் இருந்தார். ஆனால் புலிகளுக்கு தொடர்ந்து உதவி என்ற பெயரில், அதன் பினாமியாகவே இயங்கினார். இவர் நோர்வே வந்த பின்பும் சரி, பின் லண்டனில் புலியின் ஒளிபரப்பில் முக்கிய பணியை செய்த போதும் சரி, புலியின் பினாமியாக செயல்படுவதையே எப்போதும் தனது அரசியலாக கொண்டவர்.
என்னிடம் அவர் ஏன் தெல்லிப்பழை வருகின்றார் என்ற கேள்வியை எழுப்பிய போது, அவருக்கு வேறு இயக்கத் தொடர்பு என்ற புலிச் சந்தேகமே காரணமாகும். என்.எல்.எப்.ரியுடன் தொடர்பு உள்ளதா என்பதே கேள்வியின் சாரம். அன்று சிவரஞ்சித்தை புலிகள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்ற அச்சம், பல்கலைக்கழக மட்டத்தில் பொதுவாக இருந்தது. அதை அவரும் உறுதி செய்தார். கேசவன் தாக்கப்பட்ட போது, அவரை எங்கிருந்தோ பிடித்து வந்து, சிவரஞ்சித்தின் வீட்டின் முன்வைத்து தாக்கியதன் மூலம், அவரை மறைமுகமாக எச்சரித்தனர். புலிகளின் தலைமையுடன் முரண்பட்டபடி புலி அரசியலை கொண்டிருந்த இவர், சமகாலத்தில் இயக்கங்களில் இருந்து விலகியவர்களுடனும், முற்போக்கான இயக்கங்களுடனும் நெருக்கமாக தொடர்புகளை கொண்டிருந்தவர். புலிக்கு வெளியில் ஒரு சிறு சஞ்சிகையை கொண்டு வந்ததன் மூலம், புலிக்கு சவாலாக கருதப்பட்ட நிலையில், புலிகள் கடுமையான கண்காணிப்பை செய்தனர். பொதுவாக புலிகள் சுட்டுக் கொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால் எச்சரிக்கை மற்றும் மிரட்டும் வகையில், அவரின் வீட்டின் முன்பு நடத்திய தாக்குதல்கள் மூலம் புலிகள் அவரை அடிபணிய வைத்தனர். புலிப் பாசிசத்துக்கு அடங்கிப் போன இவர், பின்னால் நோர்வே வந்த பின்பு புலிப் பினாமியாக செயல்படுவதிலும் மீண்டும் புலியாக மாறுவதிலும் ஒரு கணம் கூட தயங்கி நிற்கவில்லை.
49.சுடும்படி கோர, உன்னைச் சுடுவதாயின் பகிரங்கமாவே சுடுவோம் என்றனர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 49)
46. விஜிதரன் போராட்டமும், அதை நடத்தியவர்கள் யார் என்றும் கேட்டனர்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 46)
35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)
25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)
19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)
15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)
13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)
08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)
04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)
Geen opmerkingen:
Een reactie posten